இது ஒரு பொழப்பு! இதெல்லாம் ஒரு பொறப்பு!!
ஆனா… ஊனான்னா… நான் ஆர்வர்டு புரபசர்… ஆர்வர்டு புரபசரு.. ன்னு சவுண்டு விடுறதே பிழைப்பு சிலதுகளுக்கு! அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாஹோ… ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாஹோ…-ங்கிற ரேஞ்சுல கலர் கலரா ரீலா வுடுறதே வேலை. சவடால் வுட்டே காலத்தை ஓட்டுறதுல இவரை மிஞ்ச வேற ஒருத்தன் பொறந்து வரணும்.
சந்திர மண்டலத்தில சோனியாவுக்கு சொந்த பேங்க் இருக்கு, ஒட்டன்சத்திரத்தில ஒபாமாவோட ரகசியங்கள் இருக்கு-ன்னு தண்ணி போடாம சலம்புறதையும், தலைப்புச் செய்தியா போடுறதுக்குன்னே பத்திரிகைகளும் இருக்கு! சரி, என்ன பண்றது? எப்பப் பார்த்தாலும் சீரியசா ஏதாவது எழுதிட்டிருந்தா, அப்புறம் காமெடிக்கு என்னதான் பண்றதுன்னு அப்பப்போ பேட்டி கண்டு போடுவாங்க… இல்லைன்னா இவரே வாலண்டியரா வண்டியில ஏறி, ஏய்.. பார்த்துக்க.. பார்த்துக்க… நானும் ரவுடிதான் நானும்ரவுடிதான்னு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவாரு.
அப்புறம் என்ன ஒரு வாரத்துக்கு இதே பேச்சு! இங்கே ஏதாவது பேசிட்டு, திடீர்னு ஆளைக் காணலயே-ன்னு பார்த்தா நான் ஆர்வர்டு-ல கிளாஸ் எடுக்கப் போயிட்டேன்-னு அடுத்து தகவல் தருவாரு. (தாங்கலடா சாமி! அட.. இவரைச் சொல்லலைங்க.)
இப்படியே பொழப்பு ஓடிட்ருந்தது. சேது சமுத்திரத் திட்டம், இட ஒதுக்கீடு, ஈழத் தமிழர் பிரச்சினை-னு எது வந்தாலும் தமிழர்களுக்கு எதிரா டெல்லியில இவரு படிச்சதுக்கு ஏத்த வேலை பார்ப்பாரு.. (அதாங்க எம்.ஏ… எம்.ஏ… எகனாமிக்ஸ்.. எகனாமிக்ஸ்) ஆனாலும் டமில்நாட்டுல தான் அரசியல் பண்ணுவாரு. ஈழத்தமிழர்களுக்காக வழக்குரைஞர்களெல்லாம் போராடினப்போ, வேற வழக்குக்கு வாலண்டியரா வாதாடப் போயி, முட்டையால தானே அடிவாங்கி, பிரச்சினையைக் கிளப்பி, போலீஸ்- வக்கீல்னு சண்டைய மூட்டிவுட்டு கவனத்தைத் திசை திருப்புனது இவரது அண்மைச் சாதனைகள்ல முக்கியமானது.
ஆனா, எவ்வளவு அசிங்கப்பட்டாலும், அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பாங்கிற மாதிரி நடந்துக்கிறதால, அந்தக் கவுண்டமணி வசனமே- இவருக்காக வச்ச மாதிரியே இருக்கும்னா பார்த்துக்குங்களேன். போன் வயரு பிஞ்சு போனாலும் இவரு பேசாமப் போக மாட்டாரு.. அவ்ளோ பெரிய அரசியல்வாதி! வழக்கமா, தி.க-காரனையும், கம்யூனிஸ்டுகளையும் திட்டுறதில அப்படியொரு சந்தோசம்.
ஆளே இல்லாத ஆப்பக் கடையில, அகப்பைப் புடிக்க 68 பேருங்கிற மாதிரி, இவருக்கு ரெண்டு மெசின் கன்னு! அதுக்கு ரெண்டு கருப்புப் பூனைகள்! சரி, நம்ம மேட்டருக்கு வருவோம். என்ன தான் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பா இருந்தாலும், அப்படியே நடுச்சென்டர் நாயகன் மாதிரியே படம் காட்டுற நம்ம சூ…சாமி, டி.என்.ஏ-ன்னு ஒரு பத்திரிகைல ஒரு கட்டுரை எழுதினாரு.
போன மாசம் மும்பை குண்டு வெடிப்பு நடந்ததையொட்டி, தீவிரவாதத்தை எப்படி அழிக்கிறதுன்னு இவரோட அரிய பெரிய கருத்துகளைக் கட்டுரையா வடிச்சு இவரு அனுப்ப, அதையும் அந்த பத்திரிகை மதிச்சுப் போட… ஆர்.எஸ்.எஸ்-சோட கோமாளி வெர்சனான இவரு வேசம் அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது.
நாங்கள் இந்து வம்சாவழியினர்-னு ஒத்துக்காத முஸ்லிம்களும், கிறிஸ்டியன்களும் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. காஷ்மீர் தனி அதிகாரத்தை ரத்து பண்ணனும். இப்படி முழுக்க இந்துத்துவ பார்வையோட, சங் பரிவாரின் வழக்கமான சரக்கோடு, இவரு பீலாக்களையும் சேத்து அள்ளிவுட்டாரு. இதுக்கு இந்தியாவில இருக்கிறவங்க ஒரு மாதிரி கண்டனத்தை எழுப்பிக்கிட்டிருந்தாலும், இவருடைய கட்டுரையைப் படிச்ச ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் கொதிச்சுப் போயிட்டாங்க…
இப்படியொரு மத வெறியன் எங்களுக்கு வந்து வகுப்பெடுக்கிறதா? ஆணியே புடுங்க வேணாம்… ஆளை வெளியே அனுப்புன்னு கிளம்பிட்டாங்க மாணவர்கள். அமெரிக்காவுல கிளம்பியிருக்கிற இந்தப் பிரச்சினை.. இவருடைய வழக்கமான ஆர்வர்டு கப்சாக்களுக்கு ஆப்புல்ல வச்சிடும். மாணவர்கள் மத்தியில இவரால நடுநிலையோட நடந்துக்க முடியாது. மற்ற மதங்களின் மேல் வெறுப்பு கொண்ட காமாலைக் கண்ணோடுதான் இவர் நடந்துகொள்வார். மதவெறியை, வகுப்புவாதத்தை இந்தியாவில் தூண்ட முயற்சிக்கும் இவரிடம் பாடம் கேட்க வேண்டிய அவசியம் கிடையாதுன்னு ஹார்வர்டு கோடை கால பொருளாதார வகுப்புகள்ல கலந்துக்கிற மாணவர்கள் துண்டறிக்கையும், முக்கிய அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் கொடுத்திருக்காங்களாம். இந்தாள எப்படி பொறடியைப் புடிச்சு வெளிய தள்றதுன்னு யோசிக்க, இந்த மனுவை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்-னு அவங்களும் பதில் தந்திருக்காங்க..! அந்த மாணவர்கள் கம்யூனிஸ்டுகாரங்க… சோவியத்து ஆளுங்க-ன்னு பீலா பெருமாளு இப்பவும் பொலம்பிருக்காரு.
இன்னும் கொஞ்ச நாள்ல,
ஆர்.எஸ்.எஸ்- னு தெரிஞ்சு போச்சு.. டும்..டும்..டு…ம்
ஆர்வர்டு வேசம் கலைஞ்சு போச்சு… டும்..டும்..டும்..-னு அங்கிருந்து கிளம்பி முழு நேரமா இங்கேயே வந்துடும்…. திரும்பவும் கவுண்டமணிதான் நமக்கு உதவுறாரு…. நாராயணா… இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா….
—————————————