பெரியாரை அறிவோமா?

ஆகஸ்ட் 16-31

1. பெரியார் அவர்கள் குழந்தைப் பருவத்தில் அருந்திய பால்

அ) பசும்பால் ஆ) தாய்ப்பால் இ) ஆட்டுப்பால் ஈ) எருமைப்பால்

2. எது நடந்தாலும் தலைவிதிதான் காரணம் என்று கூறி வந்த ராமநாத அய்யருக்குப் பாடம் புகட்ட அவரது கடையில் தட்டியைத் தாங்கி நின்ற முட்டுக் கம்பைத் தட்டிவிட்டு, ராமநாத அய்யர் தலையில் விழுந்து கோபமுற்றபோது பெரியார் கூறிய பதில்.

அ) மன்னிக்கணும். தவறுதலாகத் தட்டி விட்டுட்டேன் அ) இதுவும் உன் தலைவிதியே இ) நான் தட்டிவிடவில்லை, காற்றடித்ததால் விழுந்தது ஈ) முட்டுக்கம்பு ஒடிந்ததால் விழுந்தது

3.    பெரியார் ஈ.வெ.ரா. மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டபோது சத்தியாக்கிரகத்தை அழிப்பதற்காகவும் பெரியார் ஈ.வெ.ரா. போன்றவர்களை அழிப்பதற்காகவும் நம்பூதிரிப் பார்ப்பனர்களும் சில வைதிகர்களும் சேர்ந்து ஒரு யாகம் நடத்தினார்கள். அந்த யாகத்தின் பெயர் என்ன?

அ) அஸ்வமேத யாகம் ஆ) புத்திர காமேஷ்டி யாகம் இ) சத்துரு சங்கார யாகம் ஈ) இராஜசூயாகம்

4.    1924ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடந்த காங்கிரஸ் மாகாண மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் யார்?

அ) ஈ.வெ.இராமசாமி ஆ) திரு.வி.க. இ) எஸ்.இராமநாதன் ஈ) டாக்டர் வரதராஜுலு நாயுடு

5.    தந்தை பெரியாருக்கு வைக்கம் வீரர் என்று பட்டம் அளித்தவர் யார்?

அ) காந்தி ஆ) சாமி. சிதம்பரனார் இ) திரு.வி.க. ஈ) அண்ணா

6. புதிதாகக் கோயில் கட்டக்கூடாது, அர்ச்சகர் முறை கூடாது, வடமொழி கூடாது, கடவுள், கோயில் போன்றவற்றுக்கு ஒரு காசுகூட செலவழிக்கக்கூடாது, கோயில், மடம் சொத்துக்களை தொழில், வணிகம், ஆராய்ச்சிப் பணிகளுக்குச் செலவிட வேண்டும் என்பன உள்ளிட்ட புரட்சிகரத் தீர்மானங்களை நிறைவேற்றிய மாநாடு ஏது?

அ) 1933 நாத்திகர் மாநாடு ஆ) 1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு இ) 1930 ஈரோடு சுயமரியாதை மாநாடு ஈ) 1929 புதுவை சுயமரியாதை மாநாடு

7.    பொதுத் தொண்டன் எதைப் பார்க்க (லட்சியம் செய்ய)க் கூடாது என்கிறார் பெரியார்?

அ) பட்டம் பதவி ஆ) நேரம், காலம், தனிப்பட்ட மான அவமானம் இ) நாட்டுப் பற்று, மொழிப்பற்று ஈ) இவை எல்லாமும்

8.    மனிதனுக்கும் அவன் கற்பித்துக் கொண்ட கடவுளுக்கும் உள்ள வேற்றுமை யாது என பெரியார் கூறுகிறார்?

அ) கடவுள் எல்லாம் வல்லவர் ஆ) அனைத்தும் அறிந்தவர் இ) அவர் எங்கும் இருப்பவர் ஈ) மனிதனைப் போன்ற எண்ணங்களை உடையவனாகக் கடவுள் இருந்தாலும் அந்த எண்ணங்களை நிறைவேற்ற (மனிதனைப் போன்று) காரியத்தில் செய்யாமல், நினைத்த மாத்திரத்தில் ஈடேறக் கூடிய மாதிரி, நினைப்பிலேயே செய்துவிடுகிறான்.

9.    தமிழ்ப் புலவர்களைப் பெரியார் குறைகூறக் காரணம் என்ன?

அ) பழைய குப்பையைத் தேடி, அதிலிருந்து பெருமை பெறவேண்டும் என்ற நோக்கம் இருப்பது அன்றி, தமக்கு எனக் கருத்துகளை உருவாக்கிக் கொள்வதில்லை. ஆ) இராமாயணம், பாரதம், பாகவதம்  முதலிய புராணநூல் புலமை பெற்றுள்ளனர்: சுயஅறிவில் புலமை பெறவில்லை. இ) புதுக்கருத்தை மக்களிடம் சொல்வதில்லை ஈ) மேலே சொன்ன எல்லாமும்

10.    தந்தை பெரியார் குறித்து சர். ஏ. இராமசாமி முதலியார் இவ்வாறு கூறினார்

அ) தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் ஆ)தமிழ்நாட்டின் ரூசோஇ)தமிழ்நாட்டின் இங்கர்சால் ஈ)தமிழ்நாட்டின் லெனின்

 


 

பெரியாரை அறிவோமா? – விடைகள்

1. இ

2. ஆ

3. இ

4. அ

5. இ

6. ஆ

7. ஆ

8. ஈ

9. இ

10. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *