அருகிலிருப்பதால் அலட்சியப்படுத்தக் கூடாது
எவ்வளவோ உயர்ந்த சிறந்த அறிஞர்கள் நம் அருகில் இருப்பர். நம்முடன் இருப்பதால் அவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. தூரத்தில் இருப்பவரைப் புகழ்வோம், பெருமையாக எண்ணு«ணுவாம். இது ஒருவகை அறியாமையே! எனவே, குறைகளைத் தொடக்கத்திலே து¬த்தெறியத் தவறக் கூடாது.
இன்றைக்கு இயலாதது என்றைக்கும் இயலாது என நினைக்கக் கூடாது
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாதிரியார் ஒருவரிடம், “மனிதனால் உயரே பறக்க முடியுமா? அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?’’ என்று கேட்டதற்கு, அப்பாதிரியார், “மனிதனால் எப்படி பறக்க இயலும்? எந்தக் காலத்திலும் இது சாத்தியமில்லை!’’ என்றார்.
ஆனால், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அது சாத்தியமானது. வானில் பறக்கும் விமானம் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதன் உயரே பறந்தான்!
இதில் ஒரு வியப்பு என்னவென்றால், எந்தப் பாதிரியார், எக்காலத்திலும் இது சாத்தியம் இல்லை என்று கூறினாரோ, அவருடைய இரண்டு பிள்ளைகள்தான் (ரைட் சகோதரர்கள்) வானூர்தியைக் கண்டுபிடித்தனர்.
எனவே, எதையும் இயலாது என்று தீர்க்கமாக முடிவு கட்டிவிட்டால் முயற்சி எப்படி வரும்? முயன்று பார்க்க வேண்டும். தொடர்ந்து முயல வேண்டும்.
ஆம். மனித உடல் சாகாமலே புதுப்பிக்கப்படும் காலம் ஒன்று வரும். ஆம். அதுவும் சாத்தியம்!
வலிய வருகின்றவர்களை உடனே நம்பக் கூடாது
சிலர் அவர்களாகவே வந்து நட்பு கொள்வார்கள்; நம் செயல்களில் பங்கெடுப்பார்கள்; நம் மீது அக்கறை காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். காரணம் இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் எதையோ எதிர்பார்த்தே வருவர். பெரும்பாலும், அதிகாரமும், பணமும், செல்வாக்கும் உள்ள இடத்தில் இப்படி வருவார்கள். அது நீங்கும்போது அவர்களும் விலகி விடுவர். எனவே, இவர்கள் செல்வாக்குள்ளவர்களிடம் இருந்து செல்வாக்கோடு வாழ நினைப்பவர்கள். எனவே, இவர்களை முழுமையாக நம்பி செயல்படக் கூடாது.
வௌவால்களுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது
சந்தர்ப்பவாத மனிதர்களுக்காக வௌவால் கதை ஒன்று சொல்வார்கள். காட்டில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையே சண்டை வந்து இரண்டும் மோதிக் கொண்டன. அந்த நேரத்தில் வௌவால் எத்தரப்பிலும் சேராமல் வேடிக்கை பார்த்தது. சண்டை முடிந்து, விலங்குகள் வென்றன. வெற்றி விருந்து. வௌவால் விலங்குகள் பக்கம் சென்று நானும் விலங்குதான். நான் உங்கள் தரப்புதான் என்று விருந்துண்டது.
சிறிது காலம் சென்றதும் மீண்டும் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் போர். இப்போதும் வௌவால் கலந்துகொள்ளாது வேடிக்கை பார்த்தது. இந்த முறை பறவைகள் வென்றன. இப்போது வௌவால் நானும் பறவைதான் என்று பறவை பக்கம் சேர்ந்தது.
கொஞ்ச காலம் சென்றது. பறவைகளும் விலங்குகளும் ஒரு சமாதானம் செய்து கொண்டன. நமக்குள் சண்டை வேண்டாம். காடு அமைதியாய் இருந்தால்தான் நமக்கு நல்லது என்று ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. அப்போது இரு தரப்பும் வௌவாலைச் சேர்க்கக் கூடாது என்ற முடிவெடுத்து ஒதுக்கித் தள்ளின. வௌவால் அனாதை ஆனது; ஆதரவற்றுப் போனது.
சண்டையிட்டு மோதிக் கொள்கின்றவர்கள் வௌவால்களுக்கு வாய்ப்பளிக்காது, தங்களுக்குள் ஒற்றுமையாகிவிட வேண்டும். சந்தர்ப்பவாதிகளை என்றைக்குமே யாரும் சேர்க்காது ஒதுக்குவதுதான் அறிவுக்குகந்த செயல். மோதலுக்கான காரணங்களைப் பேசி தீர்த்துக் கொள்வதே, அழிவைத் தடுத்து ஆக்கத்திற்கு வழிவகுக்கும.