1. எப்பொழுதும் நிமிர்ந்து உட்கார்ந்து அழுத்தமாக சுவாசிக்க வேண்டும்.
2. தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடமாவது வாக்கிங் அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
3. வெட்டிய படங்களை ஒன்று சேர்ப்பது போன்ற பசில் கேம்ஸ்கள் நிறைய விளையாட வேண்டும்.
4. எதையும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். தியானமும் செய்வது நல்லது.
5. டிராயிங், பெயிண்டிங் போன்ற உங்களுக்குப் பிடித்த கிரியேடிவ் வேலைகள் ஏதாவது ஒன்றில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
6. நீங்கள் புத்தகங்களை வாசிக்கும் வேகத்தை அதிகமாக்குங்கள், எண்ணிக்கையை அதிகமாக்குங்கள்.
7. ஒழுங்கற்ற தினசரி வாழ்க்கையை ஒரு தெளிவான திட்டமிடலுக்குக் கொண்டு வாருங்கள்.
இந்த 7-_யும் செய்தால் உங்கள் மினி படிப்படியாக உயரும்.