¨ அத்திக்காயை சிறுபருப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டால், கை கால் வலி குணமாகும்.
எலும்புத் தேய்வைச் சரிசெய்ய
¨ வெந்தயத்தைப் பொடிசெய்து கோழி-முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலி குணமாகும்.
ஜிம்முக்குச் செல்கிறீர்களா? புரோட்டீன் பவுடர் சாப்பிடச் சொல்கிறார்களா? இதைப் படியுங்கள்!
¨ அசைவ உணவு உண்பவர்களுக்கு புரோட்டின் பவுடர் தேவையிருக்காது. அது இயற்கையாகவே அவர்களுக்குக் கிடைக்கும்.
கல்லீரல், சிறுநீரகம் பிரச்சினை-யுள்ளவர்கள் புரோட்டீன் பவுடர் சாப்பிடக் கூடாது.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும். புரோட்டீன் பவுடர் சாப்பிடுவோர் 2_3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால் சிறுநீரகக் கல் உருவாகும். இயற்கையான வழியில் புரோட்டீன் பெறுவதே நல்லது. புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டு-மானால் ஸ்போர்ட்ஸ் நியூட்ரீ-ஷீயன் ஆலோசனைப் பெற்று சாப்பிட வேண்டும்.