செயலி
CamCard Free – Business Card R
இச்செயலி வணிக அட்டைகளை நம் கைபேசியில் ஸ்கேன் செய்து விரைவாக பதிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ளவர்களுடன் மின் அட்டைகளாக பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.
தொடர்புகள் குறித்த குறிப்புகள் மற்றும் நினைவூட்டல்களையும் சேர்த்துக்கொள்ளும் வசதியையும் உள்ளடக்கியது.
இதன் மூலம்தொடர்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல வசதியாக இருக்கும். உங்களைப் பற்றிய சுயவிவரத்தையும் பிறருக்குச் சொல்ல முடியும்..
நிறுவனத்தைப் பற்றிய தகவல்களை நன்கறிந்து ஒரு நல்ல உரையாடலைத் தொடங்க இது உதவும்.
முகவரிகளை வரைபடமாகப் பார்த்து செல்லவும் முடியும். (Map Navigate).
தொடர்புத் தகவல்களை பல சாதனங்களில் அணுக முடியும்.
உலகம் முழுவதிலும் இருந்து தொடர்புகளை நிர்வகிக்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=com.intsig.BCRLite&hl=en
– அரு.ராமநாதன்
——————————————————————————————————————————————————————————–
நூல் அறிமுகம்
நூல்: ‘கவிஞர் தமிழ்ஒளி காவியங்கள்’
வெளியீடு: கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு,
162/344, இரண்டாவது தளம், தம்பு தெரு, சென்னை-1.
பக்கங்கள்: 680 விலை: ரூ.350/-
முற்போக்கு, பொதுவுடைமை கவிஞர் தமிழ் ஒளியின் ஒன்பது முக்கிய காப்பியங்களின் தொகுப்பு.
முதல் காவியம் கவிஞனின் காதல். நிலைபெற்ற சிலை, வீராயி, மே தினப் பூங்கா, வீதியோ? வீணையோ?, கண்ணப்பன் கிளிகள், கோசல குமரி, புத்தர் பிறந்தார், மாதவி காவியம் போன்ற கவிதை வடிவ சிறுகதைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ‘வீராயி’ என்னும் காவியம் குறிப்பிடத்தக்க ஒரு சோகச் சித்திரமாகும். தீண்டாமை மற்றும் வறுமை ஆகியவற்றின் கொடுமையான நெருக்கடிகளுக்கிடையே வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட பெண்ணை முதன்மை கதை மாந்தராக்கி வடிக்கப்பட்டுள்ளது.
– வை.கலையரசன்
————————————————————————————————————————————————————————–
ஆவணப்படம்
முரடனுக்குள்ளே மூடன்
– பூ. அறிவுமழை செல்பேசி: 90471 97126
ஆறறிவு படைத்த மனிதன் _ எதனையும் பகுத்தறியும் திறன் பெற்ற மனிதன், பல்லி, காகம், கழுதை போன்ற உயிரினங்களின் இயல்பான செயல்பாடுகளைப் பார்த்து மகிழ்ச்சியடைவதும், துன்பப்படுவதும், அதற்கான பரிகாரங்களைத் தேடி கோவில் குளம், சாமியார், ஜோசியர் என்று அலைவதும் சாதாரணமாக நாம் நடைமுறையில் காணும் ஒன்று.
எப்படிப்பட்ட பலசாலியாக இருப்பினும் மூடநம்பிக்கைக்குள் முடங்கிப் போவதைச் சுட்டிக் காட்டியுள்ள படம். விலங்கினங்களுள் உருவத்தால் பெரியதும் பலசாலியானதுமான யானையையே அடக்கி ஆளும் ஒருவன், மூடநம்பிக்கைக்குள் முடங்கி பயந்து ஓடுவதை சில வினாடிகளில் காட்டி சிந்திக்க வைத்துள்ளது.
– உடுமலை வடிவேல்