இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உலகின் கடல்மட்டம் 2100ஆம் ஆண்டிற்குள் 3 மீட்டர் உயர்வதைத் தடுப்பது மிகக் கடினம் எனக் கூறுகிறது. கரியமிலவாயு வெளியேற்றத்தைக் (சிஷீக்ஷீதீஷீஸீ-பீவீ-ளிஜ்நீவீபீமீ) குறைக்காவிடில் இந்நிகழ்விலிருந்து தப்ப முடியாது என எச்சரிக்கின்றனர். இது ஒரு விரும்பத்தகாத நிகழ்வுதான் என்றாலும் இதைத் தவிர்க்க இயலாது என்கிறார் ‘சைபர்ன் டிரிப் -ஹவுட்’ என்கிற பேராசிரியர். உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கத் தவறினால் இன்னும் சில நூறு ஆண்டுகளில் கடல்மட்டம் 10 மீட்டர் அளவுகூட உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கூறுகிறார். தாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய நகரங்கள் கூட கடலில் மூர்குவதற்கான சாத்தியம் உள்ளதாகக் கூறுகிறார்.
ஆதாரம்:
டைம்ஸ் ஆஃப் இந்தியா
24.08.2017