ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிநவீனக் கேமரா ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கேமராவின் மூலம் ஒரு நொடிக்கு ஐந்து லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை கேமராவில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது அதில் உள்ள பல்வேறு குறியீட்டுச் செயல்களைப் படமாக எடுக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கண்ணாடி பாட்டில் உடைக்கப்படும்போது உடைந்து சிதறும் ஒவ்வொரு பாகத்தையும் இந்தக் கேமராவால் படம் எடுக்க முடியும். இந்தப் படங்கள் பின்னர் வீடியோவாகப் பார்க்கும்போது அந்தப் பொருளில் இருந்து வெளிப்பட்டுள்ள பல வடிவங்களைப் பார்க்க முடியும்.
இந்த வகை கேமராவில் பதிவுசெய்யப்படும் காட்சிகளை வேதியியல், இயற்பியல், உயிரியல், மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுத்த உதவும். பல வேதியியல் மாற்றங்களின் நுண்ணிய விஷயங்களைக் குறிப்பாக உயிரினங்கள் மூளை செயல்படும் விதம், வெடி குண்டுகள் வெடிக்கும் விதம், பிளாஸ்மா ஃப்ளாஷ், மற்றும் ரசாயன விளைவுகள் ஆகியவற்றை இந்தக் கேமராவைக் கொண்டு கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கேமராவை வடிவமைத்துள்ள இலியாஸ் கிரிஸ்டன்சன் (Elias Kristensson),, ஆண்ட்ரியாஸ் என் (Andreas Ehn) ஆகியோர் கூறுகையில், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பொருளின் பல்வேறு செயல்களைப் படம் பிடிக்க வேண்டும் என்றால், அதற்காக இனி தனியாகக் கேமராவில் புதிய வேகப் பதிவு (sமீt ஸீமீஷ் sஜீமீமீபீ க்ஷீமீநீஷீக்ஷீபீ) செய்யத் தேவையில்லை. இந்தக் கேமராவின் மூலம் ஒரு குறிப்பிட்ட செயலில் ஒரேமாதிரியான மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன என்பதை ஒரே “கிளிக்கில்’’ கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். இந்தக் கேமராவுக்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ‘திஸிகிவிணி’ ‘FRAME’ (Frequency Recognition Algorithm for Multiple Exposures) என்பதாகும். அ