பெரியாரை அறிவோமா?

ஆகஸ்ட் 01-15

1.    அறிவு ஆசான் பெரியார் பள்ளியில் பயின்ற ஆண்டுகள்

அ) 5 ஆண்டுகள் ஆ) 10 ஆண்டுகள் இ) 8 ஆண்டுகள் ஈ) இன்டர் மீடியேட்

2.  ஈரோடு நகர மன்றத் தலைவராக இருந்தபோது பெரியாருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பட்டம் யாது?

அ) ராவ் பகதூர் ஆ) ராவ் சாகிப் இ) டாக்டர் பட்டம் ஈ) சர் பட்டம்

3.  பெரியார் தம்முடைய பேச்சில் அடிக்கடி வெங்காயத்தைப் பயன்படுத்தியதற்குக் காரணம்

அ) அவருக்கு வெங்காயம் பிடிக்கும்    ஆ) அவர் வெங்காய மண்டி வைத்திருந்தார் இ) வெங்காயம் மிகவும் காரம் என்பதால்  ஈ) உரித்தால் ஒன்றும் இல்லாதது என்பதால்

4. காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கம் தந்தை பெரியாரைக் கவர்ந்திடக் காரணம்

அ) தீண்டாமை விலக்கும் ஜாதிபேத ஒழிப்பும் ஆ) உத்தியோக விலகல் இ)சட்டசபைக்குப் போவதோ பதவி யேற்பதோ கூடாது ஈ) இவை யாவும்

5. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து வெளியிட்டவர் யார்?

அ) பெரியார் ஆ) ம. சிங்காரவேலர்
இ) சக்லத்வாலா ஈ) ஹிரேன் முகர்ஜி

6.  மே நாள் கொண்டாட வேண்டும் என்று பெரியார் அறிக்கை விடுத்த ஆண்டு எது?

அ) 1933 ஆ) 1931 இ) 1935 ஈ) 1952

7. ஒரு பொருளின் மீது தாம் பற்றுவைப்பதற்குக் காரணம் யாது என பெரியார் சொல்கிறார்?
அ) பொருளின் பழைமை  ஆ) பொருளின் அழகு இ) பொருளின் புதுமை ஈ) பொருளின் குணமும் அதனால் ஏற்படும் நற்பயனும்

8. தேசமோ மக்களோ முன்னேறத் தேவையானது என்ன என பெரியார் சொல்கிறார்?

அ) மக்கள் தொகைக் குறைப்பு ஆ) மதமும் கடவுளும் ஒழிய வேண்டும் இ) அறிவும் விஞ்ஞான தத்துவமும் ஒழுக்கமும் முன்னேற வேண்டும் ஈ) லஞ்ச ஒழிப்பு

9.    தந்தை பெரியார் வாழ்ந்த இல்லம் தற்போது எப்படி அழைக்கப்படுகிறது?

அ) வெங்கட்ட நாயக்கர் இல்லம் ஆ) பெரியார் இல்லம் இ) பெரியார் மன்றம் ஈ) பெரியார் அண்ணா நினைவகம்

10. என்னால் மூன்று மணி நேரத்திற்கு மேலும் இவருடைய பேச்சு ஒன்றை மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்க முடியும் என்று பெரியாரைப் பாராட்டிய பார்ப்பன எழுத்தாளர் யார்?

அ) கி.வா.ஜ. ஆ) வ. ராமசாமி இ) எஸ்.எஸ். வாசன் ஈ) கல்கி கிருஷ்ணமூர்த்தி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *