புதுச்சேரி மாநிலம் அம்பகரத்தூரில் (காரைக்கால் வட்டம்) பத்திரகாளியம்மன் கோயில் பண்டிகையில் ஆண்டுதோறும் மகிஷாசுர சம்ஹாரம் என்னும் பெயரில் எருமைக்கிடா வெட்டப்பட்டு வருவது வாடிக்கை.
இந்தக் காட்டுமிராண்டித்தன்மையான நிகழ்ச்சி நிறுத்தப்பட வேண்டியது முக்கிய கடமை என்றாலும், அது சம்பந்தமான புராணக் கதை மிக மிகக் காட்டுமிராண்டித் தனமானது. புராணங்களில் அசுரன் என்று குறிப்பிடப்படுவதெல்லாம் ஆரியர் அல்லாத திராவிடர்களையாகும் என்று எழுதினார் தந்தை பெரியார். விடுதலையில் அறிக்கையாவது: இதனை எதிர்த்துக் கிளர்ச்சியினை நடத்திட விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூட்டங்களில் பேசவும், நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொள்ளவும் அங்கு சென்று கலந்து கொள்வார் என்று தந்தை பெரியார் அறிக்கை ஒன்றினை விடுதலையில் வெளியிட்டார் (23.5.1964 பக்கம் 3) அதன்படி கிளர்ச்சி நடந்து கிடாவெட்டுவது நிறுத்தப்பட்டது. இது கழகத்திற்கும், விடுதலைக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.