துணுக்குகள்

ஆகஸ்ட் 16-31 துணுக்குகள்

கேழ்வரகு இட்லி
ஒரு கப் உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து, நீரில் கரைத்த கேழ்வரகு மாவுடன் (3 கப்) சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்க வேண்டும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து, 6 _ 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து, பின் ஊற்றினால் கேழ்வரகு இட்லி தயார்.

—————————————————————————————————————————————————————————

உலகில் மகிழ்வாக உள்ள மக்கள்

அய்க்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி உலகில் மிக மகிழ்ச்சியாக உள்ள (Happiest) மக்கள் டென்மார்க் தேசத்து மக்களாம்.

இதில் இந்தியா, தரவரிசையில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைவிட மிகவும்

பின்தங்கியயுள்ள-தோடு மக்களின் மகிழ்ச்சி நிலை பின்னோக்கிச் சென்று கொண்டிருக்-கின்ற 10 நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

மக்கள் ஆயுள்கால நிலை, உள்நாட்டு மொத்த உற்பத்தி, விடுதலை உணர்வு, கருணை, சமுதாய ஆதரவு, மற்றும் லஞ்ச ஊழல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை கணக்கீடு செய்யப்-பட்டுள்ளதாக அய்.நா. அறிக்கை தெரிவிக்கிறது.

ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா, 21.3.2016
தகவல்: தேனீ, பட்டாபிராம்,
சென்னை-_72.

———————————————————————————————————————————————————————————

மின் கழிவுகள்

அதிக மின் கழிவுகள் கொண்ட இந்திய மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிராவுக்கு முதல் இடம். தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நகரங்கள் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூருக்கு அடுத்த இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் மின்கழிவுகளைக் கையாளும் மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இதைப்போல குறைந்தபட்சம் 10 தொழிற் சாலைகள் தமிழகத்துக்குத் தேவை என்கிறார்கள்.

———————————————————————————————————————————————————————————–

நிற்காமல் 500 கி.மீ. ஓடமுடியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயதான டீன் கார்னாஸெஸ் என்பவர் 80 மணிநேரம் தொடர்ந்து ஓடி 563 கி.மீ தூரத்தைக் கடந்திருக்கிறார். இந்த அதிசய மனிதரின் உடலில் உள்ள அரிய வகையான மரபியல் நிலைமையே இதற்குக் காரணம். சிறு வயதிலிருந்து இவர் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், இப்போதும் மாரத்தான் போட்டிகளில் ஓடுவதை நிறுத்தவில்லை. 50 நாட்களில் 50 மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்ட சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அப்போதும், அவருக்கு தசைகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையாம்.

பொதுவாக நாம் உடற்பயிற்சிகள், ஓட்டத்தில் ஈடுபடும்போது உடலில் உள்ள குளுகோஸ் சக்தியாக மாற்றப்படுகிறது. இதனால் லாக்டிக் அமிலம் உற்பத்தியாகும். அந்த அமிலம் அதிகரிக்கும்போது தசைப்பிடிப்பு, களைப்பு ஏற்படும். இந்த நிலையில், நாம் சுவாசிக்க வேண்டியிருக்கும். ஆனால், டீன் கார்னாஸெஸின் உடலில் இவ்வாறு லாக்டிக் அமிலம் தேங்குவதில்லையாம். இதனால், அவர் தொடர்ச்சியாக உடல் தசைகளுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

—————————————————————————————————————————————————————————–

இரைப்பை சுரக்கும் அமிலம் இரும்பையே அரிக்கும்!

மனிதர்களாகிய நம் இரைப்பையில் சுரக்கும் அமிலம் எவ்வளவு தெரியுமா? 24 மணி நேரத்தில் 68 அவுன்ஸ். அதாவது 2 லிட்டர் இரைப்பை அமிலம் சுரக்கிறது. இந்த அமிலத்தின் இராசயணப் பெயர் அய்ட்ரோகுளோரிக் அமிலம் என்பதாகும். இந்த அமிலத்தில் நாம் முகம் மழிக்கப் பயன்படுத்தும் ஒரு பிளேடைப் போட்டு வைத்தால் 24 மணி நேரத்தில் அந்த பிளேடின் 40% பாகம் கரைந்துபோய் இருக்கும். தொழிற்சாலைகளில் இந்த அய்ட்ரோகுளோரிக் அமிலத்தை உலோகங்களில் உள்ள துருவைப் போக்கப் பயன்படுத்துகிறார்கள்.

—————————————————————————————————————————————————————————–

பிரசவித்த பெண்களுக்கு…

குழந்தை பெற்ற பெண்களுக்கு, பால் சுரப்பதில் குறைபாடு இருந்தால் பூண்டு அதைச் சரிப்படுத்தும். தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், காலக்டோகோக் (Galactagogue) என்னும் பால் சுரப்பு ஊக்கிகளைத் தூண்டி, நன்கு பால் சுரக்க வைக்கும், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் பூண்டின் பங்கு அதிகம்.

—————————————————————————————————————————————————————————–

அகிம்சை

திருக்குறள்தான் டால்ஸ்டாய் என்ற ரஷ்யப் படைப்பாளிக்கு அகிம்சையைக் கற்றுத் தந்திருக்கிறது. “அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மனியில் மொழி-பெயர்க்கப்பட்ட திருக்குறளில் இருந்துதான் நான் பெற்றுக்கொண்டேன்’’ இது லியோ டால்ஸ்டாயின் ஒப்புதல் வாக்குமூலம்.

—————————————————————————————————————————————————————————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *