– ஒளிமதி
புராணங்கள் என்றால் என்ன?
பார்ப்பனர்கள் தங்கள் மேலாண்மையை நிறுவவும், திராவிட இனத்தின் பண்பாடு, பெருமை, உரிமை, ஆளுமை, ஆட்சி இவற்றை வீழ்த்தவும், மக்களின் உள்ளத்தை தம் வயப்படுத்தவும் புனையப்பட்ட பொய்யான கற்பனை நிகழ்வுகளின் தொகுப்பே புராணங்கள். தசாவதாரம், கந்த புராணம், லிங்க புராணம் போன்றவை இவ்வகையைச் சாரும்.
இயற்கை நிகழ்வுகளின் காரணம் புரியாமல் மக்கள் குழம்பிய, அஞ்சிய, விளக்கம் பெற ஆவல் கொண்ட நிலையில் கற்பனையான விளக்கங்களை கதை புனைவின்மூலம் அளித்தனர். அவையும் புராணங்கள் ஆயின.
வளர்பிறை, தேய்பிறை, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இவற்றிற்குக் காரணமாகச் சொல்லப்பட்ட கதைகள் இவ்வகையைச் சேரும்.
18 புராணங்கள்
1. மத்தியட்ச மஸ்தய (மச்ச) புராணம் (மீன்)
2. மார்க்கண்டேய புராணம்
3. பவிஷ்ய புராணம்
4. பிரம்ம புராணம்
5. பிரம்மாண்ட புராணம்
6. பிரம்ம கைவர்த்த புராணம்
7. வாமன புராணம்
8. வாயு புராணம்
9. விஷ்ணு புராணம்
10. கூர்ம புராணம்
11. வராக புராணம்
12. அக்னி புராணம்
13. பத்ம புராணம்
14. நாரத புராணம்
15. லிங்க புராணம்
16. கருட புராணம்
17. ஸ்கந்த புராணம்
18. பாகவத புராணம்
ஆக 18 புராணங்கள்.
புராணங்களில் 5 வகை லட்சணங்கள்
1. சர்க்கம் -_ பிரபஞ்சத்தின் தோற்றம்
2. பிரதி சர்க்கம் _ பிரளயத்திற்குப் பிரகான பிரபஞ்சத்தின் மறுதோற்றம்.
3. வம்சம் _ இரணியகசிபு போன்ற அசுரர்கள் வம்ச விவரம்.
4. மந்வந்தரம் _ சுயம்புவாக மனு தொடங்கி 14 மனுக்களுடைய கால அளவு ___
5. வம்சானு சரிதம் _ மேற்சொன்ன வம்ச வரலாறுகளை விவரிப்பது.
புராணங்கள் ஏன்? தேவிபாகவதம் கூறுவதைக் கேளுங்கள்
1. குலாச்சாரங்கள் கெட்ட பிராமணர்கள்
2. ஸ்திரிகள்
3. சூத்திரர்கள்
4. இருகுல கலப்புப் பிறப்பாளர்கள் -_ முதலாவதாக வேதங்களை காதால் கேட்கும் உரிமை இல்லாதவர்கள். ஆதலால், அவர்கள் நன்மையை உத்தேசித்து புராணங்களையும் இயற்றி வருகிறார். காலந்தோறும் மகாவிஷ்ணுவே வியாசராக அவதரித்து இந்த புராணங்களை இயற்றியதாக ‘தேவி பாகவதம்’ கூறுகிறது.
அவதாரங்கள்
1. மத்ஸ்ய (மீன்) அவதாரம்
2. கூர்ம (ஆமை) அவதாரம்
3. வராக (பன்றி) அவதாரம்
4. நரசிம்ஹா (சிங்கம் பாதி, மனிதன் பாதி) அவதாரம்.
5. வாமன (குள்ளப் பார்ப்பான்) அவதாரம்.
6. இராம அவதாரம்
7. பரசுராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்
1. மத்ஸ்ய (மீன்) அவதாரம்
2. கூர்ம (ஆமை) அவதாரம்
3. வராக (பன்றி) அவதாரம்
4. நரசிம்ஹா (சிங்கம் பாதி, மனிதன் பாதி) அவதாரம்.
5. வாமன (குள்ளப் பார்ப்பான்) அவதாரம்.
6. பரசுஇராம (க்ஷத்திரியர்களை அழிக்க மகாவிஷ்னு -_ வெள்ளை மயிர்) அவதாரம்.
7. இராம அவதாரம் (இராவணனை அழிக்க)
8. கிருஷ்ண அவதாரம்.
9. புத்தர் அவதாரம்.
10. கல்கி அவதாரம் (கலியுகம்)
அவதாரங்கள்
1. புருஷா அவதாரம்
2. வராக அவதாரம்
3. நாரத அவதாரம்
4. நர நாராயணன் அவதாரம்
5. கபிலர் அவதாரம்
6. தாத்ரேய அவதாரம்
7. யக்ஞன அவதாரம்
8. ரிஷப அவதாரம்
9. பிரித்யூ அவதாரம்
10. மத்சய அவதாரம்
11. கூர்ம அவதாரம்
12. & 13. தன்வந்திரி அவதாரம்,
14. நரசிம்ம அவதாரம்
15. வாமனன் அவதாரம்
16. பரசுராமா அவதாரம்
17. வேதவியாசர் அவதாரம்
18. ராமர் அவதாரம்
19. பலராமர் அவதாரம்
20. கிருஷ்ணன் அவதாரம்
21. புத்தர் அவதாரம்
22. கல்கி அவதாரம்
ஆதாரம்: Hindu Mythology and Religion – John Dowson.
மேலே கூறப்பட்டவற்றை கூர்ந்து நோக்கினால் ஓர் உண்மை வெளிப்படும். அவதாரங்கள் உண்மையென்றால் ஒரே மாதிரி சொல்லப்பட்டிருக்கும்.
ஆனால், இங்கு மூன்று விதமாகச் சொல்லப்பட்டுள்ளது.
பத்து அவதாரங்கள் என்பதில் புத்தர் என்ற பகுத்தறிவு புரட்சியாளரைச் சேர்த்துக் கூறியுள்ளது பித்ததலாட்டத்திலும் பெரிய பித்தலாட்டம். பலராமனை ஒதுக்கிவிட்டு புத்தரைச் சேர்த்துள்ளனர்.
இந்தப் பித்தலாட்டம் போதாதென்று அவதாரத்தை 22 ஆக ஆக்கியுள்ளனர். அவதார வியாக்யானம் செய்யும் அதிமேதாவிகளுக்குக் கூட இது தெரியாது.
அவதாரங்கள் 12ம், 13ம் ஒரே அவதாரமாகக் கூறியுள்ளது அவர்களின் முரண்பாட்டை மேளம் கொட்டிக் காட்டுகிறது.
ஆனால், பெரியார் தொண்டர்கள், எதையும் ஊடுருவி உண்மையை வெளிக் கொண்டு வருபவர்கள் என்பதால் ஆதாரபூர்வமாய் இந்த உண்மையை வெளிக் கொணர்ந்துள்ளோம்.
ஆக, உண்மையாய் இருந்தால் ஒன்றுபோல் இருக்கும். பொய் என்பதால் பலவிதமாய் இருக்கிறது. அவதாரங்கள் பொய் என்பதற்கு இதுவே ஆதாரம்.
என்றாலும், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் தற்போது இந்த புராணக் குப்பைகளில் கூட, தங்கள் மேலாண்மையை, பெருமையைப் புகுத்த முனைந்து முதலாவதாக வாமன அவதாரத்தில் புரட்டு வேலை செய்து மூக்குடைபட்டுள்ளனர். அதை அடுத்து காண்போம்.