காரைக்குடி அருகில் கானாடு காத்தான் என்னும் ஊரில் முத்தையா செட்டி-யாருக்கும் மீனாட்சி ஆச்சிக்கும் 30.09.1881 இல் பிறந்தார். ஆங்கிலமும் தமிழும் முறைப்படி பயின்று தேர்ந்தார். இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இதர நாடுகளுக்கும் தன் வணிகத்தை விரிவாக்கி அதன்மூலம் ஈட்டிய செல்வத்தை கோயில், குளம் என்று செலவிடாமல் கல்விச் சாலைகளை உருவாக்கினார்.
மீனாட்சிக் கல்லூரியும் – பல்லாயிரம் ஏழை எளியோரை பட்டதாரிகளாக்கிய அண்னாமலைப் பல்கலைக் கழகமும் இவர் கண்டவையே. தமிழிசை வளர்க்க தமிழிசைச் சங்கம் கண்டதோடு தமிழிசைக்காகவே அண்ணாமலை மன்றம் சென்னையில் அமைத்தார். இவர் புகழ் தமிழுள்ளளவும் மறையாது.
(பிறந்தநாள்: 29.09.1881)