முற்றம்

முற்றம் ஜூன் 16-30

நூல்

“பெரியார்’’ மறைந்தார் பெரியார் வாழ்க!

தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
பக்கங்கள்: 328  நன்கொடை: ரூ.210/-
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-07.
தொடர்புக்கு : 044-26618161 / 62 / 63
தந்தை பெரியார் மறைவையொட்டி வெளியான தகவல்கள், தலைவர்கள், அமைப்புகள், ஏடுகளின் இரங்கல் செய்திகள் _ அறிக்கைகள் _ தலையங்கங்கள் ஆகியவை அடங்கிய ஓர் ஆவணத் தொகுப்பு. பல அரிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
– வை.கலையரசன்
—————————————————————————————————————————————————————————

ஆவணப்படம்

எரியும் நினைவுகள்

தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் நிறுவிப் பெருமைப்பட்டனர். தமிழ் மக்களுடைய அறிவுத் தேடலுக்கும், கலாச்சார வளர்ச்சிக்கும், யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் விளங்கிய நூலகத்தைப் பற்றிய ஆவணப்படம் இது. அப்படிப்பட்ட பெருமைமிக்க இந்நூலகம் 1981இல் நிகழ்ந்த திட்டமிட்ட வன்முறையில் முற்றிலுமாக எரிக்கப்பட்டது.

இதனையொட்டி நிகழ்ந்த எழுச்சிகளையும், சோகங்களையும் தாங்கிய வரலாற்றை இந்த ஆவணப்படம் துணிச்சலாக பதிவு செய்துள்ளது. இந்த ஆவணப்படத்தை நிகரி திரைப்பட வட்டம் தயாரித்து வழங்க, சி.சோமிதரன் இயக்கியிருக்கிறார். இதன் கால அளவு 49 நிமிடம். திரும்பத்திரும்ப பார்க்கப்பட வேண்டிய ஆவணப்படம் இது.
– உடுமலை

————————————————————————————————————————————————————————-

முகமது அலிக்கு நமது வீரவணக்கம்

உலகிலே தனக்கு ஈடாக எவரும் இல்லை என்று குத்துச்சண்டையில் சாதித்தவர் முகமது அலி. எதிரிகளை வீழ்த்தி அமெரிக்காவுக்குப் பெருமை சேர்த்தவர் என்பது மட்டுமல்ல, நிறவெறியர்களுக்கு (வெள்ளையர்களுக்கு) எதிராக தனது போராட்டத்தை நிகழ்த்தியவர். இன்றைக்கு பாரக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராகியிருக்கிறார் என்றால், அதற்கு முகமது அலியும் பெருங்காரணம். மார்ட்டின் லூதர்கிங், நீதிபதி துர்குட் மார்ஷல் போலவே அமெரிக்க நிறவெறியை மாற்றிய, மாய்த்த மகத்தான பெருமை முகமது அலிக்கு உண்டு. அது மட்டுமல்ல, கருப்பினத்தவர் என்பதால் தனக்கு உரிமை மறுக்கப்பட்டபோது தனக்குக் கிடைத்த ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். வியட்நாமுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தபோது, இவரது சேவையை அமெரிக்கா நாடியபோது “எனது எதிரிகள் வெள்ளைநிற வெறியர்கள்தான். வியட்நாமியர்களோ, சீனர்களோ, ஜப்பானியர்களோ அல்ல’’ என்று பதில் அளித்து மிகப்பெரிய குத்து ஒன்றை ஆதிக்கவாதிகள்மீது கொடுத்தார். வாழ்க அவர் புகழ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *