பெரியாரின் ஒளியால் கண் திறந்தவன், பெரியாரின் ஒளியால் பிழைப்பு நடத்துகிறவன், அதைப் பரப்பும் பணியில் உள்ளவன் நான். நாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோமே, தமிழ் மொழிக்காரர்களாக, ஒரே தமிழ் இனமாக…. இந்த உணர்வை பெரியார்தான் உண்டாக்கினார்.
சட்டப்படியான உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால்… தமிழகத்தில் பெரியார் இல்லை என்றால் தமிழன், மனிதனாகி இருக்க முடியாது. அம்பேத்கர் முதல் முறையாகத் தமிழகத்துக்கு வந்தபோது, அவரை எதிர்த்துப் பல இடங்களில், கடும் எதிர்ப்புகள் இருந்தன. அதைக் கேள்விப்பட்ட பெரியார் துடித்துப்போய், அம்பேத்கருக்கு ஆதரவாக நின்றார். எதை மறந்தாலும் தந்தை பெரியாரை மறந்துவிடக்கூடாது.
பேராசிரியர் க.அன்பழகன்,தி.மு.க. பொதுச்செயலாளர்
திருமணம் மிகவும் பெர்சனலான விஷயம். அதை வெளியில் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து.
பசுபதி, நடிகர்
தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் வாய்ப்புகள்பற்றி நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் சாதாரண ஏழை மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டும். அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சட்டப் பணிகள் ஆணையத்தின் அடிப்படைப் பணியாகும். மக்களிடம் அத்தகைய விழிப்புணர்வு ஏற்படும்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் உண்மையான நோக்கம் நிறைவேற முடியும்.
எலிப் தர்மராவ், நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை
கருப்புப் பணம் மீட்புப் பிரச்சினையில் சில மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள் தேவையின்றி மூக்கை நுழைத்துள்ளனர். சமரசம் பேசும் போலி ஆன்மிகவாதிகளை நான் எப்போதும் நம்புவதில்லை. கடவுள் என்ற போர்வையில் கோயில், மடங்களில் கோடிக் கணக்கில் பணம், சொத்து குவித்து வைத்துள்ளனர். அவர்கள் கருப்புப் பணம் மீட்பு பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
பரத்வாஜ்,ஆளுநர், கருநாடகம்
பாராளுமன்றத்தின் ஆய்வுக்குச் செல்ல உள்ள லோக்பால் மசோதா விஷயத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பது பாராளுமன்றத்துக்குச் சவால் விடுவது போன்றதாகும். பாராளுமன்ற ஆட்சி முறைக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. பாராளுமன்றத்தை எதிர்ப்பது நாட்டை எதிர்ப்பதற்குச் சமம்.
சல்மான் குர்ஷித், மத்திய அமைச்சர்
குழந்தைகளை மதிப் பெண்ணை வைத்துத்தான் எடை போடுகிறார்கள். பண்பு களை வைத்து குழந்தைகளை எடைபோடத் தவறிவிடு கிறார்கள். குழந்தைகள் வல்லவர்களாக வருவதைத்தான் பெற்றோர் விரும்புகிறார்கள். நல்லவர்களாக வருவதை விரும்புவதில்லை. பெற்றோர் களே, மற்றவர்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் முன்மாதிரி யாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவர் முன்மாதிரி யாக வரக்கூடாதா? எந்தப் பெற்றோராவது முன்மாதிரியாக இருக்கக்கூடாதா?
வி. ராமசுப்ரமணியன்,நீதிபதி, உயர் நீதிமன்றம், சென்னை