ஆசிரியர் பதில்கள்

ஏப்ரல் 01-15

 

கே:       மாணவர் எழுச்சியை திராவிட இயக்கங்களுக்கு எதிராக மடைமாற்றம் செய்கிறதே தமிழ்த் தேசியக் கட்சிகள். எனவே, மாணவர்களுக்குத் தெளிவு உண்டாக்கத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்வீர்களா?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           அவர்களது முயற்சி எடுபடாது; காரணம் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதனை முறியடிக்க நமது இளைஞர்கள், மகளிர் உட்பட அனைவரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்களே!

கே:       நீட் தேர்வு விலக்கப் பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரைவில் தீவிர போராட்டத்திற்கு ஏற்பாடு செய்வீர்களா?

                – கு.சமத்துவன், கும்பகோணம் – 2.

ப:           ஏற்கனவே ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து நடத்தியது போதிய பலனைத் தந்துள்ளது; மேலும் அழுத்தம் தர சிறைநிரப்பும் போராட்டமே ஒரே வழி. தேவைப்படும்போது அதில் இறங்கும் கழகம்.

கே:       இந்திய அளவில் மதவாத ஆட்சி அதிகரிக்க, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையின்மையே காரணமாவதால், மதச்சார்பற்ற அணி அமைக்க நீங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா?

                – சீ.புரட்சிமணி, கரூர்

ப:           நடந்துகொண்டுள்ளது.

கே:       மக்கள் தேர்ந்தெடுக்காத, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகளை பா.ஜ.க. முதல்வராக, மந்திரிகளாக ஆக்குவது எதைக் காட்டுகிறது?

                – ந.காவியா, திண்டுக்கல்

ப:           திட்டமிட்ட மறைமுகத் திட்டத்தை (பிவீபீபீமீஸீ கிரீமீஸீபீணீ), ஆர்.எஸ்.எஸ். மத்திய அரசு மூலம் சாதித்துக்கொள்ள முயலுவதையே காட்டுகிறது.

கே:       உத்திரப்பிரதேசத்தில் யோகி, ஆதித்தியா முதலமைச்சரானவுடன் இராமாயணப் பூங்கா, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகத்தில் பள்ளிகள் எனத் தொடக்கமே ஆபத்தாக இருக்க, இவற்றைத் தடுக்க நாடு தழுவிய திட்டம் தீட்டுவீர்களா?

                – கெ.நா.சாமி, சென்னை – 72

ப:           முற்போக்குச் சக்திகள் தானே திரளுவது காலத்தின் கட்டாயம் ஆகும். எல்லாம் நாமே செய்வோம் என்பதுதானே!

கே:       கோவையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் முகாமிட்டுள்ளது, தமிழகத்தில் தங்களை வளர்ப்பதற்கு சதித் தீட்டவா?

                – இல.சங்கத்தமிழன், செங்கை

ப:           92 ஆண்டுகளாக இங்கு வராதவர்கள் இப்போது வருகிறார்கள் என்றால் அது ஆழ்ந்து, கூர்ந்து பார்த்து, அதன் சூழ்ச்சியை முறியடிப்பதில் முற்போக்குச் சக்திகள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். தமிழ் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக்க விடவேக் கூடாது!

கே:       “நீட் தேர்வுக்கு தமிழகம் விதிவிலக்கு கேட்பது அவமானம்’’ என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது அவரது அறியாமையைக் காட்டுவதுதானே? நீதிபதியின் தப்பைக் கண்டிக்க வழி என்ன?

                – தி.சீத்தாபதி, தாம்பரம்

ப:           அப்படியானால் இடஒதுக்கீடு, அரசியல் சட்டத்தில் உள்ள சமூகநீதி கேட்பது அவமானமா? புரியவில்லை!

கே:       வளர்ச்சி என்று மோடியின் முகம்காட்டி வாக்குப் பெற்று, ஆரிய சனாதன ஆதிக்க வளர்ச்சியில் மட்டும் அக்கறை செலுத்தி, நாட்டின் வளர்ச்சியை நாசமாக்குவது மோசடியல்லவா?

                – தி.குணாளன், வேலூர்_1

ப:           ‘வளர்ச்சி’ என்பது முகமூடி என்பதை நாம் துவக்கத்திலிருந்து வலியுறுத்தி வருகிறோமே!

கே:       நடிகர் கமலஹாசன் அவர்கள், “பெண்ணைப் பணயப் பொருளாக்கிய மகாபாரதம்’’ என்று கூறியதற்கு, குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதே? உண்மையைத்தானே சொன்னார்?

                – ச.பாஸ்கர், தேனாம்பேட்டை

ப:           உண்மையைப் பேசினால் உளம் எரிச்சல் கொள்ளும் உன்மத்தர்களின் பாசறைதான் ஹிந்து முன்னணி போலும்!      

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *