– படமும், கருத்தும் : கர்ணா
பத்மநாபசுவாமி கோயிலில் தங்க வைரக் குவியல்! – செய்தி
பார்த்தீங்களா நாயர்… ந்கைகளெல்லாம் அரசர்களும், பக்தர்களும் காணிக்கையா கொடுத்ததாம்… நூறு சதவீதம் படிப்பறிவு உள்ள உங்க கேரளாவிலேயே, ஜீரோ சதவீதம் அறிவு பெற்ற பக்தர்களும் வாழ்ந்திருக்காங்க…!
பத்மநாப கோவிலில் தங்கப் புதையல் இருப்பதைத் தெரியப்படுத்திய 70 வயது முதியவர் மரணம்! – செய்தி
முதியவர்கள் மரணமடைவது இயற்கைதானே? பத்மநாபரின் நகைகளைக் காட்டிக் கொடுத்தால்தான் செத்தார்ன்னு சர்ச்சையைக் கிளப்புறீங்களே…. ஏன். பெரியவர் இறப்பதற்கு முன் உங்க பத்மநாபரே அவர் மூலமா நகையிருக்கும் இடத்தை மக்களுக்குத் தெரியப்படுத்திட்டாருன்னும் எடுத்துக்கலாம்ல…?
திருப்பதியை முந்தியது திருவிதாங்கூர் கோயில்! – செய்தி
இலவசமா மொட்டை போட்டு, இலவசமா தரிசனம் பாத்துட்டு, இலவச சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டுப் போற பக்தர்கள் இனிமே, பெருமாளைப் பாக்கணும்னா ஒவ்வொருத்தரும் ஒரு தங்கக் காசோடதான் வரணும்னு தேவஸ் தானம் அறிவிச்சிடச் சொல்லுங்க….. அப்புறம் பாருங்க, மருபடியும் நீங்கதான் நம்பர் ஒன்