ஆசிரியர் பதில்கள்

ஜுலை 16-31

திருவள்ளுவரை உள்வாங்கி ஒழிக்க முயலுவோரை முறியடிப்போம்!

கே : சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகிவிட்ட அவல நிலையில் மதுவிலக்கு சாத்தியமா?
– இலட்சுமி சீத்தாபதி, தாம்பரம்

ப : முழு மதுவிலக்கின் அவசரத் தேவையின் முக்கியத்துவத்தை தங்கள் கேள்வியே வலியுறுத்துகிறதே! சாத்தியமா என்ற கேள்விக்கு இடமில்லாமல் சாத்திய-மாக்கப்-பட்டால் ஒழிய விடிவு இல்லை என்று அரசியல் உறுதிப்பாட்டுடன் தமிழக அரசு செயல்பட அனைவரும் வற்புறுத்த வேண்டும்.

கே : மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இலாகா மாற்றத்தால் பயன் உண்டா?
– கெ.நா.சாமி, பட்டாபிராம்

ப : பாத்திரம் மாற்றப்பட்டதால், சரக்கு அதனுள் போடப்படுவது மாறிவிடும் என்று நம்பிவிட முடியாது; காரணம், சமஸ்கிருதத் திணிப்பு ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஆயிற்றே. எனவே, எப்போதும் விழிப்பு நமக்குத் தேவை.

கே : சமஸ்கிருதத் திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டுக்கு உதவும் என்பது மோசடிதானே?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப : இந்தியாவின்   பிளவுக்குத்தான் வழிவகுக்கும். மொழித்திணிப்புதான் ஒரு வங்கதேசத்தை உருவாக்கியது என்ற வரலாற்றுச் சுவர் எழுத்தைப் படித்துப் பாடம் பெற வேண்டாமா?

கே : கருநாடக அரசின் மூடநம்பிக்கை தடுப்புச் சட்டம் தமிழகத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா?
– எதிரொலி, திருப்பூர்

ப : நிச்சயமாக _ இங்கே யாகம், கல்சோறு, மண்சோறு தின்னுவது! மொட்டை போட்டு வேண்டுதல் என்ற ஜோதிட மயமாகியுள்ள ஜெ. ஆட்சிக்கு விடப்பட்ட சவால்தான்!

கே : படுகொலையிலும், மதவெறியைத் தூண்டும் ஆரிய பார்ப்பன நரித்தனம் காந்தியார் கொலை முதல் ஸ்வாதி கொலை வரை தொடர்வது பற்றி…
– குணநிதி, குடந்தை

ப : “புலி தன் புள்ளியை மாற்றினாலும், கருப்பர்(நீக்ரோ) தன் நிறத்தை மாற்றினாலும் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி புத்தியை (சிறீணீஸீஸீவீsலீஸீமீss) விடவே மாட்டார்கள்’’ என்ற டாக்டர் டி.எம்.நாயர் பெருமான் வாசகங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

கே : ஆன்மிகத்தால் அறந்தழைக்கும் என்பது அசல் மோசடிதானே?
– செஞ்சுடர், வேலூர்

ப : இந்நாட்டில் இல்லாத “ஆன்மீகமா?’’ பின் ஏன் இத்தனை கொலை, கொள்ளைகள் நவீனவகை மோசடிகள்? எனவே, ‘ஆன்மீகத்தால் அறம் தழைக்கும்’ என்பதை, ‘அறம் அகலும்’ என்றே மாற்றி எழுதுங்கள்.

கே : தன்னை ஒரு பெண் விரும்பியே ஆகவேண்டும் என்று வெறிகொண்டு தாக்கும் ஆண்களுக்கும்,  களங்கம் கற்பிக்கும் கயவர்களுக்கும், ஜாதிவெறி கொலையாளிகளுக்கும் காலந்தாழ்த்தாது கடுந் தண்டனை தரவேண்டாமா? – எழில்மதி, சென்னை-15

ப : நிச்சயமாக! உடனடியாக வழக்குகள் தனி சிறப்பு நீதிமன்றத்தால் அவ்வப்போது விசாரிக்கப்பட்டு உடனடியாக தீர்ப்பு வழங்கப்படல் வேண்டும்.

கே : திருவள்ளுவரை உள்வாங்கி ஒழிக்க முயலும் மதவாதக் கும்பலின் சூழ்ச்சியை முறியடிக்க தாங்களும், கலைஞரும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் கட்டாயம் வந்துவிட்டதே!
– கதிரவன், ஆத்தூர்

ப : ஆம். அதிலென்ன சந்தேகம். எங்கள் பணிகள் நிச்சயம் மும்முரமாகத் தொடரும்.

கே : மத்திய அமைச்சரவை மாற்றம் உ.பி.தேர்தலின் உள்நோக்கம் உடையதுதானே?
– இல.சங்கத்தமிழன், செங்கை.

ப : செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளைவிட மிகப்பெரிய சாட்சிகள் வேண்டுமா? ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *