இணையதளம் மூலம் இயந்திரங்களை பழுதுநீக்க நவீனத் தொழில்நுட்பம் சர்வதேச கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

ஆகஸ்ட் 01-15

இணையதளம் வழியாக இயந்திரங்களில் முன்கூட்டியே பழுதைக் கண்டறிந்து சரி செய்யும் தொழில்நுட்பத்தை அய்.அய்.டி (இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்) இயந்திரப் பிரிவு மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பு சென்னையில் சர்வதேச பொறியியல் இயந்திரங்கள், உதிரிப்பாகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.

அம்பத்தூர் தொழிற்பேட்டை உரிமை-யாளர்கள் சங்கம், தேசிய சிறுதொழில் கழகம், உலக வர்த்தக மய்யம் ஆகியவை இணைந்து, சென்னை வர்த்தக மய்யத்தில் சர்வதேச அளவிலான இயந்திரம், உதிரிபாகங்கள் கண்காட்சியை நடத்தி வருகின்றன.

இதில் சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகளில் உருவாக்கப்பட்ட புதிய படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் அய்.அய்.டி மாணவர்கள் உருவாக்கிய, கணிப்பொறி உதவியுடன் இணையதளம் வழியாக இயந்திரத்தில் ஏற்படும் பழுதை முன்கூட்டியே அறிந்து சரி செய்யும் வகையிலான தொழில்நுட்பம் இடம்பெற்றது. இதைப் பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து வியந்தனர். மேலும் இணையதளம் வழியாக பழுது நீக்கும் தொழில் நுட்பம் குறித்தும் மாணவர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர்.

செலவும் குறைவு: இதுகுறித்து அய்.அய்.டி மாணவர் டி.கே.பாலசரவணன், வழிகாட்டுதல் பேராசிரியர் அருணாசலம் ஆகியோர் கூறியது:

இதுவரையில் இணையதளம் வழியாக இயந்திரங்களை கட்டுப்படுத்தும் தொழில்-நுட்பம் இந்திய அளவில் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இயந்திரங்கள் பழுதானால், அதை உற்பத்தி செய்த நிறுவனங்களில் உருவாக்கப்-பட்ட மென்பொருளைப் பயன்படுத்தியே சரி செய்ய முடியும். இதில், பணியாளர்கள் வருவதில் தாமதம் ஏற்படும் நிலையும் உள்ளது.

இந்தக் கணிப்பொறி உதவியுடன் இணையதளம் வழியாக மென்பொருள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாக இயந்திரங்களின் செயல்பாடுகளைக் கண்டறிய முடியும்.

மேலும், உலகில் எங்கு தொழிற்சாலை இருந்தாலும் ஒரே இடத்திலிருந்து இயந்திரங்-களை கண்காணித்து பழுது நீக்குவதோடு, உற்பத்தி பாதிப்பிலிருந்தும் தடுக்க முடியும். இதைப் பல்வேறு தொழிற்சாலை உரிமையாளர்கள் பார்வையிட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஆலோசனையும் பெற்றுச் சென்றுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *