செயலி

செப்டம்பர் 16-30

 

 

 

ப்ளூவேல் (உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் விளையாட்டு)   
                       BLUE WHALE (Game of Death)
இந்த விளையாட்டு விளையாடுறவங்க பெரும்பாலும் குழந்தைகள். இப்போ வயது வந்தோரும் விளையாடத் தொடங்கிட்டாங்க…

இந்த விளையாட்டு இவர்களை அடிமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். மிகவும் ஆபத்தான விளையாட்டான இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

ப்ளூவேல் என்றால் என்ன?

50 நாள்களுக்கான  டாஸ்குகளைக் (செயல்திட்டங்கள்) உள்ளடக்கியது. இந்த விளையாட்டின் நிர்வாகி ஒருவர் தினந்தோறும் டாஸ்குகளைக் கொடுப்பார். அதைச் செய்துவிட்டு அவருக்கு புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். அது போல் தினமும் ஒவ்வொரு டாஸ்க்குகள் வழங்கப்படும்.
அவை என்ன மாதிரியான செயல்கள்?

இவர்கள் வழங்கும் டாஸ்க்குகள் மிகவும் ஆபத்தானவை.

உன் கையில பிளேடு வச்சி 3 தடவ கீறி அத எனக்கு Photo எடுத்து அனுப்பு..

கையில் திமிங்கலத்தை கத்தியால் வரைந்து அத எனக்கு Photo எடுத்து அனுப்பு..

அதிகாலை 4:20 க்கு எழுந்து உன் வீட்டு மொட்டை மாடிக்கு போய் ஏதாவது ஒரு பேய் படம் பார்த்து அத எனக்கு றிலீஷீtஷீ எடுத்து அனுப்பு..

நடுநிசியில் சுடுகாட்டுக்கு போவது உள்ளிட்ட பணிகள் போட்டியாளர்-களுக்கு வழங்கப்படும்
இதையெல்லாம் வெற்றிகரமாக செய்துமுடித்துவிட்டால் 50-ஆவது நாளன்று அந்த போட்டியாளரை தற்கொலை செய்து கொள்ள சவால் விடுவர்.

தற்கொலை செய்யவில்லை என்றால் அவனது தாயாரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக மிரட்டுவார்கள்.
இந்த விளையாட்டுக்கு அடிமை ஆன இளைஞர்கள் மன உளைச்சல் காரணமாக தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர்.

நீங்கள் கேட்கலாம் நான் ஏன் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்?

நம்ம பண்ணலனா அவனுக்கு என்ன தெரியவா போகுது என்று நாம் நினைக்கலாம்..
நான் பண்ணமாட்டேன்னு அவர்களிடம் சொல்லவும் முடியாது..

நீங்கள் ஒரு முறை இந்த விளையாட்டில் நுழைந்து விட்டால் உங்கள் செல்பேசியில் உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் கைக்கு சென்றுவிடும். நீங்கள் இதுவரை பார்த்தவை, Share  செய்தவை, message செய்தவை  மற்றும் உங்கள் தொடர்பு பட்டியல் முழுவதும் அவர்களிடம் போய்விடும்..

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்கள் மொபைல் உங்கள் கையில் இருக்கும். ஆனால் மொத்தத் தகவலும் அவர்களிடம் போய்விடும் அப்புறம்…

நா சொல்றத பண்ணலேனா நீ செய்த விசயங்களை உன் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு அனுப்பிடுவேன் என்று மிரட்டுவார்கள்.

உங்களுக்கு பயம் வரவேண்டும் என்பதற்காக கொஞ்ச தகவலை அனுப்பவும் செய்வார்கள்.
நாமும் அடுத்த விசயம் வெளிவந்துவிடக் கூடாது  என்று அவர்கள் சொல்வதை வேறு வழி இல்லாமல் செய்யத் தொடங்குவோம்.

ஏன் இதை விளையாடனும்…?!

ஏன் இது இவ்ளோ கொடூராமா இருக்குனு தெரிஞ்சும் விளையாடுறாங்க…?!

இதற்கு விடை ரொம்பச் சின்னது…

1.) தனிமையில் ரொம்ப ஏங்கிப் போய் இருப்போருக்கு இப்படியான ஒரு விளையாட்டைப் பார்த்ததும் அதன் மேல ஒரு விதமான ஈர்ப்பு வரும்..

2.)  ஆர்வக்கோளாறு..
சரி இதுல என்னதான் இருக்குனு பாத்துருவோம் என்று உள்ளே போய் உயிரை விட்டு விடுவார்கள்!

சரி இவர்கள் எல்லாரும் விரும்பி தான் இதையெல்லாம் செய்து தற்கொலை பண்ணிக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை…

அப்போ என்னதான் நடக்குது இங்க என்று பார்த்தால் அந்த ப்ளூவேல் உள்ளே போய் நீங்க Register செய்ததும் உங்க கணக்கை Hack செய்துவிடுவார்கள். அது உங்களின், Facebook, Gmail id மற்றும் உங்களின் செல்பேசி எண்ணையும் Hack பண்ணிருவாங்க…

பிறகு உங்கள் முகநூலில் சம்மந்தமே இல்லாமல் பதிவுகள் வரும்… உங்கள் கணக்கை அசிங்கப்படுத்துவாங்க..

அது மூலமா உங்களுக்கு உளவியல் தொல்லை கொடுப்பார்கள்.

நீங்கள் அதை செய்தே தீரனும் என்று அழுத்தம் தருவார்கள்.

உங்கள்  எண்ணுக்கு அழைப்பு கூட வரும்…

இவ்வளவு அழுத்தமா என்று நினைத்து நமக்கே நினைத்துப்பார்க்க பயமாக இருக்கும்போது ஒன்றுமே தெரியாத சிறுவர்கள் என்ன செய்வார்கள் இப்படித்தான் பலரின் உயிர் போய்விடும்.

-அரு.ராமநாதன்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *