அறிவியல்
உலகிலேயே மிக மெல்லிய, நவீன தொழில் நுட்பத்திலான, அதிக விலை உள்ள தொலைக்காட்சிப் பெட்டியை தமிழகத்தில் அறிமுகப்படுத்துகிறது, ஸ்கை வொர்த் நிறுவனம்!
உலகில் அய்ந்தாவது முன்னணி தொலைக்காட்சி பெட்டி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஸ்கைவொர்த் இந்தியா எலக்ட்ரானிக்ஸ், நவீன தொழில்நுட்பத்திலான ஏர் டி.வி.யினை (AIR TV) தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. 55G7200 சீரிசின் ஒரு அங்கமாக வெளிவந்துள்ள இந்த டி.வி.யின் விலை ரூ.1,69,990 ஆகும்.
இந்த டி.வி. அறிமுகம் குறித்து ஸ்கை வொர்த் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், திரு. ஜாக்சன் சாங்க் கூறுகையில்,
“எங்களது இந்த டி.வி சிறந்த தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு, புத்தாக்கம் ஆகிய தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
இந்த புதிய ஏர் டி.வி. விருது பெற்ற ரெட்ஹாட் குழுவால் (Redhot Group) வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது, 7.9 மி.மீட்டர் கனத்துடன் மிக மெல்லியதாக உள்ளது. மேலும் 55 அங்குல திரையை உள்ளடக்கியது. இதில் உள்ள 4கே யு.எச்.டி. (4K Ultra High Definition) அதி நவீன உயர் தொழில்நுட்பமானது, படங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் காட்டக் கூடியது. இதில் படங்களை அச்சு அசலாக _ அதாவது, ஒரு ஜன்னல் வழியாக நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைப் பெற முடியும்.
தனி நபர் வீடியோ ரெக்கார்டரால் வலுவூட்டப்பட்ட 5இன் 1 டிஜிட்டல் வீடியோ ஒளிபரப்பு தொழில்நுட்பம் (DVB-C, DVB-T/T2, DVB-S/S2) இதில் உள்ளதால், வாடிக்கை-யாளர்கள், அவர்கள் விரும்பும் டி.வி.-நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொள்ள முடியும்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில், ஸ்கை வொர்த் நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக ஒருங்கிணைப்பு தொழிற்சாலையை (Assembly unit) உருவாக்கி, எல்.சி.டி. (LCD), எல்.இ.டி. (LED), டி.எல்.இ.டி. (DLED), இ.எல்.இ.டி. (ELED), 3டி (3D), ஸ்மார்ட் டி.வி.க்களை (Smart TV) அறிமுகம் செய்து உள்ளது. வரும் ஆண்டுகளில் 8கே (8ரி), ஓ.எல்.இ.டி. (OLED), ஸ்மார்ட் பிளஸ் (Smart Plus) டி.வி.க்கள், வீட்டு பயன்பாட்டு சாதனங்கள், ஏர்கண்டிஷனர்கள், சலவை எந்திரங்கள், குளிர்சாதன பெட்டிகள் போன்றவற்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
எங்கள் நிறுவனம் டி.வி.க்கள் தயாரிப்பில் உலக அளவில் 5ஆவது மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது’’ என்று தெரிவித்தார்.
ஸ்கைவொர்த்தின் தலைமை அலுவலகம் ஹாங்காங்/சென்ஜனில் உள்ளது.