நெய்வேலியிலுள்ள திருமதி. பாலாம்பாள்–குமரசாமி நினைவு அறக்கட்டளையின் சார்பில், மானமிகு. கு.தாமோதரன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உண்மையில் வெளியான சிறுகதைகளுள் சிறந்த இரண்டு கதைகளுக்குப் பரிசு வழங்கி வருகிறார். நடுவர் குழுவினரால் தேர்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்.
1. முதல் பரிசு: ரூ. 1000-/-
கதையின் பெயர்: பெருமாள் வந்தார்
எழுதியவர்: க. முருகேசன்
2. இரண்டாம் பரிசு: ரூ. 750-/-
கதையின் பெயர்: சூரியகாந்தி
எழுதியவர்: டி. குலசேகர் 2010ஆம் ஆண்டு உண்மை இதழில் வெளிவந்த சிறுகதைகளைத் தேர்வு செய்த நடுவர் குழுவினர்.
1. திருமதி. இரா. கண்மணிசெல்மா
முதுகலை தமிழ் இலக்கியம்
கவிஞர் மீராவின் மகள். மீராசெல்மா என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார்.
2. திரு. அ. சொக்கலிங்கம்
நெய்வேலி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நாடக எழுத்தாளர், நடிகர், கவிஞர் என பல்துறைகளில் ஈடுபாடு கொண்டவர்.
3. முனைவர் வெ. தி. சந்திரசேகர்
நெய்வேலி சவகர் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் மீது தீராத பற்றுக் கொண்டவர். தமிழ் மேடைகளிலும், கவியரங்குகளிலும், பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருபவர். பரிசு பெற்ற சிறுகதையினை எழுதியவர்கள் தங்கள் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி உண்மை பொறுப்பாசியருக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
உண்மையின் பகுத்தறிவு, வாழ்வியல் பணிகளுக்கு ஊக்கமளித்து வரும் நெய்வேலி கு.தாமோதரன் அவர்களுக்கு உண்மை வாசகர்கள் மற்றும் நிருவாகத்தினர் சார்பில் மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.