உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? செப்டம்பர் 16-30

ஈரோட்டுக்கருகில் ஓலவலசு என்னும் சிற்றூரில் முத்துச்சாமி சின்னம்மா இணையருக்கு 01.07.1906ல் பிறந்தவர் புலவர் குழந்தை. திண்ணைப் பள்ளியில் படித்து, தன் முயற்சியால் 28 வயதில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார்.

இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டார். இன எழுச்சிக்  காவியமாக இராவண காவியம் எழுதி கம்பனுக்குச் சவால்விட்டவர். பல உரைநடை நூல்களையும் எழுதினார். திருக்குறளும் பரிமேலழகரும் என்ற நூல் குறிப்பிடத் தக்கதாகும்.

(நினைவுநாள்: 25.09.1972)

                                                                        எழுத்தாளர் விந்தன்

இரவுப் பள்ளியில் படிப்பறிவைப் பெருக்கிக் கொண்டவர். தமிழரசு அச்சகத்தில் என்.வி. நடராசன், ம.பொ.சி போன்றவர்களுடன் அச்சுக் கோர்ப்பவராகப் பணியாற்றி, பின்னர் கல்கி இதழிலும் அதே பணியைச் செய்து, தம் அறிவுக் கூர்மையால் உதவி ஆசிரியராய் உயர்ந்தவர். அச்சு எழுத்துகளை பிடித்த விரல்கள் பேனா பிடித்தன. எழுத்தாளர் உலகில் எடுப்பாக தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை (முல்லைக் கொடியாள்) நாவல் (பாலும் பாவையும்) வாழ்க்கை வரலாறு (எம்.ஆர்.ராதா) திரைக்கதை வசனம் (கூண்டுக்கிளி) திரைப்பாடல்கள் (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ) என்று எழுத்துலகில் சாதித்து புரட்சி எழுத்தாளராய் மிளிர்ந்தவர் விந்தன் அவர்கள் ஒரு பன்முகத் திறனாளி!

(பிறந்தநாள் 22.09.1916)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *