ஒரு கம்யூனிச நாட்டில் நடக்கும் கயவாளித்தனம்.
சீன தேசத்தில் கல்லூரி மாணவிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் கடன் அளிக்கின்றன. அந்தக் கடனுக்கான உத்தரவாதமாக அவர்கள் மாணவிகளின் அடையாள அட்டை, தொலைப்பேசி எண்கள், பெற்றோர் பெயர், வீட்டு விலாசம், கல்லூரியில் மாணவி என்பதற்கான பதிவுச் சான்றுகள் போன்றவற்றைக் கோருவதுடன் முறையற்ற ஒரு ஆவண உத்தரவாதத்தையும் கோருகின்றனர். அதுதான் அந்த மாணவிகளின் ‘நிர்வாண’ படமாகும். இதற்கு அவர்கள் கூறும் காரணம், மாணவிகள் கடனை திருப்பி செலுத்தாவிடின் இந்த நிர்வாணப் படத்தை விளம்பரம் செய்வோம் என்பதாகும்.
சீனா ஒரு கம்யூனிச நாடு. அந்த நாட்டில் கல்விக் கடன் கொடுக்கும் தனியார் வசூலிக்கும் வட்டியோ வாரத்துக்கு 30%.
ஒரு கம்யூனிச நாட்டில் கொடுமையான வட்டிக்குக் கடன் கொடுத்து வசூலிக்கும் தனியாரும் உலவுகின்றனர் என்பது வியப்பிற்குரியது அல்லவா?
ஒரு மாணவி 76 டாலர்கள் கடன் பெற்றாள். இந்த அதிக வட்டி வீதத்தில் திருப்பி செலுத்த இயலாமையால் மேலும் மேலும் புதுக்கடன்கள் பெற்று பழையதை திருப்பி வந்ததால் இன்று அவளுடைய கடன் 8347 டாலர்களாக உயர்ந்துள்ளது. எனவே, அவளுடைய ‘நிர்வாண’ படம் வெளியாகி விடுமோ என்கிற அச்சத்தில் காவல் துறையில் புகார் கொடுக்க ஆலோசித்துக் கொண்டிருக்கிறாளாம்.
இந்திய ஈட்டிக் கடன்காரர்களை மிக நல்லவர்களாக்கி விடுகிறார்கள் இவர்கள் என்றால் தவறில்லையே!
செய்தி ஆதாரம்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ 16.6.2016
தகவல்: கெ.நா.சாமி