அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிலையத்தில் உதவித் தொகையுடன் கோடைக்காலப் பயிற்சி பெறலாம்.
பெங்களூருவில் அய்அய்எஸ்சி இந்தியாவில் உள்ள முக்கிய அறிவியல் கல்வி நிறுவனம். அறிவியல், பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கும் திட்டத்தை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இந்தப் பயிற்சியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன், புத்தகங்கள் வாங்குவதற்காக ரூ.1,500 வழங்கப்படும். இந்தப் பயிற்சிக்காக பெங்களூரு வந்து போக இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் வழங்கப்படும். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் விடுதியில் இலவசமாகத் தங்கவும் உணவுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தப் பயிற்சியில் சேரத் தகுதிகள்:
உயிரியல், இயற்பியல், வேதியியல், கணித அறிவியல் பாடங்களில் எம்எஸ்சி முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களும் பி.இ., பி.டெக். படிப்புகளில் மூன்றாம் ஆண்டு (அதாவது 2016-_2017 கல்வி ஆண்டில்) படிக்கும் மாணவர்களும் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தின் பிரிண்ட் அவுட் எடுத்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதில் கல்லூரி முதல்வரின் கையொப்பத்தைப் பெற வேண்டும். அதனை ஸ்கேன் செய்து மீண்டும் இணையதளத்தில் ஏப்ரல் 15_ஆம் தேதிக்குள் பதிவிட வேண்டும்.
விவரங்களுக்கு:

விவரங்களுக்கு: www.lisc.ac.in
தொலைபேசி எண்: 080 – 2293 2937