1. பெரியாரின் மனைவி நாகம்மையாரின் இரு கொள்கைகளாக எவற்றை சாமி. சிதம்பரனார் குறிப்பிடுகிறார்?
அ) விரதங்களைக் கடைப் பிடிப்பதோடு கணவருக்குப் பணிவிடை செய்வது ஆ) பெரியாரின் எல்லாக் காரியங்களுக்கும் துணை நிற்பது, இல்லத்திற்கு வரும் அனைவருக்கும் சோறு போடுவது இ) பார்ப்பனர்களுக்குத் தானம் வழங்குவதும், சமயச் சொற்பொழிவுகள் நடத்துவதும் ஈ) மாமனார் – மாமியாருக்குச் சேவை செய்வது, வீட்டு வேலை பார்ப்பது.
2. தந்தை பெரியார் அவர்கள் தமது கடுமையான சமுதாயப் பணியானது எதைப் போன்றது என்பதை விளக்கிடக் கூறிய உவமை……
அ) வானத்தை வில்லாய் வளைப்பது போன்றது ஆ) மணலைக் கயிறாய்த் திரிப்பது போன்றது இ) மயிரைக்கட்டி மலையை இழுக்கிறேன். வந்தால் மலை, போனால் மயிர் ஈ) உலகைத் தலையில் சுமப்பது போன்றது
3. பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியதைத் கூட்டத்திலிருந்து வேடிக்கை பார்த்த தொண்டன் நான். இது யார் கூற்று?
அ) அண்ணா ஆ) காமராசர் இ) இராசகோபாலாச்சாரி ஈ) அய்யாமுத்து
4. காங்கிரசிலிருந்து பெரியார் விலகக் காரணம்
அ) பார்ப்பனர்களின் சூழ்ச்சியான செயல்பாடுகள் ஆ) வகுப்புவாரி உரிமைக் கொள்கையினை ஏற்காமை இ) பார்ப்பன ஆதிக்கம் ஈ) இவை யாவும்
5. பெரியார் பொதுவுடைமைக் கொள்கையைக் கொண்டதற்குக் காரணம்?
அ) சோவியத் நாடு போய் வந்ததால் ஆ) இயல்பாகவே பொதுவுடைமைக் கொள்கை கொண்டிருந்ததால் இ) ம.சிங்காரவேலரின் தொடர்பால் ஈ) ப. ஜீவானந்தத்தின் தொடர்பால்.
6. பெண்களை ஆசிரியர் வேலைக்கும் செவிலியர் வேலைக்கும் மட்டும் தேர்ந்தெடுக்காமல் காவல் துறைப் பணிகளுக்கும் இராணுவத் துறைக்கும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தீர்மானித்த மாநாடு எது?
அ) விருதுநகர் சுயமரியாதை மாநாடு ஆ) செங்கற்பட்டு சுயமரியாதை மாநாடு இ) புதுச்சேரி சுயமரியாதை மாநாடு ஈ) ஈரோடு சுயமரியாதை மாநாடு
7. ஒழுக்கம் என பெரியார் குறிப்பது எதை?
அ) கடவுள் பக்தி அற்றவர்களாக இருக்க வேண்டும் ஆ) எந்த மதத்திலும் சாராதவர்களாக இருக்க வேண்டும் இ) மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதன்படியே நாம் மற்றவரிடத்தில் நடந்துகொள்ள வேண்டும் ஈ) பொய் பேசாமை, திருடாமை, நாணயம்
8. பெரியார் கருத்தில் வாழ்க்கையில் வெற்றியை உண்டாக்கவல்ல ஆயுதங்கள் யாவை?
அ-) கல்வி ஆ) தொழிற்பயிற்சி இ) கேள்விஞானம் ஈ) கனிவு, துணிவு, பணிவு
9. இங்குள்ள பெரியாரின் வாசகத்தில் உள்ள கோடிட்ட இடத்திற்குரிய சரியான சொற்றொடர் யாது?
….. வாழும் இயற்கையைக் கொண்ட மக்களுக்கு, அது கவலையையும் பொறாமையையும் கொடுத்துக் கொண்டிருக்கும்
அ) உடல் உழைப்பால் மட்டும் ஆ) பேராசையுடன் இ) சிந்திக்கும் குணம் இன்றி ஈ) சோம்பேறியாக இருந்து
10. உலகில் மனித வர்க்கத்தினருக்குள் இருக்கும் அடிமைத்தன்மை நீங்க பெரியார் சொல்லும் ஒரு வழி யாது?
அ) வெள்ளையரும் கருப்பரும் வேற்றுமையின்றி வாழவேண்டும் ஆ) பொருள் சமத்துவம் நிலவ வேண்டும் இ) பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழிய வேண்டும் ஈ) ஓர் உலக அரசு அமைய வேண்டும்.