Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இவர் பகுத்தறிவாளர்

பெயர் : கேத்தரின் ஹேப்பர்ன்

பிறப்பு : 12/05/1907

இறப்பு : 29/06/2003

நாடு : அமெரிக்கா

துறை : நடிப்புத்துறை

இவர் அமெரிக்காவைச்  சேர்ந்த திரைப்பட நடிகை. தனது வாழ்க்கையை மேடை நாடகங்களில் இருந்து ஆரம்பித்தவர். பின்னர் 1932ஆம் ஆண்டு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த சாங் ஆப் லவ், சீ ஓப் கிராஸ் போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்தன. பெற்ற விருதுகள்: இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுகளை 4 முறை பெற்றவர்.

மேலும், 1976 இல் புகழ் பெற்ற எம்மி விருது மற்றும் கோல்டன் குலோபஸ் விருது பெற்றுள்ளார். இத்துடன் அமெரிக்க திரைப்படக் கல்லூரியின் மிகச் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இது அந்நாட்டுத் திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

நாத்திகக் குத்து: நான் ஒரு பகுத்தறிவுவாதி.எனக்குள்ள ஒரே ஆசையெல்லாம் இந்த மக்கள் நாத்திகச் சிந்தனையோடு வாழ்ந்து பிறர்மீது அன்பு செலுத்தி அவர்களுக்கு அதன் மூலம் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே.

  • புருனோ