செயலி
இச்செயலி கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட நாடுகளுடைய தலைநகரம், தேசியக்கொடி, மேலும் பல குறிப்பிடத்தக்க தகவல்களை உள்ளடக்கியது.
ஒவ்வொரு நாட்டிலும் பயன்படுத்தும் நாணயம், பன்னாட்டுத் தொலைபேசி குறியீட்டு எண், அதன் வரைபடம், கண்டம், இருப்பிடம், எல்லைகள், அங்கு பேசப்படும் மொழிகள் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.
மேலும் அந்நாட்டு மக்களின் சராசரி ஆயுள், பிறப்பு _ இறப்பு விகிதம், பாலினம், எழுத்தறிவு போன்ற மக்கள் வகைப்பாடு குறித்த தகவல்கள். மேலும் அந்நாட்டின் நீர்வழி, சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள் போன்ற போக்குவரத்துத் தகவல்கள். அந்நாட்டின் நதிகள், மலைகள், அதிசயங்கள் குறித்த தகவல்களை எளிய முறையில் நாம் அறிந்துகொள்ள முடியும்.
– அரு.ராமநான்
——————————————————————————————————————————————————————————-
நூல் அறிமுகம்
நூல்: ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் எழுந்தோம்!
ஆசிரியர்: மஞ்சை வசந்தன்
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், சென்னை-7.
பக்கங்கள்: 240 நன்கொடை: ரூ.120/-
‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!’ என்று சில ஆரிய அடிமைகள் செய்யும் விஷமப் பிரச்சாரத்திற்கு சரியான, தெளிவான, மறுக்கமுடியாத ஆதாரங்களுடனான பதிலைக் கூறும் நூல்.
தமிழர் _ திராவிடர் பிரச்சினையை தெளிவாக பாவாணர் உள்ளிட்ட தனித்தமிழ் அறிஞர்களின் துணைகொண்டு விளக்குகிறது. தமிழ் மொழியைக் காப்பதில், தமிழர் என்ற ஒற்றுமையை உருவாக்குவதில், இந்தி சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்பதில் திராவிடர் இயக்கத்தின் _ தந்தை பெரியாரின் பணிகளை எடுத்து விளக்குகிறது.
தமிழர் முன்னேற்றங்களைத் தடுப்பதில் ஆரியம் மேற்கொண்ட முயற்சிகளையும், அதனை தகர்க்கும் பணியில் தந்தை பெரியாரின் போராட்டங்களையும் விளக்குகிறது. வடநாட்டார் சுரண்டல் தடுப்பு, எல்லை பிரச்சினைகள், மொழிவழி தமிழ்நாடு உருவாக்கம் ஆகிய பிரச்சினைகளில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பை விளக்குகிறது.
தமிழர்கள் வீழ்ந்தது ஆரியத்தால்தான்; எழுந்து எழுச்சியும் உரிமையும் பெற்றது திராவிடத்தால் என்பதை ஏராளமான சான்றுகளுடன் நிறுவுகிறது இந்நூல்.
இன்றைய சூழலில் ஆரியர்_திராவிடர் போராட்டத்திற்கு இந்நூல் ஒரு வலிமையான போர்க் கருவியாகும். ஆரியத்தை அலறச் செய்ய, அனைத்து கருத்துப் போராளிகளும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.
– வை.கலையரசன்
——————————————————————————————————————————————————————————-
ஆவணப்படம்
தம்மை வெளிப்படையாக ‘நாத்திகர்கள்’ என்று அறிவித்துக் கொள்வதில் இன்னமும் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. பன்னாட்டளவில் 13 நாடுகளில் நாத்திகர்-களுக்கு மரண தண்டனை என்று இருக்கிறது. அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்-களில் 40 பேர் தங்களை நாத்திகர்கள் என்று வெளிப்படுத்தாமல் உள்ளனர்.
நாத்திகர்களுக்கு நாத்திகர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தாரிடமும் எதிர்ப்பு. மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு. இப்படி நவீனமயமான இன்றைய காலகட்டத்தில்கூட நாத்திகர்களாக இருப்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. இந்த கருத்தை முன் வைத்து, ‘இல்லாத கடவுள் நம்பிக்கைக்கு அப்பால்’ (கடவுள் இல்லாமல் நன்றாக இருக்க முடியுமா?) என்ற தலைப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘மிக்கேல் லாஞ்சர்’ _ இயக்கியுள்ளார்.
இதில் மதத் தலைவர்கள், தொலைக்காட்சி நட்சத்திரங்கள், கடவுள் மீதான நம்பிக்கையில் அய்யத்துடன் இருப்பவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கொண்ட காட்சிப் பதிவு-களை இந்த ஆவணப்படம் உள்ளடக்கி-யுள்ளது.
இது மனித சிந்தனை பரிமாண வளர்ச்சியின் ஒரு அளவு கோலாகவே உள்ளது. இது தொடர்பான முன்னோட்ட (ஜிக்ஷீணீவீறீமீக்ஷீ) காட்சிப் பதிவு சீஷீu ஜிuதீமீ-இல் காணலாம்.
– உடுமலை