கோடைக்கேற்ற குளிர் பானங்கள்

ஜூன் 16-30

இந்தக் கோடை கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்துள்ளது. இந்தக் கோடையை எதிர்கொள்வது எப்படி?

பாரம்பரியமாக வெயில், வெப்பம் என்றாலே மோர் என்பது நமக்குப் பழக்கமான ஒன்று. இந்த வெயிலுக்கான தேவையை ஈடு செய்வதற்கென்றே வேதிப் பாலில் வேதி மோர் தயாரித்து தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் கூவிக் கூவி விற்கத் தயாராகி விடுவார்கள். நமது ஜனநாயகத்தின் சிறப்பம்சமே சாமானியர்களுடன் பெரு நிறுவனங்கள் போட்டிக்கு நிற்பதுதான். சுருக்குப் பையில் முடிகிற ஏழையின் காசைத் தட்டிப் பறிப்பதுதான். எனவே, எளிய பானங்களை உடலுக்குக் கேடின்றிப் பருகுவதே சரியானதாகும்.

சத்தும் சுவையும் மிக்க நவீன மோர்

தேவையானவை: தேங்காய் 1 மூடி, முழு நெல்லிக்காய் 2.

தேங்காயைத் துருவலாகத் துருவியெடுத்து மிக்ஸியில் பெரிய ஜாரில் போடுங்கள். இரண்டு நெல்லிக் காய்களைப் பொடியாக அரிந்து அதனுடன் சேர்த்து, அரை தம்ளர் நீர் விட்டு தேங்காய் பூவை மைய அரையவிடுங்கள்.  மாவாக அரைத்த பின்னர் மேலும் ஒரு ஒன்னரை தம்ளர் நீர் விட்டு ஓரிரு நிமிடங்கள் ஓடவிடுங்கள்.

பின்னர் எடுத்து வடிகட்டி விட்டு மீண்டும் அரவையில் ஒரு தம்ளர் நீர் விட்டு ஓட்டிய பின் மறுபடியும் வடித்து விடலாம். இதனுடன் கருவேப்பிலை, பெருங்காயம், உப்பு கலந்துகொள்ளலாம்.
சில வாரங்களுக்கு தேங்காயை மட்டுமே அல்லது தேங்காய்ப் பாலை மட்டுமே அருந்தினால் எந்தத் தொல்லையும் தராமல் புற்றுநோயை அது குணப்படுத்தி விடும்.

தேங்காய் நெல்லி மோர், இந்தக் கோடையில் உடல் இழந்த நீர்ச்சத்தை உடனடியாக ஈடுசெய்வதுடன், உடலுக்கு மிகுந்த ஊக்கத்தையும் கொடுக்க வல்லது.

ஒரு மூடி தேங்காய், இரண்டு நெல்லிக்காய் என்றால் மூன்று பேரும், ஒரு தேங்காய் நான்கு நெல்லிக்காய் என்றால் ஏழு பேரும் தாராளமாகச் சாப்பிடலாம்.

மிக்ஸி தேவைப்படாத ஆரோக்கியப் பழச்சாறு

தேவையான அளவு தர்பூசணிப் பழத்தைத் துண்டுகளாக வெட்டி, மண் பாத்திரத்தில் போடுங்கள். இந்தப் பழத் துண்டுகளை கீரை கடைவது போன்று மத்தால் கடைந்தால் ஒரு பத்தே கடைசலில் சள சளவென்று பழச்சாறு ஊற்று நீர் போலப் பொங்கி வரும். எடுத்து வடிகட்டி மீண்டும் சற்று நேரம் அதே மண் பாத்திரத்தில் வைத்திருந்து எடுத்துக் குடித்தால்  கோடை வெப்பந் தணிந்து உடல் குளர்ச்சி பெறும்.

தர்பூசணிச் சாற்றுடன் நாம் எதுவுமே சேர்க்கத் தேவையில்லை. நம் ரத்தத்தில் உள்ள பீப்பீஞ் கொலஸ்ட்ரால் போன்ற அவக் கேடுகளையும் நீக்கவல்ல இந்தச் சாறு, ரத்தத்தில் சிவப்பணுக்களின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். தர்பூசணியைப் பழமாகவோ, சாறாகவோ மூன்று, நான்கு நாட்களுக்கு அருந்தி வந்தால் எத்தகைய நோயும் சுவடில்லாமல் மறைந்து விடும்.

இதேபோன்று வெள்ளரிப் பழத்தையும் தோலுரித்துக் கடைந்து, நாட்டுச் சர்க்கரை இட்டுக் குடிக்கலாம். வயிற்றைச் சுத்தப்படுத்த இதைக் காட்டிலும் சிறந்த மலமிளக்கி ஒன்று இல்லவே இல்லை.

இதேபோல் சுமார் 150 கிராம் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு உடன் அரை எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைத்துக் குடித்தால், சிறுநீர், சிறுநீரகம் தொடர்பான சிக்கல்கள் அனைத்திற்கும் பத்தே ரூபாயில் தீர்வு கண்டுவிடலாம். உயிரை முறுக்கிப் பிழியும் டயாலிசிஸ் தொல்லைகள் உங்களுக்கு நேராது.

பேரீச்சம்பழக் கைப்பானம்

நான்கைந்து பேரீச்சம் பழங்களை கொட்டையுடன் போட்டு (இது அவசியம்) சுமார் மூன்று மணி நேரம் ஊற விட வேண்டியது. ஊறின பேரீச்சம் பழங்களை கொட்டைகளுடன் அப்படியே மய்ய பிசைய வேண்டும்.

பேரீச்சம் பழத்தைச் சாறாகக் குடிக்கும் அளவிற்குப் பிசைந்த பின்னர் மிகச் சில சொட்டுக்கள் எலுமிச்சைச் சாறு பிழிந்து விட்டு  சர்க்கரை எதுவும் சேர்க்காமல் அப்படியே சாப்பிடலாம்.

பசுமைப் பானம்

புதினா, கொத்துமல்லித் தழை, கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் ஒரு கைபிடிக்கு எடுத்து, மிக்ஸியில் இட்டு நீர் விட்டு அரைத்து  உடன் அய்ந்தாறு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்தால் உடலில் சட்டென்று புத்துணர்ச்சி பிறக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *