குருதிக்கொடை சில குறிப்புகள்

ஆகஸ்ட் 01-15

¨    பொதுவாக, 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே ரத்தம்
பெறப்படுகிறது. இருப்பினும், சில நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்ய அனுமதி உண்டு.

¨    ரத்ததானம் செய்பவரின் நலனும் மிக முக்கியம் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. ரத்ததானம் பெறும் பை (கவர்) மற்றும் ஊசி தொற்று நீக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. எனவே, தொற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை. பயப்படத் தேவை இல்லை.

¨    பதின் வயதைத் தாண்டிய அனைவருக்கும் சராசரியாக 4 _ -5 லிட்டர் ரத்தம் உடலில் இருக்கிறது. இதில், சராசரியாக 10 சதவிகிதம் அளவில்தான் ரத்தம் எடுக்கப்-படுகிறது. பொதுவாக, உலகம் முழுவதும் ஒரு யூனிட் ரத்தம் (450 மி.லி) எடுக்கப்படும்.

¨    ஆரோக்யமான ஒருவர், ஒவ்வொரு மூன்று நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்தம் மற்றும் அதில் இருந்து எடுக்கப்படும் உப பொருட்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். எனவே, ரத்தத்தின் தேவை எப்போதுமே அதிகம்.

¨    ரத்ததானம் செய்பவர்கள் அதற்கு முந்தைய ஆறு மணி நேரத்தில் மிகவும் அதிகமான உணவுகளைச் சாப்பிடக் கூடாது. மிதமான அளவுகளில் சாப்பிடுவதே சிறந்தது. நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உணவுக்குப் பதிலாக ஜூஸும் குடிக்கலாம்.

¨    ரத்ததானம் செய்யும்போது செலுத்தப்படும் ஊசியால் வலி அதிகம் இருக்காது. முள் குத்திய உணர்வுதான் இருக்கும். அரை மணி நேரத்தில் அந்த வலியும் சரியாகிவிடும்.

¨    ஒரு முறை ரத்ததானம் செய்வதால், உங்களால் நான்கு உயிர்கள் வரை காப்பாற்றப்படுகின்றன. மேலும், இது உங்கள் உடலுக்கும் நல்லது. புது ரத்தம் உடலுக்குள் உருவாவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *