கலாச்சாரமோ, இலக்கியமோ சமூக அரசியலை விட்டுத் தனியே வெற்றிடத்தில் இயங்கிவிட முடியாது. ஒருவேளை, அப்படி ஒதுங்கி இயங்குவது ஒரு கூறாக இருக்கலாம். அதுவே முழுமையானதல்ல.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த நூற்றாண்டில் நேரடியாக அரசியல், சமூகம் சார்ந்த பல இயக்கங்கள் பாதித்திருக்கின்றன. இன்றுவரை அதன் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் பாதிப்பை நாம் ஏற்கலாம். ஏற்காமலிருக்கலாம்; அது வேறு. இருந்தாலும், இவற்றின் இயக்கத்தைப் புறக்கணித்துவிட முடியாது. அந்த வகையில்தமிழகத்தைப் பாதித்த பல இயக்கத் தலைவர்களின் நேர்காணல் வரிசையில் முதலாவதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி.
சென்னை _ பெரியார் திடலில், பெரியார் உபயோகப்படுத்திய பொருள்கள் அடங்கிய கடந்த காலத்தை நினைவுப்படுத்தும் நீண்ட ஹால். சிலகேள்விகளுக்கு உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வந்தன பதில்கள். எந்த உணர்வு நிலைக்குப் போனாலும், சரளமாக ஆங்கிலக் கலப்பில்லாமல் பதில் வருகிறது. இரண்டு சந்திப்புகளில் தொடர்ந்தது இந்த நேர்காணல்.
(குமுதம் தீராநதி, நவம்பர் 2002)