ஹவுராவிலிருந்து டில்லி சென்ற கல்தா எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை அடுத்த மால்வா ரயில் நிலையமருகே வந்தபோது ஜூலை 10 அன்று தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அய்தராபாத்தில் மாணவர்கள் ஜூலை 11 அன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
மத்திய அமைச்சரவை ஜூலை 12 அன்று மாற்றியமைக்கப்பட்டதைத் தொடர்ந்து 7 அமைச்சர்கள் ராஜினாமா செய்து புதிதாக 8 அமைச்சர்கள் பதவிப் பொறுப்பேற்றுள் ளனர்.
1410 கிலோ தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.சி-_17 ராக்கெட் ஜூலை 15 அன்று சிறீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
மும்பையில் தீவிரவாதிகள் ஜூலை 13 அன்று நடத்திய குண்டுவெடிப்பில் 21 பேர் உயிரிழந்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்களுக்குப் பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா ஜூலை 17 அன்று கைது செய்யப்பட்டார்.
பிரபல பத்திரிகை அதிபர் ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிருவாகியான ரெபக்கா ப்ரூக்ஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் மற்றும் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜூலை 17 அன்று லண்டன் காவல்துறையினரால் கைது கெய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டே அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 18 அன்று ஆணையிட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஜூலை 19 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜூலை 21 அன்று, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை இல்லை என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் புத்தகங்களை வழங்கிடவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தமிழகம் உள்பட சாட்சிகள் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது என்று நித்யானந்தாவுக்கு கருநாடக உயர் நீதிமன்றம் ஜூலை 17 அன்று ஆணையிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை புத்த மதத் தலைவர் தலாய்லாமா ஜூலை 17 அன்று சந்தித்துப் பேசினார்.
இந்திய இராணுவத்தின் 150 கி.மீ.தூரம் வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் பிரகார் ஏவுகணையின் முதல் சோதனை ஜூலை 21 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
நார்வே தலைநகர்ஆஸ்லோவில் பிரதமர் அலுவலக கட்டடம் அருகே ஜூலை 22 அன்று குண்டு வெடித்ததில் 7 பேரும், டைரிப்ஜேர்டனின் நடுவில் அமைந்துள்ள உடோபா தீவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 84 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் புல்லட் ரயில்கள் ஜூலை 23 அன்று மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் உள்பட, நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 23 அன்று நடைபெற்றது. தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டணி அதிக இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் கோவை சிங்காநல்லூரில் ஜூலை 22 அன்று நடைபெற்றது.
தனி மாநிலம் கேட்டு தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் ஜூலை 25 அன்று மீண்டும் ராஜினாமா செய்துள்ளனர்.