வாகனங்களின் டயர்களில் ஒரே சீரான காற்று அழுத்தத்தை பராமரிப்பது மிகவும் கடினமான செயல். 15 சதவீத வாகன விபத்து களுக்கும், 40 சதவீத எரிபொருள் வீணாவதற்கும் காற்று அழுத்தம் சீராக இல்லாததே காரணம் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஆர்எம்கே மாணவர் ஜி.தீபக் இதைச் சவாலாக ஏற்று வாகன டயர்களில் காற்றின் அழுத்தத்தை சீராகப் பராமரிக்கும் முறையை பரிசோதனை முறையில் செய்து வெற்றி கண்டுள்ளார். இதற்காக அவர் தமது கல்லூரி மூலம் காப்புரிமையும் பெற்றுள்ளார்.
மேலும் ஆர்எம்கே கல்லூரிப் பேராசிரியர் கே.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில் ஜி.தீபக்கின் கண்டுபிடிப்புக்கு புதுமை மற்றும் தொழில் மேம்பாட்டு மையம் மூலம் ஒரு லட்சம் ரூபாய் நிதி கிடைத்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சிறந்த மாணவர் திட்டம் 2016-க்கான ‘ஐஎஸ்டிஇ-மணக்குள விநாயகர்’ விருது வழங்கப்பட்டது.
ஆர்எம்கே பொறியியல் கல்லூரி ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்கியுள்ளது. டாக்டர் கலாம் கல்வி அறக்கட்டளையின் சிறந்த திட்டம் விருதுக்கு தீபக்கின் புதிய கண்டுபிடிப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அகில இந்திய உற்பத்தி யாளர்கள் அமைப்பு & அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஏப்ரல் 18ஆ-ம் தேதி நடத்தப்பட்ட டெக்னவ் – 2017′ என்ற தலைப்பிலான தேசிய மாணவர் திட்டப் போட்டியில் தீபக்கின் கண்டுபிடிப்புக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதனை வழங்கினார்.
——————————————————————————————————————————
உயிர்கள் வாழ ஏற்ற புதிய கிரகம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய கிரகம் ஒன்றை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் கண்டு-பிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்தில் இருந்து 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிவப்பு நிற நட்சத்திரம் உள்ளது. இதனை இந்தப் புதிய கிரகம் சுற்றி வருகிறது என்று அய்ரோப்பிய வானியல் மய்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் எல்.எச்.எஸ்.1140பி. சூப்பர் எர்த் என இந்தப் புதிய கிரகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிரகம் உருவாகி இருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிரகம் பூமியைவிட அதிக விட்டம் கொண்டது. 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதன் மீது வெளிச்சம் விழும். கடந்த பிப்ரவரி மாதம் நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள இந்தக் கிரகத்தில் கார்பன் அடிப்படையிலான கரிமப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி புளூட்டோவின் உறைந்த மேற்பரப்பில் மறைந்திருக்கும் ஒரு பெரிய கடல் இருக்கலாம் என்று நவம்பர் மாதத்தில், நியூ ஸ்பேஸ் ஏஜென்சியின் நியூ ஹார்ஜான்ஸ் விண்கலம் கண்டுபிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.