2050ஆம் ஆண்டில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் மீன்களைவிட அதிகமான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆர்க்டிக்கில் இன்று நூற்றுக்கணக்கான பில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதாகவும் அவை கடல் நீரோட்டத்தால் பல ஆயிரம் மைல்கள் அடித்துச் செல்லப்பட்டு Greenland seas) பேரன்ட்ஸ் அண்ட் கிரீன் லாண்ட் கடல் பகுதியில் சேர்வதாகவும் கூறுகின்றன ஆய்வுகள்.
இவைகளின் நுண்ணியத் துண்டுகள் கடல் விலங்கினங்களின் இரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதோடு அவற்றின் சதைப் பகுதிகளிலும் படிந்து விடுகின்றன.
காடிஷ் கல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஆண்ட்ரஸ் கோஷர் என்பவர் தலைமையில் பயணம் செய்து 100 முதல் 1200 டன்கள் கொண்ட 300 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பனிக்கட்டியில்லா தண்ணீரில் (Ice Free Water) மிதப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். இது மாசு கட்டுப்பாட்டாளர்களுக்கு ஒரு கவன ஈர்ப்பு அறைகூவலாக)(Wake up call) விளங்குவதாக சூகின்சி என்ற கடற் பாதுகாப்பு சங்க அலுவலர் தெரிவிக்கின்றனர்.