– சரவணா இராசேந்திரன்
மோடிக்கு தனது மதத்தின் மீதுதான் பற்று. அந்த மதக் கோட்பாட்டை தனிமனிதனாக மக்களிடையே திணித்துவிட வேண்டும் என்ற ஆவேசமும் உள்ளது. இப்படி ஒரு மனநிலை கொண்ட ஒருவர் சமூகநீதியை ஏற்றுக் கொள்வாரா? நேரடியாக தன்னுடைய மதச் சட்டமான மனுவை கொண்டுவர முடியாது. அப்படிக் கொண்டுவந்தால் மக்கள் கொந்தளித்து விடுவார்கள். மக்கள் புரட்சி வந்துவிடும். ஆகையால், மக்களை அவர்களின் போக்கிலேயே கொண்டுபோய் அவர்களின் குலத்தொழிலை செய்யவைக்க வேண்டும்.
இதற்காகத்தான் 2007-ஆம் ஆண்டு மோடி ஒரு நூலை எழுதினார். ‘கர்மயோக்’ என்பது அதன் பெயர். தமிழில் கர்மயோகா என்று வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்தவர்கள் இந்துத்துவவாதிகள் அல்லவா அதுதான் பிறவிப் பணி என்று பெயரிடாமல் கர்மயோகா என்று மொழிபெயர்த்து அதற்கு புனிதவடிவம் கொடுத்துள்ளார்கள்.
அதில் என்ன கூறுகிறார். as “experience in spirituality”! Modi says, “I do not believe that they have been doing this job just to sustain their livelihood. Had this been so, they would not have continued with this type of job generation after generation.” He adds, “At some point of time, somebody must have got the enlightenment that it is their (Valmikis’) duty to work for the happiness of the entire society and the Gods; that they have to do this job bestowed upon them by Gods; and that this job of cleaning up should continue as an internal spiritual activity for centuries. This should have continued generation after generation. It is impossible to believe that their ancestors did not have the choice of adopting any other work or business.”
அதாவது மலம் அள்ளும் தொழில் செய்பவர்கள் புனிதமான பணியைச் செய்கிறவர்களாவார்கள். அப்பணியைச் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். அதைக் கடவுளுக்குச் செய்யும் பணியாக நினைத்துச் செய்யவேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவர்களது மூதாதையர்களின் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதாகும் என்று எழுதியுள்ளார்.
அதன் தமிழாக்கம் கிடைக்கிறது படித்துப் பாருங்கள். சரி மலம் அள்ளும் தொழிலை புனிதமாக்கிவிட்டது. ஆனால் மலம் அள்ளுபவர்களின் தலைமுறைகள் இந்த வேலையை விட்டு வேறு வேலைக்குச் செல்ல துடிக்கின்றனரே, அப்படிச் சென்றுவிட்டால் நாமே அல்லவா கழிப்பறையை கழுவவேண்டும், மலத்தை அள்ளவேண்டும், அல்லது நவீன கருவிகளை வரவழைக்க வேண்டும், அப்படி நாம் செய்துவிட்டால் அவர்கள் படித்து வேறு வேலைக்குச் சென்று அதிகாரம் செலுத்து-வார்களே, அப்படி செய்யவிடலாமா?
இதற்காகத்தான் ஸுவாட்ச் பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டம் மோடியின் தனிமனித சிந்தனையால் உருவாக்கப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் தூய்மை இந்தியா என்ற ஒரு பளிச் விளம்பரம் நமது கண்களில் தெரியும். ஆனால், இதில் ஒரு குலத்தொழில் தினிப்பு உள்ளது. முக்கியமாக குஜராத்தில் மலம் அள்ளும் தொழிலைச் செய்துவரும் வால்மிகி மக்கள் வாழும் பகுதியில்கூட ஊராட்சி மன்றம் கொடுக்கும் தண்ணீரில்கூட ஜாதியம் பார்க்கப்படுகிறது. காலை 5 முதல் 12 மணிவரை வால்மிகி இனத்தவர் இல்லாத பகுதியில் நீர் விடப்படுகிறது. 12 மணியிலிருந்து 12.30 மணிவரை வால்மிகி இனத்தவரின் பகுதிக்கு தண்ணீர் விடப்படுகிறது. அதுவும் தண்ணிர் டாங்குகளில் தண்ணிர் இருக்கும் பட்சத்தில்தான், இல்லையென்றால் அன்று தண்ணீர் கிடையாது. இதுகுறித்து கட்சு மாவட்டத்தில் உள்ள ஜிஜோரி என்ற நகராட்சி தண்ணீர் வழங்கும் அதிகாரி, குஜராத்தி பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் மலம் அள்ளுகிறவர்களுக்கு ஏன் காலையில் தண்ணீர் வேண்டும்? அவர்களுக்கு தண்ணீர் விட்டால் அவர்கள் மலம் அள்ளச்செல்லாமல் தண்ணீர் பிடித்து குளித்துவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடுவார்களே என்று கூறினார். இது மோடி எழுதிய நூலின் தாக்கத்தால்தான் அப்படிப் பேசியுள்ளார். ‘ஸ்வாட்ச் பாரத்’ என்பது ஏன் என்று யாராவது கேள்வி கேட்டார்களா? கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
தூய்மை கங்காவில் அவமானப்படும் இனம்
நாம் முதலாம் நூற்றாண்டில் வாழும் ஏழைகளைப் பார்க்க காலவாகனத்தில் ((Time Mission) பயணிக்கத் தேவையில்லை. அரித்துவாரில் துவங்கி மேற்குவங்கத்தின் எல்லை வரை உள்ள கங்கைக் கரையில் வசிக்கும் பழங்குடி இனத்தவரைப் பார்த்தால் போதும், இன்றும் இவர்களுக்கு கல்வியறிவு இல்லை, உடுத்த புதிய ஆடைகள் இல்லை, எல்லாவற்றையும் விட இவர்களுக்கு வீடு என்று ஒன்றுமில்லை, மாலை நேரங்களில் அருகில் உள்ள ஊருக்குவெளியே இந்த இனத்துப் பெண்கள் மூங்கிலில் செய்யப்பட்ட முறங்களை தட்டுவார்கள், ஊரில் உள்ளவர்கள் பகல் முழுவதும் விட்டில் உள்ள மீதமுள்ள ரொட்டி இதர உணவு வகைகளை அந்த முறத்தில் கொட்டிவிட்டுச் சென்றுவிடுவார்கள் இந்த உணவுதான் அந்தப் பழங்குடியினத்தினரின் மறுநாள் உணவு, இவர்கள் கங்கைக்கரையில் உள்ள கூடாரங்களில் தீமூட்டி சமைக்கக் கூடாது, இன்றும் இவர்களுக்கு இந்த கட்டுப்-பாட்டை உயர்ஜாதியினர் விதித்துள்ளனர்.
சுமார் 57 லட்சம் எண்ணிக்கையில் உள்ள இவர்களில் ஆண்கள் மேலாடை உடுத்துவ-தில்லை, இவர்களின் தொழில் கங்கையில் பாவங்களைக் போக்க வருபவர்கள் விட்டுச்செல்லும் கழிவுகளை அகற்றுவதுதான். இதில்கூட விலையுயர்ந்த பொருட்கள் இருந்தால் அவற்றை கரையில் உள்ள கோவில்களுக்கு கொடுத்துவிட வேண்டும். இந்த இனப் பெண்கள் கடைகளுக்குச் சென்று ஆடைகள் வாங்கக் கூடாது. கங்கையில் கழிப்பு நீக்க விடப்படும் ஆடைகளைத்தான் இவர்கள் இனத்தின் பெண்கள் அணிவார்கள். இவர்களுக்கு கடை வீதிகளில் நடக்கத் தடை பொருட்கள் வாங்கத் தடை, குழந்தைகள் பள்ளியில் படிக்கத் தடை என்று பல்வேறு தடைகள்.
மிகவும் சொற்ப அளவில் நகரங்களுக்குச் சென்று கூலிவேலை பார்க்க ஆரம்பித்திருக்கும் இவர்களின் வாழ்க்கையில் மீண்டும் ஓர் நரகம் ‘தூய்மை இந்தியா’ மற்றும் ‘நமாமி கங்கா’ என்ற பெயரில் வந்துள்ளது, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கங்கை தூய்மை என்ற நமாமிகங்கே திட்டம் ஆரம்பித்த உடன் முதலில் இந்த மக்களைத்தான் கணக்கெடுக்கத் துவங்கினர். நகரத்தில் ஒன்றிரண்டு குடும்பங்கள் கூலித்தொழில் செய்துவர அவர்களை அதார் கார்ட் அடையாளத்தை வைத்து மீண்டும் அவர்களை கங்கைக்கரையில் உள்ள கூடாரத்திற்கே சென்று குடியமர வைத்-துள்ளனர்.
டில்லியில் இருந்து 2015-ஆம் ஆண்டு 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கான்பூர் பருக்காபாத் கன்னூஜ், அலாகாபாத் போன்ற நகரங்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மதமாற்றத்தை எதிர்த்தல்:
மதமாற்றம் எதிர்ப்பு என்ற பெயரில் சங்க்பரிவார் அமைப்பினர் வன்முறையில் இறங்கக் காரணமே தலைமுறை தலைமுறையாக கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு பிச்சை எடுத்து உண்ட கங்கைக் கரைவாழ் பழங்குடியினர் சுயமரியாதையைக் காக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். விடுவார்களா? தலைமுறை தலைமுறையாக கங்கைக் கழிவுகளை அள்ளிய மக்கள் மதம் மாறிவிட்டால், அந்தக் கழிவுகளை யார் அள்ளுவது? இதனால் சங்பரிவார் அமைப்புகள், இவர்களைப் போன்றோர்கள் மதம் மாறுவதை கடுமையாக எதிர்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
‘தூய்மை இந்தியா’ மற்றும் ‘நமாமி கங்கே’ திட்டம் வந்த பிறகு இவர்கள் மீதான கண்கானிப்பை மத்திய அரசே பலப்படுத்தி-யுள்ளது. காரணம் கங்கையில் பிணங்களை, பிணக் கழிவுகளை இதர மோசமான கழிவுகளை மோடியோ அல்லது சங்பரிவார் அமைப்பு உறுப்பினர்களோ அள்ள முன்வருவார்களா? இறந்துபோன மாட்டை சில பார்ப்பனர்கள் அகற்று-கிறார்கள் என்று பத்திரிகையில் பார்த்திருக்கிறோம். ஆனால், கங்கையில் மிதந்துவரும் கழிவுகளை எந்த பார்ப்பனர்-களாவது அகற்ற முன் வந்திருக்கிறார்கள் என்று இன்றுவரை படித்தில்லை. தற்போது நாடு முழுவதும் பரவியுள்ள இந்த பழங்குடியின மக்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்தி-வருகின்றனர். காரணம், இவர்களை மீண்டும் கங்கைக் கரையில் குடியமர்த்தி கங்கையில் தூய்மைப்படுத்தும் அவர்களின் குலத்-தொழிலைச் செய்யவைக்க வற்புறுத்தப்-படுகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமே மிகப்பெரிய எடுத்துக்காட்டு அங்கும் தூய்மை இந்தியா என்ற பெயரில் செத்துப் போன மாடுகளை ஒப்பந்த அடிப்படையில் அகற்ற குறிப்பிட்ட ஜாதியினரை வற்புறுத்துகின்றனர். முக்கியமாக பாம்பி, அசாதாரு என்ற பிரிவைச் சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை கட்டாயமாக இந்தப் பணியைச் செய்ய வற்புறுத்துகின்றனர்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர்களின் குலத்தொழிலைச் செய்ய வைப்பதன் மூலம் ஒரு தொடர் வினையை உருவாக்கமுடியும் என்பதை மோடி அங்கே நடத்திக் காட்டியுள்ளார். அங்கே குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ந்து இறந்த மாடுகளை அப்புறப்படுத்துவதும், அதன் தோலை உரிப்பதும் தினசரிப் பணியாக தொடர்ந்து செய்துவர அந்தத் தோல்களை வாங்கி பதப்படுத்தும் ஒரு ஜாதியினர், மீண்டும் அந்தத் தொழிலைச் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதாவது தாழ்த்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த மக்களின் இளைய தலைமுறையினரின் வாழ்வாதாரத்தைத் தடுத்து மீண்டும் அவர்களின் குலத் தொழிலுக்கே வர வைத்துள்ளனர்.
மும்பை மாநகராட்சியில் 7000 -தூய்மைப் பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது. போபால் மாநகராட்சியில் 3000, சென்னை பெருநகர மாநகராட்சில் 2000, இப்படி எல்லா மாநகராட்சிகளிலும் தூய்மைத் தொழிலாளர்கள் பற்றாக்குறை. இது ஒரு சமூகத் தாக்கம். தூய்மைப் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் வரவேண்டும் என்று அதிகார மய்யங்கள் வற்புறுத்துகின்றன. நவீன உபகரணங்களை கொண்டுவர மறுக்கிறது. நவீன கருவிகள் வாங்க ஒதுக்கும் தொகை ஊழல் அதிகாரிகளால் கொள்ளையடிக்கப் படுகிறது. இதனால் இந்திய அளவில் எங்கும் தூய்மைப் பணியில் நவீனம் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே அந்தப் பணியைச் செய்யவேண்டும் என்ற ஒரு மனநிலை நிலவுகிறது. மறைமுகமாக அந்தச் சமூகத்தினரின் கல்வி மற்றும் மாற்று வேலைக்-கான உரிமை மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் தூய்மை இந்தியா என்னும் ஒரு புதிய திட்டம் நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட தொழிலைச் செய்யும் தொழிலாளர்களையும் அவர்களின் குழந்தைகளையும் மீண்டும் மீண்டும் குலத்தொழிலைச் செய்ய வைக்கும் ஓர் கொடூரத் திட்டமாகும்.