The Factory –Documentary film
The Factory என்ற ஆவணப் படத்தை 18ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த திரையிடலில் பார்த்தேன். 2011ஆம் ஆண்டு ஹரியானாவின் மனேசர் என்ற ஊரில் இருக்கும் மாருதி சுசூகி தானியங்கி வாகன தொழிற்-சாலையில் தொழிலாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு மேலாளர் இறந்துவிட அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 147 பேரை சிறையில் அடைத்தது அந்த நிறுவனம். தொழிலாளர்கள் தங்கள் உரிமையை மீட்டெடுக்க தங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் அமைக்க நிறுவனத்-திடம் அனுமதி கேட்க அதை அந்த நிறுவனம் மறுத்தது. அப்போது ஆரம்பித்த சிறு போராட்டம் நிறுவனம் பலரை வேலை நீக்கம் செய்தபோது பெரிய போராட்டமாக வெடித்தது. அந்தப் போராட்டத்தில் நிறுவனத்தின் ஒரு தளம் தீப்பிடித்து எரிந்துபோக அதிலிருந்த ஒரு மேலாளர் இறந்து போகிறார். இறந்துபோன அந்த மேலாளர், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அவர்களுக்கு உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுக்கு உதவி செய்த மேலாளரையே தொழிலாளர்கள் கொன்றுவிட்டதாகப் பட்டம்கட்டி 147 பேர் மீது வழக்குத் தொடர்ந்து அவர்களை சிறையிலடைத்தது நிர்வாகம். அவர்கள் மேல் 2 வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளையும் அவரகளது குடும்ப நிலைகளையும் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களையும் களத்திலிருந்து பதிவு செய்து ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குனர் ‘ராகுல் ராயின்’ முயற்சியே இந்த ஆவணப்படம்.
ழிமீஷ்s ஸிமீமீறீ காட்சிகள் சிறையிலடைக்கப்-பட்டிருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பேட்டிகள், போராட்டத்தினால் பணியிடை-நீக்கம் செய்யப்பட்டவர்களின் பேட்டிகள் அவற்றோடு அந்த 147 பேருக்காக தாக்கல் செய்யப்பட்ட பெயில் மனு மீதான விசாரணைகள் போன்ற காட்சிகளை சிறப்பாக எடிட்டிங் செய்து, நாம் அந்தக் களத்திலிருந்து, அந்த பிரச்சினைக்கான காரண காரியங்களை அலசி பலதரப்பு உண்மைகளைக் கண்டறிவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராகுல் ராய். ஆவணப்படத்தின் இறுதியில் குஜராத்தில் அதே மாருதி சுசூகி நிறுவனம் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை கொள்முதல் செய்ய அரசு உத்தரவு போட்டிருக்க அந்த விவசாயிகளின் தரப்பினை பதிவு செய்து இன்னொரு அழிவின் ஆரம்பத்தையும் சேர்த்து தொகுத்து ஆவணப்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் ராகுல் ராய். தனியார் மயமாதலின் கொடுமையினை கண்முன்னே எடுத்துரைக்கும் இதுபோன்ற ஆவணப்படங்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் கொண்டு சேரக்கப்படுவது இன்றைய சூழலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் சிறப்பான பணியினைச் செய்திருக்கும் ராகுல் ராய்க்கும் பெரியார் திடலுக்கும் பாராட்டுக்கள்.
– உடுமலை
Kids Numbers and Maths Free
இச்செயலி கூட்டல், கழித்தல், எண்களை எண்ணுதல், ஒன்றொடு ஒன்று ஒப்பிடுதல் மற்றும் எண்களைச் சேர்த்தல் போன்ற அடிப்படைக் கணக்குகளை குழந்தைகள் எளிய முறையில் ஆர்வமுடன் கற்கும் வகையில் அனிமேஷன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆங்கில எழுத்து, நிறம், வடிவம், ஓவியம், வாசித்தல், விலங்குகள் என்று இதுபோன்ற 22 வகையான தனித்தனி செயலிகள் உள்ளன.
இவை அனைத்தும் சேர்ந்து ஒரே செயலியாகவும் உள்ளது.
https://play.google.com/store/apps/details?id=zok.android.numbers&hl=en-
அரு.ராமநாதன்
ஓயாப் படிப்பும் உறங்கா எழுத்தும்
ஆசிரியர்: சி.ந.சந்திரசேகரன்
கிடைக்குமிடம்: சி.ந.சந்திரசேகரன், 9பி, பாலசுந்தரம் லே அவுட்
முதல் தெரு, சிங்காநல்லூர், கோவை – 641005.
பொதுவாக டாக்டர் அம்பேத்கர் என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருபவை அவரது ஜாதி ஒழிப்பு, இந்து மத கருத்துகள், வட்டமேசை மாநாடுகள் போன்ற அவரது சமூக சாதனைகள் மட்டுமே. ஆனால், அவர் ஒரு தலைவர் என்பதைத் தாண்டிய சாதாரண மனிதராக அவரது பண்புகள் ஒவ்வொன்றும் அனைவரும் பின்பற்றத் தக்கவை. பல்வேறு வாழ்க்கை வரலாற்றிலிருந்து இப்பகுதிகளை சேகரித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
அண்ணல் அம்பேத்கருடன் நெருங்கி பழகும் வாய்ப்பைப் பெற்ற அவரது உதவியாளர்கள் நானக் சந்த் ராட்டு, சங்கரானந்த சாஸ்திரி, திரு பகவன்தாஸ் ஆகியோர் அவரைப்பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்தும், அவரது வாழ்க்கை வரலாற்றை வடித்துத் தந்த திரு தனஞ்செய்கீர், திரு வசந்த மூன் ஆகியோரின் நூல்களில் இருந்தும் பல்வேறு செய்திகளைச் சேகரித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
படிப்பை தமது உயிர்மூச்சாகக் கொண்டு கற்றறிந்த டாக்டர் அம்பேத்கர் இலண்டன் தேசிய அருங்காட்சியக நூலகத்தில் எவ்வாறு படித்தார் என்பதையும் அவரது படம் அந்நூலகத்தில் இடம் பெற்றிருப்பதையும் அறியும்போது படிப்பவரை வியப்படயச் செய்கிறது.
மூன்று நாள் உணவுக்கான தொகையை ஒரு புத்தகம் வாங்குவதற்காக செலவிட்டுவிட்டு மூன்று நாட்கள் தண்ணீர் மட்டுமே குடித்தார் என்னும் பதிவு சிலிர்க்க வைக்கிறது.
அவரது நூல் சேகரிப்பைப் பார்த்து கவிக்குயில் சரோஜினி நாயுடு இந்திய வைசிராய் லின்லித்கோ போன்றவர்கள் வியந்து பாராட்டிய கருத்துக்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அண்ணல் தொடுத்த சமூக அநீதிக்கு எதிரான போரில் அவருக்கு ஒருபேராயுதமாய் விளங்கிய போர்க்கருவி அவரது எழுத்தாற்றல். அத்தகைய அவரது எழுத்து பணியில் தாம் கண்ட பல்வேறு அனுபவங்களை அவரது உதவியாளர்கள் எழுதியுள்ளதில் இருந்து சுவையான தகவல்களைச் சேகரித்து வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
ஒரு நாள் அம்பேத்கர் எழுதிக் கொண்டிருந்தபோது விடைபெற்றுச் சென்ற அவரது உதவியாளர் ராட்டு அவர்கள், மறுநாள் காலை வரும்வரை எழுதிக்கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கர் மறுநாள் வந்தது தெரியாமல் நீ வீட்டிற்குச் செல்லவில்லையா என்று கேட்பது அவரின் உயிரின் இயக்கமாக அவரது எழுத்து இருந்தது என்பதை விளக்குகிறது.
மேலும் அரசியல், பொருளாதாரத் துறைகளில் அவர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவு இச்சமூகத்திற்கு எவ்வாறு பயன்பட்டது என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலம் விளக்கப்படுகிறது.
– வை.கலையரசன்