ஆசிரியர் பதில்கள்

மே 16-31

அ.இ.அ.தி.மு.க வினர் முதுகெலும்புள்ள தலைமையை கண்டுபிடிக்க வேண்டும்!

கே :    டாக்டர் கிருஷ்ணசாமி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும் என்று கூறியுள்ளது பற்றி?
    – சீ.இலட்சுமிபதி, தாம்பரம்
ப :    பாவம் கிருஷ்ணசாமி, அவர் அரசியல்(பதவி) வாழ்வை திராவிடர் இயக்கங்களில்தான் துவக்கி அறிமுகமானவர்; இப்போது அவருக்கு பா.ஜ.க அணி தேவைப்படுகிறது! வாடியிருக்கும் கொக்கு அவர்!

 

கே :    கர்நாடகாவிலும், கேரளாவிலும் பள்ளிக் கல்வியில் தாய்மொழியைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நிலை எப்படியிருக்க வேண்டும்?
    – ம.நாகலிங்கம், திட்டக்குடி
ப :    தமிழ்நாட்டில் முன்பு செய்யப்பட்ட-போது, நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றதுபோல இப்போதும் வாங்க முயற்சிப்பவர்கள் இருப்பார்களே, என்றாலும் செய்தாக வேண்டும்!

 

கே :    “தீய திராவிடம் முடியட்டும்’’ என்னும் கிருஷ்ணசாமி போன்றோர்க்கு தங்கள் பதில் என்ன?
    – அ.உதயபாரதி, கெருகம்பாக்கம்
ப :    முன்பதிலே போதும். ‘திராவிடம்’ இல்லாதிருந்தால் இவர் டாக்டராக ஆகியிருக்கவே முடியாது! பரிதாபத்திற்-குரிய பதவிப் பசி!

 

கே :    மனைவியின் கற்பில் சந்தேகப்பட்டு தீக்குளிக்கச் செய்த _ கர்பிணியை காட்டிற்குத் துரத்திய _ தவம் செய்த சூத்திரன் தலையை வெட்டிய ராமனின் ராஜ்யம்தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைக்கப்போகிறதா?
    – இல.சங்கத்தமிழன், செங்கை
ப :    அதைப் புரிந்துகொள்ள வேண்டிய ‘நம் புண்ணாக்குகள்’ புரிந்துகொள்ள-வில்லையே என்ன செய்வது?

 

கே :    இரண்டு அ.தி.மு.க. அணிகளும் இணைய வேண்டுமென்பதில் பார்ப்பனிய ஊடகங்கள் ஆர்வம் காட்டுவது ஏன்?
    – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப :    தங்களுக்கு நல்ல அடிமைகள் _ நிபந்தனை அற்ற சரணாகதியாளர். அரசியலில் அவர்களை வைத்தே சாதித்துக்கொள்ளும் ஆசைதான் _ சூழ்ச்சிதான் காரணம்!

 

கே :    “சங்கரராமன் கொலைவழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? என்று உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசைக் கேள்வி கேட்டுள்ள நிலையில் திரு.நாராயணசாமி அரசாவது மேல்முறையீடு செய்யுமா? அல்லது இதற்கும் ஒரு போராட்டம் நடத்த வேண்டுமா?
– கெ.நா.சாமி, சென்னை-72
ப :    8ஆம் தேதி புதுவையில் திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தி-விட்டதே!

 

கே :    வெளிப்படையாக சி.பி.அய். மற்றும் தேர்தல் ஆணையத்தை மோடி அரசியல் ஆதாயத்திற்குப் பயன்-படுத்துவது உச்சநீதிமன்றத்திற்கு தெரிந்தும் பாராமுகமாய் இருப்பதேன்? சூத்திர அரசு மீதுதான் ஆத்திரம் காட்டுமா?
    – மா.கோபால், வேலூர்.
ப :    அவ்விரண்டும்தான் மத்திய ஆட்சியின் அஸ்திரங்கள். அவ்வப்போது ஏவுவார்கள்.

 

கே :    அ.தி.மு.க.வின் இரு அணித் தலைவர்-களும் தங்களைக் காப்பாற்றிக்-கொள்ள மோடியிடம் அடிபணியும் நிலையில், அக்கட்சித் தொண்டர்களை இன-உணர்வுள்ள ஒரு தலைமையால் ஒருங்கிணைப்பதுதான் ஒரே தீர்வு என்று கூறலாமா?
    – வே.கார்முகிலன், திண்டிவனம்.
ப :    அப்படி அங்கே முதுகெலும்புள்ளவர்-களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்! அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *