ஏடாகூடம் ஏதுசாமி

ஆகஸ்ட் 01-15

– படமும், கருத்தும் : கர்ணா


பத்மநாபசுவாமி கோயிலில் தங்க வைரக் குவியல்! – செய்தி

பார்த்தீங்களா நாயர்… ந்கைகளெல்லாம் அரசர்களும், பக்தர்களும் காணிக்கையா கொடுத்ததாம்… நூறு சதவீதம் படிப்பறிவு உள்ள உங்க கேரளாவிலேயே, ஜீரோ சதவீதம் அறிவு பெற்ற பக்தர்களும் வாழ்ந்திருக்காங்க…!

பத்மநாப கோவிலில் தங்கப் புதையல் இருப்பதைத் தெரியப்படுத்திய 70 வயது முதியவர் மரணம்! – செய்தி

முதியவர்கள் மரணமடைவது இயற்கைதானே? பத்மநாபரின் நகைகளைக் காட்டிக் கொடுத்தால்தான் செத்தார்ன்னு சர்ச்சையைக் கிளப்புறீங்களே…. ஏன். பெரியவர் இறப்பதற்கு முன் உங்க பத்மநாபரே அவர் மூலமா நகையிருக்கும் இடத்தை மக்களுக்குத் தெரியப்படுத்திட்டாருன்னும் எடுத்துக்கலாம்ல…?


திருப்பதியை முந்தியது திருவிதாங்கூர் கோயில்! – செய்தி

இலவசமா மொட்டை போட்டு, இலவசமா தரிசனம் பாத்துட்டு, இலவச சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டுப் போற பக்தர்கள் இனிமே, பெருமாளைப் பாக்கணும்னா ஒவ்வொருத்தரும் ஒரு தங்கக் காசோடதான் வரணும்னு தேவஸ் தானம் அறிவிச்சிடச் சொல்லுங்க…..  அப்புறம் பாருங்க, மருபடியும் நீங்கதான் நம்பர் ஒன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *