ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கடவுள்!பாஸ்போர்ட், விசாவுக்கும் கடவுளாம்!

ஜூன் 01-15

பக்தனுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ பகவானுக்கு துறைவாரியாக பணி ஒதுக்கிச் சுரண்டுகின்றனர். அதையும் நம்பி அப்பாவி மக்கள் ஆட்டுமந்தைகளாய் அணிவகுத்துச் செல்கின்றனர். அந்த அவல விவரத்தைக் கீழே படியுங்கள்!

காசநோய்     – வைத்தீஸ்வரன் கோயில் (சீர்காழிக்கருகில்)

தோல்நோய்     – 1. திருக்கட்சூர் மருந்தீசர் (சிங்கப்பெருமாய் கோயில் அருகில்), 2. திருவேற்காடு

(வேதபுரீஸ்வரர்), 3. திருத்துருத்தி உத்தவேதீஸ்ர்வரர் (மயிலாடுதுறை அருகில்)

இதயநோய்     -திருநின்றவூர் (இருதயாலீசுவரர்)

மனநோய்      – திருவிடைமருதூர் மருதீசர்

மன அழுத்தம்     – திருவலிவலம் (திருவாரூர் அருகில்)

தொழுநோய்     – தண்டலைச்சேரி (திருவாரூர் அருகில்)

வெண்புள்ளி     -தலையாலங்காடு (திருவாரூர் அருகில்)

கண்நோய்     -1.திருவாரூர் தூவாஸ்நாதர்,

2. கண்கொடுத்தவனிதம் (திருவாரூர் அருகில்)

காதுநோய்     – அன்பில் செவிசாய்த்த வினாயகர் (திருச்சிக்கு அருகில்)

ஊனம்    – 1. திருப்பெருவேளூர் சரஸ்வதீஸ்வரர் (கும்பகோணம் அருகில்), 2.திருப்பந்துரை

சிவானந்தேஸ்வரர் (கும்பகோணம் அருகில்)

நரம்புத்தளர்ச்சி     – திருபுவனம் (மயிலாடுதுறை அருகில்)

வலிப்பு நோய்     – திருவாசி

(திருச்சிக்கு அருகில்)

பக்கவாதம்     – திருந்துதேவன்குடி (கும்பகோணம் அருகில்), திருவாதவூர் (மதுரை மேலூருக்கு

அருகில்)

வயிற்றுவலி     – திருவதிகை

(பண்ருட்டி அருகில்)

சர்க்கரை நோய்     – கோவில்வெண்மணி கரும்பேஸ்வரர் (நீடாமங்கலம் அருகில்)

புற்றுநோய்    -திருப்பராய்த்துறை பராய்ந்துறைநாதர் (திருச்சிக்கு அருகில்)

பால்வினை நோய்    – கஞ்சனூர்

(ஆதுரை அருகில்)

கருப்பை நோய் – 1. கடுவாய்க்கரை புத்தூர் (கும்பகோணம் அருகில்), 2.திருக்கருகாபூர்

(கும்பகோணம் அருகில்),     3.திருச்சி தாயுமானவர்

குழந்தை மருத்துவம் – சிவபுரம் (கும்பகோணம்)

முதுமை நீங்க     – அவளிவநல்லூர் (தஞ்சைக்கு அருகில்)

உடலழகு    – திருக்கொட்டையூர் (சுவாமிமலை அருகில்)

போதை மோகம்     – திருப்பாம்புரம் (திருவாரூர் அருகில்)

நஞ்சு நீங்க     – பூவனூர்

(திருவாரூர் அருகில்)

சோர்வு    – திருவெறும்பூர்

(திருச்சி அருகில்)

பிள்ளை பெற:

அகோபில நரசிம்மரை மாவிளக்கு ஏற்றி வழிபட்டால், பிள்ளை கட்டாயம் உண்டாகுமாம். காரண்டி கொடுக்கிறான்!

அதைத் தமிழ்முரசு பத்திரிகை வெளியிட்டுள்ளது. எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்!
ஈஸ்வரன் ஒருவரா? பலரா?

புராணப்படி, மூடநம்பிக்கைப்படி பார்த்தாலும் ஈஸ்வரன் எனப்படும் சிவன் ஒருவன்தானே. அப்படியிருக்க அவனே பல ஊரில் பல பெயர்களில் பல நோய்க்கு வைத்தியம் பார்க்கிறான் என்றால் அது மோசடியல்லவா? முதலில் அவனை சுகாதாரத்துறை கைது செய்ய வேண்டாமா?
என்னென்ன நோய் உண்டோ அத்தனைக்கும் ஒவ்வொரு ஊர் ஈஸ்வரர் என்று அடையாளப்படுத்தி மக்களை அலையவைப்பது பக்தியின் பெயரால் செய்யப்படும் சுரண்டல், கொடுமை அல்லவா?

ஜுரத்துக்கு மட்டும் 16 ஊர்களில் ஈஸ்வரன் வைத்தியம் பார்க்கிறார் என்று ஒரு பட்டியலே கொடுக்கிறார். ஜுரம் அடிக்கடி வரும் என்பதால் அந்தந்தப் பகுதியில் வைத்தியம் பார்த்துக் கொள்ள வசதி செய்து கொடுக்கிறார் இந்த வைத்தியர்.

இப்படி எல்லா நோயையும் ஈஸ்வரன் குணப்படுத்துகிறான் என்றால், எல்லா மருத்துவமனைகளையும், மருந்தகங்களையும், மூடிவிட்டு, மருத்துவ படிப்பையே நிறுத்தி விடலாமே!

இத்தோடு விட்டார்களா?

விசா கொடுக்க ஒரு கடவுள், பாஸ்போர்ட்டுக்கு ஒரு கடவுள்! அதிர்ச்சியாய்
இருக்கிறதா? அடியில் படியுங்கள்!

பாடிகாட் முனீஸ்வரன்:

சென்னை பார்க் டவுனில் பல்லவன் சாலையில் உள்ளது இக்கோயில்.

இக்கடவுளை வணங்கினால், வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்லுமாம். ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் பயிற்சி, சாலை விதி, போக்குவரத்து காவலர்கள் எல்லாம் தேவையில்லை. இந்தக் கடவுளை வணங்கிவிட்டால் வாகனம் பாதுகாப்பாக ஓடிவிடும்!
                                                                                       
   கிரிக்கெட் கணேசா:

   அண்ணா நகர் (கிழக்கு).

இந்த வினாயகரை வேண்டினால் வேண்டுகின்றவர் அணி வெற்றி பெறுமாம்! இரண்டு தரப்பும் வேண்டினால்?

இப்படி புத்தியோடு கேள்வி கேட்டால் பக்திக்கும் பகவானுக்கும் வேலையில்லையே!

                                                                                

யோக ஹயக்கிரிவர்:

(காஞ்சிபுரம் மாவட்டம், செட்டிபுண்ணியம்)

தேர்வில் வெற்றிபெற இந்தச் சாமியைக் கும்பிட வேண்டுமாம் அப்புறம் எதற்குப் படிக்கணும்?

 

 

 

 அமெரிக்க ஆஞ்சினேயர்:

(நங்கநல்லூர், எம்.எம்.டி.சி.காலனி)

வெளிநாட்டுக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்தக் கடவுளை வேண்டிக் கொள்ள வேண்டுமாம்! அது மட்டுமில்லீங்க. வெளிநாடு போக பாஸ்ட்போர்ட், விசா வேண்டுமல்லவா? அதற்கும் கடவுள் உண்டு!

 

 ஸ்ரீலட்சுமி விசா கணபதி:
(பழவந்தாங்கல்-பிருந்தாவன் நகர்)

பாஸ்போர்ட், விசா வேண்டுவோர் இங்கு சென்று வேண்ட வேண்டுமாம்!
எப்படீங்க.. இன்றைய மக்களுக்கு என்னென்ன தேவையோ அதற்கெல்லாம் ஒரு கடவுளை உண்டாக்கி, அதை வழிபட்டால் எல்லாம் நடக்கும் என்று பிரச்சாரம் செய்து மக்களைச் சுரண்டும் இந்த அயோக்கியர்களை அரசு நடவடிக்கை எடுத்து சிறையில் தள்ள வேண்டாமா?-

அரசாங்க வேலைக்குக் குறுக்கே கடவுள் புரோக்கரா? அப்போ பிரார்த்தனை இலஞ்சமல்லவா? அப்படின்னா கடவுளைக் கைது செய்ய வேண்டாமா?

– சிகரம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *