குஜராத் கோப்புகள்

செப்டம்பர் 16-30

 

 

 

பி.சி. பாண்டே

பி.சி. பாண்டே குறித்து, காவல்துறையில் பணியிலிருக்கும் சிலர், அவர் மிகவும் துணிச்சலான ஒரு தீரர் என்றும், நன்கு பழகக்கூடிய அதிகாரி, தெளிவானவர் மற்றும் இனிமையானவர் என்றும் கூறும் அதே சமயத்தில், பலர் அவரை எதார்த்தத்தைப் பார்க்க மறுத்து மணலில் முகம்புதைத்து நிற்கும் ஒரு நெருப்புக் கோழி என்று அழைத்தார்கள். இவர் முதல்வர் மோடிக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதராக விளங்கியவர். மாநிலத்தில் நடைபெற்ற அத்தனை முக்கிய விஷயங்கலிலும் மோடியின் காதாகவும், அமித் ஷாவிற்கு எல்லாமுமாகவும் இருந்தவர். வெளிநாட்டில் உல்லாசமாக விடுமுறைக்காலத்தைக் கழித்தல், தன்னைப் பற்றி பீற்றிக் கொள்ளுதல், மாலை நேரங்களில் மனமகிழ் மன்றங்களில் அல்லது ஜிம்கானா கிளப்புகளில் குடி, கும்மாளத்துடன் நேரத்தைக் கழித்தல் போன்று வாழ்க்கையை உல்லாசமாகக் கழித்தவர்.

இவரைப்பற்றி, 2002 மார்ச் 2 தேதியிட்ட தி டெலிகிராப் நாளேடு, பின்வருமாறு சித்தரித்திருந்தது:

அகமதாபாத்தின் முன்னாள் காவல்துறை ஆணையரான பி.சி. பாண்டே, (முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை நடைபெற்ற சமயத்தில் காவல்துறை ஆணையராக இருந்தார்). இந்த இனப்படுகொலைகள் நடைபெற்ற சமயத்தில், போலீசாரின் பங்கு குறித்து இவரைவிட சிறப்பாக வேறெவரும் கூற முடியாது. இவர் தன்னுடைய அறிக்கையில், போலீசார் பொதுவான சமூக சூழ்நிலையிலிருந்து ஒதுக்கி இருக்க முடியாது. … சமூகத்தின் உணர்வுநிலை மாறும் சமயத்தில், போலீசாரும் அதன் ஓர் அங்கமாக மாறுவார்கள், அந்த உணர்வுகள் அவர்களிடமும் ஒட்டிக்கொள்ளும் என்று சொல்வதை வைத்து இவர் குறித்து ஒரு மதிப்பீட்டிற்கு வரலாம்.

ஓர் உரையாடலின்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:

கேள்வி: குஜராத், ஆர்.எஸ்.எஸ்-இயக்கத்திற்கு எந்த அளவுக்கு முக்கியமானது?

பதில்: இதோ பாருங்க, ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் குஜராத் அரசாங்கத்தில் உள்ள பாஜகவின் முதுகெலும்பாகும். இந்த அமைப்பால் மட்டுமே இஸ்லாமிக் கட்சிகளை எதிர்த்திட முடியும்.

கேள்வி:: அவர் (மோடி) எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ்—உடன் நெருக்கமானவர்?

பதில்: ஓ, யெஸ். அவர் ஆர்.எஸ்.எஸ்—க்கு மிக மிக நெருக்கமானவர். அவரை அதுதான் இயக்குகிறது. அதன் முன்னணி ஊழியர் அவர்.

கேள்வி: கலவரங்களின் போதும் சரி, அல்லது நிர்வாக  விவகாரங்களாக இருந்தாலும் சரி, உங்கள் அமைச்சர்கள் பற்றி ஏகப்பட்ட நெருடல்கள் அடிபட்டதே. இங்குள்ள ஆர்.எஸ்.எஸ்—க்கு ஹரேன் பாண்ட்யா மிகவும் பிடித்தமானவராக இருந்தாரா?

பதில்: ஆம், அவர் இங்கே மிகவும் புகழ்பெற்ற தலைவர். ஹரேன் பாண்ட்யாதான் உள்துறை அமைச்சர் ஆர்.எஸ்.எஸ்–க்கு மிகவும் நெருக்கமானவர். அதன் காரணமாகத்தான் நாம் அமித் ஷாவையும் பெற்றிருந்தோம். இப்போது அவர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னே இருக்கிறார். அவரும் ஆர்.எஸ்.எஸ்—க்கு மிகவும் நெருக்கமானவர். மற்றொரு தலைவர், அவர் பெயர் கோர்தான் ஜடாஃபியா. அவரும் இங்கேயுள்ள விசுவ இந்து பரிசத்துக்கு மிகவும் நெருக்கமானவர்.

கேள்வி: இவர்கள் அனைவருமே உள்துறை அமைச்சர்களாக இருந்தார்கள், இல்லையா. இவ்வாறு இவர்களை அமர்த்தியது நன்கு திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்ட முடிவுதானா?

பதில்: ஆம், ஏனெனில் உள்துறைதான் காவல்துறை அதிகாரிகளைக் கட்டுப்படுத்து-வதாகும். எனவே அதில் தங்கள் சொந்த ஆட்களை அமர்த்துவது நல்லது, அல்லவா? ஆகையால்தான் கேசுபாய் முதல்வராக இருந்தார், ஹரேன் பாண்ட்யா உள்துறை அமைச்சராக இருந்தார்.

கேள்வி: நான் கோர்தான் ஜடாஃபியாவை சந்திக்க வேண்டாம் என்கின்றீர்களா?

பதில்: வேண்டாம். நீங்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவரை சந்தித்தபின் நீங்கள் விலகிச் சென்றுவிடுவீர்கள். அதாவது, அது நீங்கள் எடுக்கப்போகும் திரைப்படத்தின் அங்கமாக இருக்காது.

கேள்வி: அப்படியா, நல்லது. நான் தில்லியில் இருந்தால், அங்கே அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்வீர்களா?

பதில்: ஆம், நீங்கள் சந்திக்கணும். அவர் ஒரு சித்தாந்தவாதி.

கேள்வி: அவரை நான் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்?

பதில்: ஏனெனில், இம்மாநிலத்தைப்பற்றி பல்வேறு வித்தியாசமான கண்னோட்டங்களை நீங்கள் பெற முடியும். அவர் மிகவும் உன்னிப்பானவர். அவர் உங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பற்றியும், மாநிலத்தைப் பற்றியும் கூறுவார்.

கேள்வி: நீங்கள் பார்க்கச் சொன்னீர்கள் என்று அவரிடம் கூறலாமா? அவர் எங்கே தங்கி இருக்கிறார்?

பதில்: கூறுங்கள். நான் கேட்டதாக அவரிடம் சொல்லுங்கள். அவர் குஜராத் பவனில் தங்கி இருக்கிறார்.

கேள்வி: கலவரங்கள் தொடர்பாக

மோடிஜியிடம் கேட்க முடியுமா?

பதில்: வேண்டாம். அவர் பேச மாட்டார்.

கேள்வி: அதுதான் அவர் பலவீனமா?

பதில்: ஆம், வேண்டாம்.

கேள்வி: ஆக, கலவரங்களின்போது நீங்கள் அங்கே இருந்தீர்கள்?

பதில்: ஆம். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பயங்கரமான நாட்களில் ஒன்று அது. எனக்கு ஏற்கனவே 30 வருடங்கள் சர்வீஸ் முடிந்து-விட்டது. ஆனால் இதைப் பாருங்க. 85, 87, 89, 92 மற்றும் பல சமயங்களில் கலவரங்கள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்துக்கள்தான் அடி வாங்குவார்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்கள் கை ஓங்கி இருந்தது. 2002-ல் நடைபெற்ற கலவரங்கள் இந்துக்கள் அவற்றுக்கெல்லாம் பழிவாங்கும் விதத்தில் நடந்தன. 1995-க்குப் பின்னர், அரசாங்கம் நம்முடையது என்று மக்கள் நினைத்தார்கள். ஏனெனில் இது ஒரு பாஜக அராசாங்கம்.

கலவரங்களை அடக்குவதற்காக நான் போகவில்லை என்று அவர்கள் கூறுகிறர்கள். கலவரம் நடப்பதாக ஒருவரும் என்னை அழைக்கவில்லை. எவருமே கூறாமல் நடைபெறும் சம்பவத்தைத் தொலைவிலிருந்து உணரும் திறமை என்னிடம் இல்லை.

கேள்வி: ஆக, மோடி முன்னிறுத்தப்படும் நபராக (போஸ்டர் பாய்—-ஆக) இருக்கிறாரா?

பதில்: உங்களுக்கு மல்லிகா சாராபாயைத் தெரியுமா? நடனமாடுபவர். அவர் மோடிஜியைக் கடுமையாக திட்டிக் கொண்டிருக்கிறார். 2002 கலவரங்கள் அவரால்தான் என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் கோத்ராவிற்குப் போய், ரயிலைக் கொளுத்தவில்லை என்று அவர் சொல்கிறார். ஆக, இவ்வாறு நான் அதைச் செய்யாததால், அதன்பிறகு நடப்பவைகளுக்கு எல்லாம் என்னை எப்படி குறைகூற முடியும்? அது என்னால் செய்யப்பட்டிருந்தால், இதுவும் என்னால் செய்யப்பட்டதுதான். பாருங்க, அங்கே என்ன நடந்ததோ அதற்கு இது எதிர்வினையாகும். இதனை தர்க்கரீதியாகப் பாருங்கள், ஒரு முஸ்லீம்கள் குழு போய், ரயிலுக்குத் தீ வைத்தால் உங்கள் எதிர்வினை என்னவாக இருக்கும்?

கேள்வி: நீங்கள் அவர்களைத் திருப்பி தாக்கினீர்கள்?

பதில்: ஆம், ஆம். முன்பு அவர்கள் தாக்கினார்கள். இப்போது இவர்கள் தாக்குகிறார்கள். இந்துக்கள் 85, 86, 92 களில் அடி வாங்கினார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்பு. அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கிறார்கள். இதை ஏன் யாரும் புரிந்து கொள்ளவில்லை?

கேள்வி: இதனை அவர் நிறுத்தி இருக்க மாட்டார் என்றே நிச்சயமாகக் கருதுகிறேன்.

பதில்: பாருங்க, மக்களுக்கு எளிதில் உணர்ச்சிக்கு ஆட்பட்டுவிட்டால், நீங்கள் அவர்களைத் தடுக்க முடியாது, எகிப்தில் நடந்ததைப் போல.

ஆகவே, இதுபோன்ற மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்று நீங்கள் எனக்குக் கூறுகிறீர்களா?
அவர் செய்ததில் என்ன தவறு? இவர்களை சாலையில் மீண்டும் நடக்க அனுமதிக்கலாமா? இப்போது இத்தகைய காட்சிதான் இங்கே இருக்கிறது. இதையெல்லாம் மோடி தன் கையிலிருக்கிற ஸ்விட்சை ஆப் செய்து தடுத்திட வேண்டும் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்? அதற்கான ரிமோட் பட்டன் அவர் கைகளில் கிடையாது.

கேள்வி: கலவரங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?

பதில்: ஆரம்பக் கட்டம் இரண்டு நாட்களுக்கு இருந்திருக்கும், அதற்கும் மேல் இருக்காது.

கேள்வி: ஆக, இந்துக்கள் முஸ்லீம்-களைக் குறி வைத்துக் கொண்டிருந்-தார்கள் என்றுதானே ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன?

பதில்: ஆம். வேறு என்ன அவர்-களால் காட்ட முடியும்? முஸ்லீம்-களும் இந்துக்களைக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். சதவீதம் வேண்டுமானால் வித்தியாச-மானதாக இருக்கலாம். இரண்டும் சரிசமமாக இருப்பதாக நாங்கள் பார்க்கவில்லை. அல்லது, சமப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் இங்கே தாக்கியவர்கள் முஸ்லீம்கள்-தான். கோத்ராவில் ரயிலைக் கொளுத்தியது அவர்கள்தான். எனவே, இயற்கையாகவே, எதிர்வினை இங்கே செயல்-படுத்தப்-பட்டிருக்கிறது. முஸ்லீம்களுக்கு அதிக சேதாரம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களும் திருப்பித் தாக்கி இருக்கிறார்கள்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *