பதிவுகள்

ஜூலை 16-31
  • முல்லைப் பெரியாற்றில் திட்டமிட்டபடி புதிய அணையைக் கட்டும் பணியை கேரள அரசு மேற்கொள்ளும் என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி. ஜே. ஜோசப் ஜூன் 21 அன்று தெரிவித்துள்ளார்.
  • ஏழைகள் குறைந்த செலவில் கோதுமை, நெல், தினை போன்ற உணவு தானியங்களை வாங்க வகை செய்யும் உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா ஜூன் 22 அன்று நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • லிபிய அதிபர் கடாபியைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஜூன் 27 அன்று வாரன்ட் பிறப்பித்தது.
  • பன்னாட்டு செலாவணி நிதியத்தின் (அய்.எம்.எஃப்) முதல் பெண் தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்டே (55) ஜூன் 28 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • புதுவை சபாநாயகராக சபாபதி ஒருமனதாக ஜூன் 29 அன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்குத் தடை விதிக்க முடியாது என்றும், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் கமிட்டியின் தனி அதிகாரி ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜூன் 29 அன்று உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • சீனாவின் பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கிடையே அதிவேக புல்லட் ரயில் ஜூன் 30 அன்று தொடங்கப்பட்டது.
  • தமிழக அமைச்சரவையில் ஜூன் 3 அன்று சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கப்பட்டு, கதர் மற்றும் கிராமத் தொழில்துறை புதிய அமைச்சராக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
  • தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை முன்வைத்து ஜூலை 4 அன்று காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எல்.எல்.ஏ.க்கள் 87 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
  • தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 4 அன்று நள்ளிரவு முதல் 2 நாள் முழு அடைப்பு வேலைநிறுத்தம் நடைபெற்றது.
  • சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் ஆய்வுக்குழு, பாடத்தில் ஏராளமான மாற்றங்கள் தேவை என்பதால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்தில் ஜூலை 5 அன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
  • கொடநாடு எஸ்டேட்டில் உள்ள பொது வழியை கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை முழுமையாகவும் உறுதியுடனும் செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் ஜூலை 5 அன்று ஆணையிட்டுள்ளது.
  • மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஜூலை 7 அன்று பதவியை ராஜினாமா செய்தார்.
  • அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் தனது கடைசிப் பயணத்தை ஜூலை 8 அன்று தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *