செயலி
Duolingo: Learn Language Free
இங்கிலீஷ், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுக்கீஸ், டச், அய்ரிஷ், சுவிடீஷ், ரஷ்யன், உக்ரைன், எஸ்பேன்டோ, போலீஷ், மற்றும் துருக்கி போன்ற உலக மொழிகளை இலவசமாக எளிய முறையில் கற்க இச்செயலி பயன்படுகிறது.
எப்போதும் இணையதளத்திலிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒலி_ஒளி வகுப்புகள், ஒலி அகராதிகள், எளிய உரையாடல்கள், இலக்கணப்படி விரிவாக எழுதுதல் போன்றவற்றுக்கு விளையாட்டின் மூலம் பயிற்சி பெறலாம். உதவி கோரி கேள்விகள் கேட்டு பதில் பெறும் வசதியும் உள்ளது.
நாள்தோறும் புதிய சொற்களின் உச்சரிப்பு மற்றும் பொருளை அறிந்தும் பயன்பெறலாம்.
– அரு.ராமநாதன்
————————————————————————————————————————————————————————–
நூல் அறிமுகம்
நூல்: நலங்கிள்ளியின் ‘ஆங்கில ஆசான்’ ஆசிரியர்: நலங்கிள்ளி
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், 177/103, முதல் தளம்,
அம்பாள் கட்டிடம், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-600 014.
தொலைபேசி: +91-44-4200-9603 பக்கங்கள்: 768 விலை: ரூ.600
தமிழ் வழியில் ஆங்கிலம் கற்க முயல்வோருக்கு துணை செய்யும் நூல். நூலாசிரியர், அலுவலர்களுக்கு ஆங்கிலம் கற்பித்த தன் அனுபவத்தின் திறத்தை இந்நூலைப் படைக்கப் பயன்படுத்தியுள்ளார். அடிப்படை ஆங்கில அறிவு பெற மட்டுமின்றி, சிறப்பான ஆங்கிலப் புலமைக்கும், இந்நூல் பயன்படும். எல்லாச் சூழலுக்கும் ஆங்கிலத்தில் பேச, எழுத இந்நூல் பயிற்சி தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் வழியில் பயின்று வளர்ந்த இவர், ஆங்கிலம் கற்க உதவும் நூல் எழுதியமையே, ஆங்கிலம் கற்க விரும்புவோரை அந்த இலக்கை எட்டச் செய்யும் என்பதற்கான உறுதியைக் காட்டுகிறது. தமிழ்வழி ஆங்கிலம் கற்போர் இடர்பாட்டை இவர் தன்னளவில் அறிந்தவர் என்பதால், அதற்கான தீர்வுகளையும் இந்நூலில் கொடுத்துள்ளார்.
ஆங்கில இலக்கணத்தை எளிமைப்படுத்தித் தந்துள்ளார். தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். ஆங்கிலம் கற்க விரும்பும் எவருக்கும் இது கற்றுத்தரும். எடுத்துக்காட்டுகளில் நல்ல தமிழ்ப் பெயர்களை எடுத்தாண்டமை பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் இந்துக் கடவுள் பெயர்களை எடுத்தாண்ட நிலையில், ஜான், பீட்டர், அஜீஸ், அபுபக்கர் மும்தாஜ், மேரி போன்ற பெயர்களை எடுத்தாண்டு இது எல்லோருக்குமானது என்பதைக் காட்டியிருக்க வேண்டும். – சிகரம்
——————————————————————————————————————————————————————–
ஆவணப்படம்
‘குலாபி கேங்’
அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் எங்கு இருக்கிறதோ அங்கே அதைத் தட்டிக்கேட்க காலம் ஒரு தலைவனை; புரட்சியாளனை அடையாளம் காட்டுகிறது. அந்த புரட்சியாளன் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து காலதாமதம் ஆனாலும் மக்களை அந்த அடக்கு முறையினின்றும் ஒடுக்கு முறையினின்றும் விடுவிக்கிறான். இது ஒருபுறமிருக்க, அந்தந்த பகுதிகளிலேயே மக்கள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகளிலிருந்து காத்துக்கொள்ள தன்னெழுச்சியாக புறப்பட்டு வெற்றி பெற்றதும் உண்டு. தோற்றதும் உண்டு.
அப்படி உத்தரப்பிரதேசத்தில் கிராமங்களில் 2003_களில் ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு பெண்ணின் பின்னால் அணிதிரண்டு, சட்டப்பூர்வமாகவே, ஆணாதிக்கத்தை அடித்து நொறுக்கி யிருக்கிறார்கள். இதை அப்படியே ஆவணப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் ழிவீsலீtலீணீ யிணீவீஸீ. இது இங்கிலீஷ் ஷிuதீ ஜிவீtறீமீ-களுடன் 90 நிமிடங்கள் ஓடுகிறது. இந்த ஆவணப்படம் திரையரங்குகளிலேயேகூட ஒளிபரப்பப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனைவரும் பார்க்க வேண்டிய ஆவணப்படம். – உடுமலை