சுசீந்திரம் கோயில் அலங்கார மண்டபத்தில் நான்குபுறமும் கல்தூண்கள் நிலை-நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு தூணுக்கு 24 சிறிய தூண்கள் வீதம் 2 பெரிய தூண்களும் இன்னொரு பக்கம் ஒரு தூணுக்கு 33 சிறிய தூண்கள் வீதம் 2 பெரிய தூண்களும் என மொத்தம் 4 பெரிய தூண்கள் உள்ளன. மொத்தம் 114 சிறிய தூண்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு சிறிய தூணையும் தட்டும்-போது தனித்தனியே ஓசை வருகிறது. இந்த ஓசைகளை கர்நாடக ராகங்களில் அடக்க முடியும் என்கிறார்கள். இந்தத் தூண் இசைக்குப் பின்னணியாக வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் கொண்டு இசைக் கச்சேரியும் நிகழ்த்தியுள்ளனர்.
உலக அதிசயமான இந்தத் தூண்கள் ஒவ்வொன்றையும் கைகளால் தட்டும்போது ஓங்கார நாதம் ஒலிக்கிறது. கல்லும் இசையாகும் என்பது இங்கு நிரூபிக்கப்-பட்டுள்ளது. இந்தத் தூண்களை யாராவது பலமாகத் தட்டி உடைத்துவிடக் கூடாது என்பதற்காகத் தற்போது கம்பி வேலி அமைத்துப் பாதுகாத்து வருகின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.