பாடாத தேனீ!
வாடாத மலர்!
ஆடாத மயில்!
கூவாத குயில்!
பிளிறாத வேழம்!
குளிராத பனி!
அலையடிக்காத கடல்!
ஆர்ப்பரிக்காத வெள்ளம்!
பழம் தின்னாக் குரங்கு!
பதுங்கிப் பாயாத புலி!
கர்ச்சிக்காத சிங்கம்!
கரையாத காகம்!
மறையாத நிலவு!
முடியாத இரவு!
விடியாத காலை!
கடிக்காத வெறிநாய்!
துடிக்காத இதயம்!
வெடிக்காத பருத்தி – பணி
முடிக்காத வீரன்!
இது எதுவும் அதிசயமல்ல….!
அம்மையாரின் ஆட்சியில் –
படிக்காத பள்ளிக்கூடம்
நடக்குதா இல்லையா?
– காழி கு.நா.இராமண்ணா, திருமுல்லைவாயல்