’அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு’

மே 16-31

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

நூல்: ‘அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு’ – (முதல் பாகம்)
ஆசிரியர்: ஓஷோ
தமிழில்: சுவாமி ஷ்யாமானந்
பதிப்பாசிரியர்: காந்தி கண்ணதாசன்
முதற்பதிப்பு: ஜனவரி 2017
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்,
23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
தொலைபேசி: 044-24332682/8712
விலை: ரூ.200/-

ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார்.

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். 1956இல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.

1970 ஜூலையில் மும்பைக்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார்.

தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு புது வகையான குடியிருப்பாக மலர்கிறது. புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுக்கிறது.

1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோ மரணமடைந்தார்.

ஓஷோவுடைய 100க்கும் மேற்பட்ட  புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கவிதா மற்றும் கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கின்றன.

கடவுள் என்பது ஒரு தீர்வு அல்ல
ஆனால் அது ஒரு பிரச்சினை!

கேள்வி 1: கடவுள் இல்லை என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?

கடவுள் இல்லை என்பதை நான் நம்பாமல் இருப்பது மட்டுமல்ல, அவர் இல்லை என்பதை நான் நிச்சயமாக அறிவேன். மேலும் அவர் இல்லாமல் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி _ ஏனெனில் கடவுள் இருக்கிறார் என்பது அநேக பிரச்சினைகளை, கஷ்டங்களை உருவாக்கி விடுவதால் வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட சாத்தியப்படாததாக இருந்திருக்கும்.

நான் அது பற்றி உன்னிடம் எந்தக் கோணத்தில் பேசுகிறேனோ அந்தக் கோணத்தில் நீ பார்க்காமல் இருந்திருக்கலாம் _ ஒரு வேளை அந்தக் கோணத்தில் பார்ப்பதற்கு யாரும் எப்போதும் முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம்.

கடவுள் இந்த உலகத்தை படைத்தார் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில், படைப்பு என்பதற்கு கடவுள் என்னும் கொள்கை தேவைப்படுகிறது. உலகம் இங்கு உள்ளது; யாரோ ஒருவர் கண்டிப்பாக அதைப் படைத்திருக்க வேண்டும். யார் அதைப் படைத்திருந்தாலும், அந்தப் படைப்பாளி கடவுளாக இருக்கிறார். ஆனால் இதில் உள்ள கருத்தினை நீ பார்த்தாயா?

இந்த உலகம் படைக்கப்பட்டது என்றால், அதன் பின்னர் இங்கு பரிணாம வளர்ச்சி என்பது இருக்க முடியாது. அதாவது பரிணாம வளர்ச்சி என்றால் படைப்பானது இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

கிறிஸ்தவ கதையை சிந்தித்துப் பார். இந்த உலகினைக் கடவுள் ஆறு நாட்களில் படைத்தார். மேலும் அதன் பிறகு ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்தார், அதிலிருந்து அவர் ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஒட்டுமொத்த படைப்பு ஆறு நாட்களில் முடிக்கப்பட்டது. இப்போது, பரிணாம வளர்ச்சி என்பது எங்கிருந்து தோன்றுவது சாத்தியப்படும்? படைத்தல் என்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தம். முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஆறாவது நாளில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது; மேலும் அதன் பின்னர் பரிணாம வளர்ச்சிக்கான சாத்தியங்கள் இல்லை.

பரிணாம வளர்ச்சி என்றாலே எதுவும் இன்னமும் முழுமை பெறவில்லை என்று அர்த்தமாகிறது. அதனால்தான் பரிணாம வளர்ச்சி சாத்தியமாகிறது. ஆனால், கடவுளினால் முழுமை பெறாத உலகினை படைக்க முடியாது! அது கடவுளின் இயல்பிற்கு எதிரானதாக இருக்கும். அவர் நிறைவானவர். எனவே அவர் எதைச் செய்தாலும் அது நிறைவானதாகவே இருக்கும். அவரும் பரிணாம வளர்ச்சி அடையவில்லை; பரிணாம வளர்ச்சி இல்லையென்றால், எல்லாமே உயிரற்று அப்படியே நின்று போயிருக்கும். அதனால்தான் போப்பாண்டவர்கள் சார்லஸ் டார்வினுக்கு, எதிராக இருந்தனர். ஏனெனில் கூடிய விரைவில் கடவுளினைக் கொன்றுவிடப் போகின்ற ஒரு கருத்தினை அந்த மனிதர் கொண்டுவந்தார். அந்த போப்பாண்டவர்கள் ஒருவிதத்தில் தொலைநோக்கு உடையவர்களாக இருந்தனர்; பரிணாம வளர்ச்சி என்கிற கருத்தில் பிற்காலத்தில் வரப்போகிற சிக்கல்களை அவர்களால் பார்க்க முடிந்தது. (அதனால்தான் டார்வினை எதிர்த்தார்கள்.)

பரிணாம வளர்ச்சி என்பது சாத்தியப்-படாமல் போய்விட்டால், வாழ்க்கையானது எல்லா அர்த்தத்தையும் இழந்துவிடுகிறது. வாழ்க்கையானது எல்லா எதிர்காலத்தையும் இழந்துவிடுகிறது; அதன் பின்னர் வாழ்க்கையில் கடந்த காலம் என்பது மட்டுமே இருக்கும்.

சமயவாதிகள் எப்போதுமே கடந்த காலத்தை நோக்கியவர்களாக இருப்பது ஒன்றும் இயற்கைக்கு எதிரானது அல்ல. ஏனெனில் அவர்களிடம் கடந்த காலம் ஒன்று மட்டுமே உள்ளது. எல்லாமும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டன; எதிர்-காலத்தில் செய்ய வேண்டியது எதுவும் கிடையாது. எதிர்காலம் என்பது காலியானதாக, ஒன்றுமில்லாததாக இருக்கிறது.

நீ படைக்கப்பட்ட ஒருவன் என்கிற கருத்தானது உன்னை ஒரு பொருள் போன்று ஆக்கி விடுகிறது. அது உனது உயிர் உணர்வை வெளியே எடுத்து விடுகிறது.

கடவுள் என்பவர் இல்லாதபோது மட்டுமே நீ ஒரு உயிர் உணர்வாக இருக்க முடியும்.

கடவுளும், ஒரு உயிர் உணர்வாக நீயும் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. அதனால்தான் கடவுள் இல்லை என்று நான் நிச்சயமாகக் கூறுகிறேன். ஏனெனில் நான் எங்கு பார்த்தாலும் உயிர் உணர்வினைக் காண்கிறேன்.

இந்த உயிர்களின் இருப்பு நிலையே, கடவுள் இல்லை, கடவுள் இருக்கவும் முடியாது என்பதற்கான போதுமான நிரூபணமாக இருக்கிறது. ஒன்று நீ இருக்க முடியும் அல்லது கடவுள் இருக்க முடியும்; நீங்கள் இருவரும் சேர்ந்து இருக்க முடியாது. கடவுளை நம்புகின்ற ஒரு மனிதன், அவனை அறியாமலேயே தனது உயர் உணர்வுநிலையை இழந்துகொண்டு இருக்கிறான். அவன் ஒரு ஜடப்பொருள் போன்று ஆகிக்கொண்டு இருக்கிறான். எனவே இங்கு கிறிஸ்தவ ஜடப் பொருட்கள் உள்ளன. இந்து ஜடங்கள் உள்ளன; முகம்மதிய ஜடங்கள் உள்ளன. ஆனால் உயிர்கள் இல்லை. அவர்கள் சுயமாகவே தங்களது உயிர் உணர்வைக் கைவிட்டு விட்டனர்! அவர்கள் தங்களின் உயிர் உணர்வினைக் கடவுளுக்குக் கொடுத்துவிட்டனர்.

கற்பனை உயிருள்ளதாக ஆகிவிட்டது. மேலும் உயிருள்ளது ஒரு கற்பனையாக ஆகிவிட்டது. எனவே நான் விஷயங்களின் சரியான பக்கத்தை மேல்பாகத்தில் இருக்கும்படி செய்கிறேன்.

கடவுள் இல்லை என்று நான் கூறும்போது, எனக்கு கடவுள் மீது எந்த விரோதமும் கிடையாது. கடவுளைப் பற்றி நான் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவர் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பது எனது வேலை அல்ல.

கடவுள் இல்லை என்று நான் கூறும்போது, நீ இழந்துவிட்ட உனது உயிர் உணர்வு நிலையை உனக்குக் கொடுப்பதே எனது நோக்கமாகும்; யாரோ ஒருவரால் மனம் போன போக்கில் உருவாக்கப்பட்ட ஒரு ஜடப்பொருள் அல்ல நீ என்பதை உனக்கு காட்டுவதற்காகவே நான் அப்படி கூறுகிறேன்.

படைத்தல் என்னும் கருத்தானது தன்னிச்சையானது. ஆனால், பரிணாம வளர்ச்சி என்பது தன்னிச்சையானது அல்ல. மனம்போன போக்கில் நடந்த ஒன்று அல்ல.

பரிணாம வளர்ச்சி என்பது முடிவில்லாதது; இந்த உலகமானது இல்லாத காலம் ஒன்று இல்லை. மேலும் இந்த உலகமானது இல்லாமல் போய்விடுகின்ற காலம் ஒன்றும் இங்கு ஒருபோதும் இருக்காது.

ஆகவே யாராவது கடவுளை நம்பினால், அவரால் நீ ஒரு உயிர் உணர்வு என்று நம்புவதற்கு முடியாது.

ஜடப்பொருட்கள் மட்டுமே படைக்கப்படுகின்றன; அவைகளுக்கு ஒரு ஆரம்பமும் ஒரு முடிவும் உண்டு. உயிர் உணர்வுகள் முடிவில்லாதவை.

இந்த உண்மையை உணர்ந்து கொண்ட காரணத்தினால், இந்தியாவில் உள்ள சமண மதம் மற்றும் புத்த மதம் ஆகிய இரண்டு மதங்கள் கடவுள் என்னும் கருத்தினை கைவிட்டுவிட்டன. ஏனெனில் அந்த எண்ணத்தை நீ வைத்திருந்தால் அப்போது நீ கைவிடப்பட்டு விடுகிறாய் என்று அர்த்தம்.

உயிர் உணர்வு என்னும் கருத்து மிகவும்  சிறப்பானது. அவர்கள் இரண்டையும் வைத்துக் கொள்ள விரும்பி இருக்கலாம். ஆனால் அது தர்க்க அறிவுப்படி சாத்தியப்படாது.

நீ படைக்கப்பட்ட ஒருவன் என்றால், உனக்கு சுதந்திரம் என்பது இருக்க முடியாது. சுதந்திரத்தை பெற்றுள்ள எந்த ஒரு இயந்திரத்தையாவது நீ பார்த்திருக்கிறாயா? சுதந்திரத்தைப் பெற்றுள்ள ஏதாவது ஒரு ஜடப்பொருளை நீ பார்த்திருக்கிறாயா? படைக்கப்பட்ட எதுவானாலும் அது படைத்தவரின் கைகளில் உள்ளது. பொம்மலாட்டத்திலுள்ள பொம்மையைப் போல அவர் தனது கைகளில் நூலினை வைத்திருக்கிறார். அவர் அந்த நூலைப் பிடித்து உன்னை ஆட்டுவிக்கிறார். நீ பொம்ம-லாட்டத்தைப் பார்த்திருப்பாய். அதில் நூல்கள் இழுக்கப்படுகின்றன. ஒரு மனிதர் திரைக்குப் பின்னால் இருக்கிறார். உன்னால் அவரைப் பார்க்க முடியாது. நீ வெறுமனே பொம்மை-களை மட்டுமே பார்க்கிறாய். ஆனால் அதில் பொம்மைகள் நடனமாடுகின்றன. சண்டை போடுகின்றன. ஆனால் இவை எல்லாம் பொய்யானவை. பொம்மலாட்டக்காரன்தான் உண்மையில் இருப்பவனாகிறான்.

இதுபோன்ற பொம்மலாட்டப் பொம்மை-களை உலகம் முழுவதிலும், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு மதச் சடங்குகளுடன் நீ பார்க்கலாம். கடவுளின் அனுக்கிரகம் இல்லாமல் மரத்தின் ஒரு இலைகூட அசைய முடியாது என்று இந்து கூறும்போது உன்னைப் பற்றி என்ன என்று சொல்வது? கடவுளின் சித்தப்படி எல்லாமே நடக்கிறது. உண்மையில், அவர் படைத்த அந்த நொடிப் பொழுதிலேயே அவர் எல்லா-வற்றையும் தீர்மானித்துவிட்டார்; அது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. இப்போது, அறிவு ஜீவி மக்களும்கூட இது போன்ற குப்பைகளை நம்பிக்கொண்டு செல்வது விநோதமானதாக இருக்கிறது.

எல்லாமே அவரால்தான் தீர்மானிக்கப்-படுகிறது. அவர்தான் உனது செயல்-களுக்குப் பொறுப்பானவர்; நீ அல்ல. ஆனால் மக்களோ இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாகச் சேர்த்து நம்பிக் கொண்டிருக்-கின்றனர். அதாவது கடவுள் இந்த உலகினைப் படைத்து, ஆண், பெண் எல்லாவற்றையும் படைத்துவிட்டு அதன்பின்னர் எல்லா பொறுப்புகளையும் உன்மீது தூக்கி எறிவது சரியல்ல. உன்னிடம் ஏதாவது தவறு நடந்தால், அதற்கு கடவுள்தான் பொறுப்பு. எனவே, அவர்தான் தண்டிக்கப்பட வேண்டும். நீ ஒரு கொலைகாரன் என்றால், அதன் பின்னர் கடவுள்தான் ஒரு கொலை-காரனைப் படைத்திருக்கிறார்; அப்படி-யானால் அடால்ப் ஹிட்லர், ஜோசப் ஸ்டாலின், மாசேதுங் போன்றவர்களுக்கு கடவுள்தான் பொறுப்பாவார். அவர்தான் இத்தகைய மக்களைப் படைத்தார்.

மதச்சார்புள்ள மனமானது புத்திசாலித்-தனத்தை இழந்துவிடுகிறது. துருப்பிடித்து விடுகிறது. இவைகள் முற்றிலும் ஒற்றுமை இல்லாத விஷயங்கள் என்பதை மறந்து விடுகிறது; கடவுள் மற்றும் சுதந்திரம் ஆகியவை இணக்கமில்லாதவை.

நீ சுதந்திரமானவன் என்றால், அதன்பிறகு இங்கு கடவுள் என்பவர் இல்லை.

உன்னைப் படைத்தவர் இடைவிடாமல் உன்னை கவனித்துக்கொண்டும், இடைவிடாமல் உன்னை சரிபார்த்துக் கொண்டும், இயக்கிக் கொண்டும் இருக்கும்போது உன்னால் எப்படி சுதந்திரமானவனாக இருக்க முடியும்? முதல் விஷயமாக அவர் எல்லாவற்றையும் ஒரு நிலையான திட்டமாக உனக்குள் வைத்து-விட்டார். எனவே நீ அதைத்தான் பின்பற்ற வேண்டும்; அதைத் தவிர நீ வேறு ஒன்றைச் செய்ய முடியாது. கம்ப்யூட்டரில் நீ என்ன விஷயங்களை உள்ளீடு செய்து இருக்கிறாயோ அந்த விஷயங்களை மட்டுமே கம்யூட்டர் பதிலாக அளிக்கும். கம்ப்யூட்டரில் முன்பே உள்ளீடு செய்யாதப் விஷயங்-களை நீ அதனிடம் கேட்டால் அதனால் பதில் கூற முடியாது. கம்ப்யூட்டர் என்பது ஒரு இயந்திர நுட்பம். முதலில் நீ எல்லாத் தகவல்களையும் அதனுள் உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு உனக்குத் தேவைப்படும்போது நீ கம்ப்யூட்டரிடம் கேட்டால், அந்தத் தகவல் உனக்குக் கிடைக்கும்.

படைத்தவன் என்று ஒருவன் இருந்தால் நீயும் ஒரு கம்யூட்டர் போன்றவன்தான்.

அவர் உனக்குள் சில விஷயங்களை உள்ளீடு செய்துள்ளார். அவர் உனக்கு திட்டம் வகுத்துள்ளார். எனவே அதற்கு ஏற்றார்போல நீ காரியங்களைச் செய்கிறாய். நீ ஒரு புனிதனாக இருக்கிறாய் என்றால், அதற்கான பெருமை உன்னைச் சார்ந்தது அல்ல. அது ஏற்கனவே உள்ள திட்டத்தை சார்ந்தது. அதே போல் நீ ஒரு பாவி என்றால் அதற்காக நீ வருத்தத்தையும், கண்டனத்தையும் உணர வேண்டாம். அதற்கு காரணம் உனக்குள் உள்ள திட்டம்தான்.

இந்தியாவில் அது வாழ்நாள் முழுமைக்கு-மான ஒரு காரியம் மட்டுமல்ல, அது அநேக பிறவிகளுக்கும் தொடரக்கூடியது. எனவே எப்படி தேர்ந்தெடுப்பது என்பது உண்மையில் அந்த பெண்களின் மனதில் பெரிய சுமையாக இருக்கும். ஆகவே சில குறிப்பிட்ட விதமாக அவள் கடவுளின் உதவியை நாட முடியும். அதற்காக ஏதாவது உபாயங்களை கண்டுபிடிக்க முடியும். அதாவது இந்தப் புதிரை விடுவிக்கின்ற ஒரு மனிதரை அவள் தேர்வு செய்வதாக கூறலாம். இப்போது அவள் இதை கடவுளிடம் விட்டு விடுகிறாள். அது மிகவும் சுலபமானது.

பத்து தலையுடன் கூடிய இந்த ராவணன் சுயம்வரத்திற்கு வந்திருந்தான். அவனுக்குள் பயம் இருந்தது. ஒரு தலையே போதுமானது. ஆனால் பத்து தலைகளுடன் இருந்ததால் அவன் அசிங்கமாகத் தோன்றினான். மற்றவர்கள் அனைவரும் பயந்தனர். அவன் சுயம்வரத்திற்கு வந்துவிட்டதால் அவனுக்குத்தான் அந்த வில்லினை எடுக்கின்ற வாய்ப்பு அதிகம் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் நினைத்தனர். அயோத்தியின் இளவரசன் என்கிற முறையில் ராமரும்கூட அந்த சுயம்வரத்தில் கலந்துகொண்டார். அவர் மிகவும் இளைஞனாக இருந்தார். அவர் சிறந்த போர் வீரரா என்பது தெரியாது. இந்தப் போட்டியில் அவர் ஜெயிப்பது சாத்தியப்படாது.

எனவே, இந்தப் போட்டியில் ராமன் வென்று சீதையை மணம் முடிக்க வேண்டும் என்று விரும்பிய முனிவர்கள் ஒரு சதி ஆலோசனை செய்தனர். அதாவது ராவணன் அந்த வில்லினைத் தூக்குவதற்குப் போகும்போது ஒரு மனிதன் ஓடிவந்து ராவணனிடம், “தங்கத்தினால் ஆன உங்களது தலைநகரம், நெருப்பில் எரிகிறது. எனவே நீங்கள் உடனடியாக அங்கு தேவைப்படுகிறீர்கள். நீங்கள் இல்லையென்றால் எல்லாமே போய்விடும்.’’ என்று கூறும்படிச் செய்தனர். அந்த அப்பாவி ராவணன் வில்லைக் கீழே போட்டுவிட்டு இலங்கைக்கு விரைந்து சென்றான்.

ஆனால் உனது உயிர் உணர்வானது படைக்கப்பட்ட ஒன்று என்றால் அதன் பின்னர் எந்த திட்டத்தோடு நீ படைக்கப்பட்டாயோ அதை விட்டு மாறாக வேறு எங்கும் நீ போவதற்கு சாத்தியம் இருக்காது.

கடவுள் என்னும் கருத்துதான் மதப் பற்றிற்கு எதிரான மிகப் பெரிய கருத்தாகும்.

நீ அந்தக் கருத்தின் ஒவ்வொரு நோக்கத்தையும் உற்று நோக்கிப் பார்த்தால், அதன் பின்னர் கடவுளை நம்புகிறவர்கள் சமயப் பற்றாளர்களாக இருக்க மாட்டார்-கள், இருக்கவும் முடியாது.

இப்போது இந்த முட்டாள்களை மக்கள் நம்புகின்றனர். ஏனெனில் புனித நூல்கள் அவர்-களுக்கு ஆதரவாக உள்ளன. எங்கும் நிறைந்த, சர்வ வல்லமை படைத்த, எல்லாம் அறிந்தவர்களாக கருதப்படுகின்ற அவதாரங்கள் மற்றும் தீர்த்தங்கரர் களினால் பேசப்பட்ட, புனித நூல்களில் உள்ள மேற்கோள்களை எல்லாம் ஒன்று சேர்த்து வைத்திருக்கின்றனர். அவர்கள் தான் கடவுளின் தூதுவர்களாக கருதப்-படுகின்றனர். மேலும் அவர்கள் இப்படிக் கூறும்போது, அப்பாவி விஞ்ஞானிகளால் என்ன செய்ய முடியும்?

கடவுள் தனது சொந்த உருவில் மனிதனைப் படைத்தார் என்பதை மனிதன் தன்மீது திணித்துக் கொண்டு இருப்பதால் மனிதன், தான் எதை இழந்துகொண்டு இருக்கிறான் என்பதை அறிவதில்லை.

மதிப்புமிக்க எல்லாவற்றையும், அழகான எல்லாவற்றையும், அவனுக்கு வரப்பிரசாதமாக ஆகின்ற அனைத்தையும் மனிதன் இழந்து கொண்டு இருக்கிறான்.

மதப் பற்றாளன் என்று தன்னை அழைத்துக் கொள்கிறவன் கற்பனையான ஒன்றின்மீது தன்னை குவியச் செய்து கொண்டு தனது சொந்த உண்மை நிலையை மறந்துவிட்டு இருக்கிறான். தன்னை மறந்துவிட்டு மேலே, ஆகாயத்தில் வேறு யாரோ இருப்பதாக நினைத்துக்கொண்டு இருக்கிறான். மேலே வானத்தில் இருக்கின்ற அந்த மனிதன் என்பது இல்லாத ஒன்றாகும். ஆனால் இல்லாத ஒன்றின்மீது உனது மனதைக் குவித்து விட்டு, அப்படி மனதைக் குவிப்பதில் நீ உன்னையே மறந்துவிட முடியும்.

ஆனால், அங்குதான், அதாவது உனக்குள்தான் உண்மையான மதம் நிகழ்கிறது.
எனவே பிராத்தனைக்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை.

எனது மதத்தில் பிராத்தனைக்கு இடமல்லை.

எந்த ஒரு உண்மையான மதமும் முற்றிலும் போலியான பிராத்தனை போன்ற எதையும் கொண்டிருக்க முடியாது.

பிராத்தனையில் நீ என்ன செய்கிறாய்? நீ சொந்தமாக கற்பனை செய்துகொண்ட ஒரு உருவத்தினை முதலில் உருவாக்குகிறாய். அதன்பின் உனது சொந்த கற்பனை உருவத்திடம் சரணடைகிறாய். அதன்பின்னர் அதோடு பேசுகிறாய். நீ வெறுமனே ஒரு பைத்தியக்கார செயலை செய்கிறாய்.

உலகின் எல்லா தேவாலயங்களிலும், எல்லா யூத கோவில்களிலும், எல்லா இந்துக்கோவில்களிலும் மற்றும் மசூதிகளிலும் மக்கள் பைத்தியக்காரத்தனமான ஒன்றினை செய்து-கொண்டு இருக்கின்றனர்; எனவே, இந்த பூமி முழுவதிலும் இப்படிப்பட்ட பைத்தியக்கார மக்களால் நிறைந்து இருக்கிறது.

என்னைப் பொறுத்தமட்டில், மதம் என்பது ஒரு அபரிமிதமான விஷயமாகும்.

இந்திய இலக்கியம், வரலாறு, சமய இயல் ஆகியவற்றில் மிகவும் புகழ் பெற்ற ஒருவர் கல்கத்தாவில் இருந்தார். அவர் அபூர்வ மனம் படைத்தவர். அவர் பெயர் ஈஸ்வர சந்திர வித்யா சாகர். வித்யாசாகர் என்றால் அறிவுக் கடல் என்று அர்த்தம். இந்து மத அறிவு ஜீவிகளின் அகில இந்திய மாநாட்டில் அந்தப் பட்டம் அவருக்கு கொடுக்கப்-பட்டது. அந்தப் பட்டம் இதற்கு முன்பும், இதுவரையிலும் யாருக்கும் கொடுக்கப்-படவில்லை. அவர்கள் அறிவுக் கடல் என்று அழைத்ததற்குத் தக்கபடி அவர் உண்மையில் ஒரு கடல் போன்று இருந்தார்.

அவர் எந்த அளவுக்கு அறிவு நிறைந்தவர் என்பதை நான் காட்டுகிறேன். அவர் புகழ்பெற்ற அறிவு மேதை என்பதாலும் அவருக்கு அநேக இடங்களில் இருந்து இலக்கியத்தில் முனைவர் பட்டம் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு சமஸ்கிருதப் பல்கலைக்கழகமானது அவருக்கு இலக்கியத்தில் முனைவர் என்பதற்கு பதிலாக ‘வித்யா வாரிதி’ என்னும் பட்டம் கொடுத்தது. அதற்கும்கூட ஞானக்கடல் என்றுதான் அர்த்தம். மற்றொரு இடத்தில் இருந்தும் அவருக்கு ‘வித்யா வசஸ்பதி’ என்னும் பட்டம் கொடுக்கப்-பட்டது. மேலும் காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகம் அவருக்கு ‘மகா மகோ பாத்யாயா’ என்னும் பட்டம் கொடுத்தது.

அவரிடம் இந்தப் பட்டங்கள் அனைத்தும் இருந்தன. மேலும் நாடு முழுவதும் அவர் மதிக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக வங்காளத்தில் யாரும் அவர் அருகில்கூட வரமாட்டார்கள். ஒரு நாடகத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். மிகப்பெரிய மனிதர்கள் அந்த நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் அதைத் துவக்கி வைக்க வேண்டும் என்பதை அவரால் மறுக்க முடியவில்லை. இந்தியாவின் வைஸ்ராய்கூட அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தது. ஏனெனில் கல்கத்தா அப்போது இந்தியாவின் தலைநகரமாக இருந்தது. எனவே அவர் அந்த நாடகத்தைத் துவக்கி வைப்பதற்காக வந்தார்.

ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு நாவலையோ உணர்ச்சி மேற்கொண்டு பார்க்கும்போதோ அல்லது படிக்கும்போதோ உன்னையே மறந்துவிடுகிறாய். ஆனால் இதைத்தான் உனது சமயப் பற்றாளர்கள் செய்து கொண்டு இருக்கின்றனர். உன்னால் கற்பனை செய்யக்கூடிய எல்லா வகையான ஆண் மற்றும் பெண் கடவுள்களின் உருவத் தோற்றத்தோடு தங்களை அய்க்கியப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை முற்றிலும் மறந்து விட்டார்கள். இல்லாத ஒன்றினை அவர்கள் வழிபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த அளவுக்கு ஒரு நோக்கத்தோடு வழிபடுவதால் அது குறித்த மனத் தோற்றத்தை அவர்களால் உருவாக்க முடியும்.

இத்தனை ஆண்டுக் காலமும் மதம் என்று அழைத்துக் கொண்டு வெறும் முட்டாள்-தனத்தில் நாம் காலத்தை வீணாக்கிவிட்டோம்.

அறியமுடியாத உயரத்திற்கும், காணமுடியாத ஆழத்திற்கும், மனிதன் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டிய அதிக காலத்தை நாம் இப்படி வீணாக்கிவிட்டோம்; தனித்தன்மையிலும், ஒருங்கிணைப்பிலும், விடுதலையிலும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டியதை நாம் இப்படி வீணாக்கிவிட்டோம். வெறுமனே மோசடியான, ஒரு காசுக்குக்கூட பிரயோஜன-மில்லாத, ஒரு பொய்யான கடவுளின் பின்னால் இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளை நாம் வீணாக்கிவிட்டோம். ஆனால் நீயோ என்னிடம், “நீங்கள் உண்மையில் கடவுளை நம்புவதில்லையா?’’ என்று கேட்கிறாய்.

நம்புதல் அல்லது நம்பாமல் இருத்தல் என்கிற கேள்விக்கே இங்கு இடமில்லை. நம்புவதற்கோ அல்லது நம்பாமல் இருப்பதற்கோ இங்கு யாரும் இல்லை. இங்கு கடவுள் இல்லை.

ஆகவே தயவு செய்து நினைவில் கொள். அதாவது நான் கடவுளை நம்பாதவன் என்று சொல்ல ஆரம்பித்து விடாதே. நான் கடவுளை நம்புகிறவனும் இல்லை, நம்பாதவனும் இல்லை.

இந்த ஒட்டுமொத்த விஷயமும் மனித மனதின் வெறும் திரையிடல் மட்டுமே என்று நான் வெறுமனே கூறுகிறேன். மேலும் நமக்கெதிராக நாமே விளையாடிக் கொண்டிருக்-கின்ற விளையாட்டினை நிறுத்துவதற்கான நேரம் இதுவாக இருக்கிறது.

கடவுளை “சுகமாகப் போய்வருக’’ என்று எப்போதைக்கும் நாம் கூறவேண்டிய நேரமிது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *