உலக சுகாதார நிறுவனம் காசநோய், எச்.ஐ.வி (HIV),, ஹெபடிடீஸ் (Hepatitis) ஆகிய மூன்று நோய்களையும் கண்டு பிடிக்கக் கூடிய ஒரே கருவியை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. ஜீன் எக்ஸ்பர்ட் (Gene X pert) என்னும் இந்தக் கருவி காசநோயையும், எச்.ஐ.வி. மற்றும் ஹெபடிடீஸ் வைரஸ் தொற்றியுள்ள அளவையும் கண்டுபிடித்துச் சொல்லக் கூடியதாகும்.
அண்மையில் இந்தியா 60 ஜீன்எக்ஸ்பர்ட் இயந்திரங்களை தேசிய காசநோய்த் திட்ட செயல்பாட்டுக்காக வாங்கியுள்ளது. மூலக்கூறு சோதனைகளைச் செய்ய உதவும் இந்தக் கருவி மிக எளிதாக எடுத்துக் செல்லும் அளவில் மைக்ரோவேவ் அடுப்பு அளவிலேயே உள்ளது.
நல்ல சுகாதார முறை என்பது பல்முனைச் சோதனைகளைச் செய்யும் திறன் வாய்ந்ததாக அமைவது முக்கியம். தற்போது பெரும்பாலும் ஒரே நோயைக் கண்டுபிடிக்கக் கூடிய கருவிகளையே கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே தளத்தில் பல நோய்களைக் கண்டுபிடிக்கக் கூடிய கருவிகளை உபயோகிக்கும் திறன் நமக்கு உள்ளது என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய்களுக்கான இருக்கையின் பேராசிரியர் மதுக்கார் பாய் என்பவர்.
இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் நோய்களைக் கண்டறிவதிலும், கட்டுப்-படுத்து வதிலும், நல்ல தொழில்-நுட்பங்களை வழங்குவதோடு பொருளாதார சிக்கனத்தையும் ஏற்படுத்துகிறது.