ராஜா சர். அண்ணாமலை செட்டியார்
அயல்நாடுகளில் சென்று பொருள் திரட்டி ஆரியர்களை இந்த நாட்டில் கொழுக்க வைத்து, கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வதிலும், பார்ப்பனர்களுக்கே பயன்படக்கூடிய பாடசாலை களைக் கட்டுவதிலும், தர்மசத்திரம் கட்டுவதிலும், தானம் கொடுப் பதிலும் முதன்மையாயிருந்துவந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில், பொதுவாக எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்று துணிந்து, பெரும்பொருள் செலவோடு அவற்றைச் செய்து காட்டிய முதல் வழிகாட்டி ராஜா சர் அவர்களேயாகும்.
அவர் செய்த பல காரியங்களில், என்றைக்கும் எண்ணக்கூடிய வகையில் திராவிடர்களுக்கு நினைவூட்டி வருவது அண்ணாமலைப் பல்கலைக்கழகமாகும்.
– தந்தை பெரியார்
(மறைவு : 15-06-1948)
சர். ஏ.டி.பன்னீர்செல்வம்
நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும். உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்போதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவர் அருமைப் பன்னீர்செல்வம்.
– தந்தை பெரியார்
(பிறப்பு: 01-06-1888)