தேவைக்கேற்ப புதிய புதிய கருவிகளை உருவாக்கிக் கொள்கிறான் மனிதன். தொலைதூரச் சுற்றுலாப் பயணங்களில் திடீரென்று குறுக்கிடும் நதியை, ஏரியை கடக்க ஒரு படகை உருவாக்கியுள்ளான்.
நீரில் மிதக்கும் இந்தப் படகை, கரைக்கு வந்ததும் மூன்று நான்காகச் சுருட்டி கைப்பையில் வைத்துக்கொண்டு நீங்கள் நடந்து செல்லலாம்.
2.8 மீட்டர் நீளமுள்ள இந்தப் படகு ஒரு பை போன்றது. அதைப் பிரித்து, தேவையான சட்டங்களை குறுக்காகவும் நெடுக்காகவும் பொருத்தி, காற்றடித்தால், 5 நிமிடத்தில் படகு தயாராகிவிடும். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் ஹோலி ஸ்பிரிங்ஸ் என்ற நகரில் உள்ள ஜிலீமீ திஷீறீபீவீஸீரீ ஙிஷீணீt சிஷீனீஜீணீஸீஹ் என்ற நிறுவனம் இந்தப் படகைத் தயாரித்துள்ளது.