Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஓவியத்துக்குள் ஒளிந்துள்ள ரகசியம்

உலகிலேயே மிக விலையுயர்ந்த ஓவியமாய்க் கருதப்படுவது லியோனார்டோ டாவின்ஸி வரைந்த ‘மோனாலிஸா’ ஓவியம்-தான். 1503ஆம்  ஆண்டு அவர் வரைந்து முடித்தபோதே பெரும் பாராட்டைப் பெற்றது. 1962ஆம் ஆண்டு இன்சூர் செய்வதற்காக அதை மதிப்பிட்டபோது 100 மில்லியன் டாலர் பெருமானமானது என்று நிர்ணயித்தார்கள்!

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஓவியத்தில் பிரதிபலிப்பவர் ‘டச்சஸ் ஆஃப் மிலான்’ என்று கூறிகிறார்கள். ஆனால், இதில் காணப்படுபவர் ‘மடோனாலிசா கெரார்டினி’ என்ற பெண்மணியே என்றும், அவளது கணவனான ஃபிரான்சிஸ் கோடெல் ஜியோகோண்டாவுக்கு அந்த ஓவியம் திருப்தி அளிக்காததால் அதை வரைந்த டாவின்சிக்குப் பணம் ஏதும் கொடுக்க மறுத்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதற்குப் பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்த ஓவியத்தின் மேல் மையல் கொண்ட பிரெஞ்சு மன்னன் முதலாம் பிரான்சிஸ், அந்த ஓவியத்தை 492 அவுன்ஸ் எடை கொண்ட தங்கத்தை விலையாகக் கொடுத்து வாங்கினானாம்!