ஆணுக்கு நிகராய் குத்துச் சண்டையில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவி

ஆகஸ்ட் 01-15

ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல பெண்கள் என்பதை எல்லா துறைகளிலும் பெண்கள் பங்களித்து சாதனை படைத்து நிரூபித்துள்ளனர்.

ஆண்கள் மட்டும்தான் குத்துச்சண்டை, மல்யுத்தம், பளு தூக்குதல் போன்ற உடல் வலிமை சார்ந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்ற வளையத்தை உடைத்ததற்கான உதாரணங்களாக மேரி கோம், கர்ணம் மல்லீஸ்வரி போன்றவர்களைச் சொல்லலாம்.

பெரம்பலூருக்கு உட்பட்ட கிராமம் குன்னம். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆ-ம் வகுப்பு படிக்கும் ரம்யா என்ற மாணவி மாநில அளவிலான பெண்களுக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 2-ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். குத்துச்சண்டையில் இவர் வென்ற கோப்பையை இம்மாவட்டம் முழுவதும் உள்ள மாணவிகள் தாங்களே வாங்கியது போலக் கருதிப் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

“குத்துச்சண்டைக்கு மிக முக்கியமே ஊட்டச்சத்துமிக்க உணவுதான். வறுமைக்கு இடையேயும் தேவையான சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளை என் அம்மா தயார் செய்து தருவார்’’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

“இத்தனைக்கும் நாக்கவுட் ஆன மாணவி பிரபலமான தனியார் பள்ளியைச் சேர்ந்த, தீவிரமாகப் பயிற்சி எடுத்துத் திறமையாக விளையாடக் கூடியவர். அதன் பிறகு முழு மூச்சாக பயிற்சியளிக்கத் தொடங்கினேன். ரம்யா, 17 -வயதுக்குட்பட்ட பிரிவிலும், 19-வயதுக்குட்பட்ட பிரிவிலும் கடந்த மூன்றாண்டுகளாக வெள்ளி, வெங்கலப் பதக்கங்களை வென்று வந்துள்ளார். சென்ற 2016_-17 கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட குத்துச்சண்டைப் போட்டியில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்கத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்க இயலாத சூழ்நிலைதான் செல்வி ரம்யாவின் குடும்பச் சூழ்நிலை. அதன் காரணமாக ரம்யா மனம் தளர்ந்து விடக்கூடாது என்று, மணிப்பூரில் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மேரி கோமின் கதையை எடுத்துக் கூறி அவரை ஊக்கப்படுத்தினேன். இப்போது பதக்கங்களைக் குவிக்கிறார்’’ என்று பூரிப்படைகிறார் பயிற்சியாளர்  செந்தில்குமார்.

“இவ்வாண்டும் பள்ளிக் கல்வித்-துறையால் நடத்தப்படும் குத்துச்சண்டை போட்டிக்குக் கடுமையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று  உலக அளவில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது லட்சியம், கனவு, எல்லாமும்’’ என்கிறார் ரம்யா.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *